Neeya naana show: பெருகிவரும் பழியும் வசவும்.. இந்த வார நீயா நானாவில் சுவாரஸ்யம்!
சென்னை: விஜய் டிவியின் சீரியல்களுடன் நிகழ்ச்சிகளும் மாஸ் காட்டி வருகிறது. சேனலின் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை ரூம் போட்டு யோசித்து களமிறக்கி வருகிறது. பல நிகழ்ச்சிகளின் அடுத்தடுத்த சீசன்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
இவற்றில் எல்லாம் சேராமல் தனித்துவமாக நடைபோட்டு வருகிறது நீயா நானா ஷோ. தமிழில் துவங்கப்பட்ட முதல் டாக் ஷோ இதுவாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக பல விஷயங்களை கூறினாலும் முக்கியமான விஷயமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே இவர் ஆங்கராக இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செய்லபட்டு வருகிறார்.

நீயா நானா நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றன. சேனலின் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அடுத்தடுத்த விஷயங்களை களமிறக்கி வரும் விஜய் டிவி, ஒரு நிகழ்ச்சியோ, சீரியலோ ரசிகர்களை கவரவில்லை என்றால் உடனடியாக தூக்க தயங்குவதில்லை. அந்த வகையில், பல சீரியல்கள், நிகழ்ச்சிகள், இருந்த இடம் தெரியாமல் உள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலங்களாக ரசிகர்களை கவர்ந்து விஜய் டிவியின் அடையாளமாக காணப்படுகிறது நீயா நானா ஷோ. தமிழில் விவாத நிகழ்ச்சியாக முதலில் துவங்கப்பட்ட ஷோவாக நீயா நானா காணப்படுகிறது.
ஆங்கர் கோபிநாத்: இந்த ஷோவின் ஸ்பெஷல் அட்ராக்ஷனாக ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறது. நீயா நானா என்றால் கோபிநாத் தான் என்று இந்த நிகழ்ச்சியின் பிரிக்க முடியாத அம்சங்களாக நிகழ்ச்சியும் கோபிநாத்தும் காணப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்படாத தலைப்பே இல்லை என்று கூறுமளவிற்கு ஏராளமான தலைப்புகளை இந்த நிகழ்ச்சி கண்டுள்ளது. ஒரு வாரத்தில் சர்வதேச அளவில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு விவாதித்தால், அடுத்த வாரமே, மிகவும் லைட்டான ஒரு விஷயம் இந்த ஷோவில் விவாதிக்கப்படும். ஒரு விஷயத்தில் இரு தரப்பு நியாயங்கள் இருக்கும் என்பதே இந்த நிகழ்ச்சியின் அடிப்படையாக உள்ளது.
இருதரப்பு நியாயங்கள்: இந்த விஷயத்தை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் கோபிநாத். இரு தரப்பினரின், கோபதாபங்கள், வருத்தங்கள், ஏக்கங்கள், நியாயங்கள் என அனைத்து விஷயங்களையும் அவர்களே பேசும் அளவில் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்லும் கோபிநாத், இந்த வாரமும் சிறப்பான விஷயத்தையே நிகழ்ச்சியின் விவாதக்களமாக கொண்டுள்ளார். கணவன் -மனைவிக்கிடையே வரும் புதுவகை முரண்பாடு மற்றும் பெருகி வரும் பழியும் வசவும் என இந்த வார விவாதத்திற்கான கருப்பொருள், நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வார ப்ரமோ: இதற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பிரமோவில் ஒரே விஷயத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் இருவேறு ரியாக்ஷன்களை கணவர்களும் மனைவிகளும் நடித்தே காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வீட்லயே இருக்கீங்க பிரண்ட்சோட எங்கயாவது வெளியில் போகலாம் இல்ல என்று சில நேரங்களிலும் போய்டுவியா நீ, போய்தான் பாரேன் என்று சில நேரங்களிலும் தன்னுடைய துணையிடம் பேச்சை வாங்குவதாக ஒரு கணவர் நடித்துக் காட்டினார்.
இருவேறு ரியாக்ஷன்கள்: எங்கயாவது வெளியில் போகலாமா என்று ஒரு நேரத்திலும் அந்த கரண்டியை எடுடா என்று ஒரு நேரத்திலும் பேச்சுக்களை வாங்குவதாக மற்றொரு கணவன் நடித்துக் காட்ட, இதைக் கேட்ட கோபிநாத், பயந்து ஓடுவதாகவும் காணப்பட்டது. இதுபோல பெண் ஒருவர், அறிவிருக்கா காமன் சென்ஸ்கூட இல்லை என்று கேள்விக்கு, தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுடுடீ என்பது போன்ற ரியாக்ஷன் வரும் என்று நடித்து காட்டினார். இந்த பிரமோ மூலம் இந்த வார நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications