நீயா நானா ஷோ: என்னோட அப்பாதான் என்னோட பேக்போன்.. நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகன்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து அதிரடி காட்டிவரும் நீயா நானா ஷோவின் இந்த வார நிகழ்ச்சியும் வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான தலைப்புடன் காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் இவர்களுக்கு எங்கிருந்துதான் டாபிக் கிடைக்கிறது ரூம் போட்டு யோசிப்பாங்களா இல்ல 10 பேர் கொண்ட டீம் இருக்கா என்று கேட்குமளவிற்கு இவர்களின் விவாதங்களின் தலைப்புகள் காணப்படுகின்றன.
இந்த வாரம் தவமாய் தவமிருந்து பெற்ற அப்பாக்கள், அவர்களின் அருமையை உணரத் துவங்கியுள்ள மகன்கள் என்பதாய் நீயா நானா ஷோவின் தலைப்பு காணப்பட்டது. அப்பாக்களின் அருமை ஒரு கட்டத்திற்கு மேல் தான் மகன்களுக்கு தெரியவருகிறது. அவ்வாறு தெரியவரும்போது அவர் நம்முடைய அருகாமையில் இல்லாத நிலைகூட ஏற்படலாம் என்பதை இந்த வார நீயா நானா அறிவுறுத்தியது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்குமே சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக சேனலின் பெருமைக்குரிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது நீயா நானா ஷோ. நிகழ்ச்சியின் பேக்போனாக இருந்து வருபவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார். ஒரு விஷயத்தில் இரு தரப்பு நியாயங்களை பேசும் இந்த நிகழ்ச்சியில் அதை வெளிக்கொண்டுவரும் ஜகஜால கில்லாடியாக காணப்படுகிறார் கோபிநாத். கோபிநாத்தையும் நீயா நானா ஷோவையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.
நெகிழ்ச்சியான தலைப்பு: ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், இந்த வாரமும் சிறப்பான மற்றும் நெகிழ்ச்சியான தலைப்புடனேயே நிகழ்ச்சி காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவின் இந்த வார தலைப்பு தவமாய் தவமிருந்து அப்பாக்கள், அப்பாவின் வலியை உணரத் துவங்கியுள்ள மகன்கள் என்பதாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. தன்னுடைய அப்பாவை இழந்துவிடுவேனோ என்ற பயத்தை ஒரு மகன் வெளிப்படுத்தியுள்ளார்.
மகனின் ஆசை: தன்னுடைய அப்பா தன்னுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் தனது ஸ்மோக்கிங், குடி ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்றும் ஒரு மகன் கேட்க, அதை அப்படியே அந்த அப்பாவிற்கு கடத்துகிறார் கோபிநாத். அதை நிறுத்திவிடலாம் என்று அப்பா கூற, இந்த நிமிடம்வரை அவர் தனது பேக்போன்தான என்பதாக அந்த மகன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதனிடையே மற்றொரு மகனோ, தான் மிகப்பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதான் தன்னுடைய அப்பாவின் ஒரே ஆசை என்றும் ஆனால் தன்னுடைய தற்போதைய வளர்ச்சியை பார்க்க அவர் இல்லை என்ற மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்,

அப்பாவின் மனத்தாங்கல்: இதனிடையே தங்களின் மனத்தாங்கல்களையும் அப்பாக்கள் வெளிப்படுத்தியதை அடுத்தடுத்த பிரமோவில் பார்க்க முடிந்தது. தனக்கு மாதம் குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக கூறிய மகன், 20 தேதி ஆன நிலையிலும் அதை தராமல் இருப்பதை அப்பா சுட்டிக் காட்ட நேரில் சந்திக்கும்போது இருக்கும் ரிலேஷன்ஷிப் போனில் இல்லை என்று தன்னுடைய மனக்குமுறலை மகன் வெளிப்படுத்துகிறார். 68 வயதுவரை தான் எந்த பணத்தையும் கேட்டதில்லை என்று தந்தையும் தன்னுடைய வேதனையை பகிர்வதாக பிரமோவில் காணப்பட்டது.

குறையாத கலகலப்பு: இதனிடையே கலகலப்பையும் இந்த ஷோ பதிவு செய்துள்ளது. அடுத்த பிரமோவில், தான் லவ் மேரேஜ் செய்துக் கொண்டால் தன்னுடைய அப்பா தன்னை ஏற்றுக் கொள்வாரா என்ற கோரிக்கையை மறைமுகமாக ஒரு மகன் வெளிப்படுத்துகிறார். இதற்கு பதிலளித்த அந்த அப்பா கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார், உடனடியாக கோபிநாத், அவர்களது ஜாதியில் இருந்தால் ஓகேவா என்று கேள்வி எழுப்ப, அப்போதும் தனக்கு பிடித்தால்தான் ஒப்புக் கொள்வேன் என்று அந்த அப்பா விடாப்பிடியாக பேசியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து இறங்கி வந்த அந்த மகன், தான் அரேஞ்ச்ட் மேரேஜே செய்துக் கொள்கிறேன் என்று தடாலடியாக கூறியதை பார்க்க முடிந்தது.



Click it and Unblock the Notifications











