Neeya naana show: உண்மையை சொன்னா பாவின்னு சொல்வீங்க.. நீயா நானாவில் பேசிய கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் விவாத நிகழ்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து நீயா நானா நிகழ்ச்சி சிறப்பான வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கம் முதலே நிகழ்ச்சியின் ஆங்கராக கோபிநாத் செயல்பட்டு வருவது பார்க்கப்படுகிறது. ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதன் இருவேறு முகங்களை பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி அமைந்து வருகிறது.
நீயா நானா ஷோ இல்லாமல் வாரயிறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையடையாது என்று ரசிகர்கள் கூறும்வகையில் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் பல்வேறு சுவாரஸ்யமான தலைப்புகளும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துவரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரமும் வித்தியாசமான மற்றும் சிறப்பான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அணுகவுள்ளது. இந்த வாரம் உணவு ஸ்பெஷல் நீயா நானாவில் தோசை குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் மற்றும் ஸ்லைட்களை விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சி: விஜய் டிவியில் எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு தனியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சீரியல்களுக்கு நிகரான வரவேற்பை விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த சேனலில் தொடர்ந்து 15 ஆண்டுகளை கடந்து நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக தொடர்ந்து துவக்கம் முதலே ஆங்கரிங் செய்து வரும் கோபிநாத் பார்க்கப்படுகிறார். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதன் இரு வேறு வாதங்களை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு கோபிநாத் மிகச்சிறப்பான பங்களித்து வருகிறார்.
ஆங்கர் கோபிநாத்: இரு தரப்பினர்களின் வாதங்களை வைத்து அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாரசியமாக எடுத்துச் செல்வது நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் சீரியஸான டாபிக்குகள் மற்றும் லேசான விவாதங்கள் என மாற்றி மாற்றி நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை இந்த விவாதங்கள் கவர்ந்து வருகின்றன. தங்களின் வார இறுதி, நீயா நானா ஷோ இல்லாமல் நிறைவு பெறாது என்று பல ரசிகர்கள் கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி அவர்களது நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து வருகிறது.
சுவாரஸ்ய விவாதம்: அந்த வகையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அணுகவுள்ளது சர்வதேச அளவில் ஏராளமான மக்களை கவர்ந்த தோசை குறித்த உணவு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக இந்த வார நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் தோசை குறித்து தங்களது பல்வேறு அனுபவ வாதங்களை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு தரப்பினரும் முன் வைத்தனர். இது குறித்து அடுத்தடுத்த பிரோக்களை தற்போது விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. மேலும் ஸ்லைட் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட முயற்சித்துள்ளது. அந்த வகையில் தென்னகத்திலிருந்து உலகம் முழுக்க சென்று வெற்றி கொடி நாட்டிய சூப்பர் ஸ்டார் உணவு தோசை என்ற வகையில் புதிய ஸ்லைடை விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதே போல அடுத்தடுத்த ப்ரோமோக்களில் தோசை குறித்த தங்களது விவாதங்களை நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பேசினர். அந்த வகையில் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் உணவு தோசை இல்லை என்று ஒரு பங்கேற்பாளர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார். 15 -20 தோசைகளாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தான் முறுகலாக சுட்டு கொடுப்பதாகவும் ஆனால் தான் அப்படி சாப்பிட முடியாது என்றும் எப்படா உட்கார்ந்து சாப்பிடுவோம் என்ற நினைப்பை அந்த தோசை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து எதிர் தரப்பினர் அவர் அதை பாசத்துடன் செய்திருந்தால் இந்த பிரச்சனை வராது என்று கூறியதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.

பாவி என்று சொல்வீர்கள்: தொடர்ந்து உண்மையை சொன்னால் அவரை பாவி என்று சொல்லிவிடுவீர்கள் என்று கோபிநாத் குறிப்பிட்டார். இதை அந்த பெண்மணியும் அமோதித்தார். ஆமாம் சார் உண்மையை சொன்னால் தன்னை பாவி என்று கூறி விடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே மற்றொரு போட்டியாளர் பேசிய ப்ரோமோஷனையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் தன்னுடைய அண்ணன் 15 தோசையாக இருந்தாலும் உட்கார்ந்து அழகா சாப்பிடுவான் என்றும் சில சமயங்களில் தன்னை தோசை ஊற்றித்தர சொல்லி தன்னுடைய அம்மா கூறுவார் என்றும் தனக்கு அது கடுப்பை ஏற்படுத்தும் என்றும் அந்தப் பெண் தெரிவித்தார்.
கோபிநாத் பார்க்க விரும்பிய நபர்: ஆனாலும் போதுமா என்று கேட்கக் கூடாது என்றும் அவர்களாக போதும் என்று சொல்லும் வரை ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய அம்மா தன்னிடம் கூறுவார் என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பேசிய அவரது அம்மா, தன்னுடைய மகன் சமயத்தில் 20 தோசைகள்கூட சாப்பிடுவான் என்று கூற, கோபிநாத், யாருய்யா அவன் எனக்கே அவனை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்று கூற நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பிரமோவே காட்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு சுவாரசியங்கள் அடங்கிய நீயா நானா நிகழ்ச்சி நாளை பகல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











