Neeya naana show: மாமா இல்லன்னா ஜீஜுன்னு கூப்பிடுவேன்.. அக்கா புருஷனை இப்படியெல்லாமா கூப்பிடுவாங்க!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோவின் இன்றைய இந்த வார எபிசோட்டிற்கான பிரமோக்களை அடுத்தடுத்து விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தியுள்ளார் கோபிநாத். புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களை வம்பிழுக்கும் மச்சினிகள் என்பதாக இந்த வார எபிசோட்டின் விவாதம் காணப்பட்டது.
இதில் மாற்றி மாற்றி வித்தியாசமான கேள்விகளுடன் அடுத்தடுத்த பங்கேற்பாளர்களை எதிர்கொண்டார் கோபிநாத். மிகவும் சுவாரசியமான மற்றும் கலகலப்பான தலைப்புடன் இந்த வாரத்திற்கான விவாதம் நடந்துள்ளது. நிகழ்ச்சியில் மச்சினிகள் இணைந்து ஆங்கர் கோபிநாத்திற்கு ஆரத்தி எடுத்ததையும் அவர் பதிலுக்கு ஆரத்தி தட்டில் ரூபாய் நோட்டுகளை போட்டதையும் பார்க்க முடிந்தது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வாரயிறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியை விருப்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியை மிகவும் சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறார் கோபிநாத். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புடன் நகைச்சுவை இழையோட இந்த நிகழ்ச்சியை பார்ப்பது ரசிகர்களுக்கு பேரானந்தமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் இதுவரை இல்லாத வகையில் கலகலப்பான டைட்டிலுடன் நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் ஆங்கர் கோபிநாத்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதற்கான அடுத்தடுத்த ப்ரோமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர் மற்றும் அவர்களை வம்பிழுக்கும் மச்சினிகள் என்பதாக இந்த நிகழ்ச்சியின் தலைப்பு காணப்பட்டது. இதில் புதிதாக திருமணமான தன்னுடைய அக்காவின் கணவரை எப்படி அழைப்பீர்கள் என்று கோபிநாத் கேள்வி எழுப்ப, மாமா அல்லது ஜிஜூ என்று தான் அழைப்பேன் என்று ஒரு இளம்பெண் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத், இப்படி உங்கள் அக்கா தானே கூப்பிட வேண்டும் என்று கேட்பதாக இந்த ப்ரொமோவில் காணப்படுகிறது.
அத்தானுக்கு என்ன தண்டனை: அத்தானுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கோபிநாத் கேட்க, அக்காவை விட்டு அடிக்க வைக்க வேண்டும், தோப்புக்கரணம் போட வைக்க வேண்டும், கடிக்க வேண்டும் என்று தங்களது ஆசைகளை மச்சினிகள் வெளிப்படுத்த, அதை அவர்களின் அக்காக்கள் செய்து முடிக்கின்றனர். இதையடுத்து என்னம்மா பொழுதுபோக்காக ஒருவரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கோபிநாத் கேட்பதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது.
கோபிநாத்திற்கு ஆரத்தி: முன்னதாக மச்சினிக்கள் சேர்ந்து கோபிநாத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றதையும் அவர் ஆரத்தி தட்டில் ரூபாய் நோட்டுகளை போட்டதையும் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவிலிருந்து உள்ளூரில் அனைவரையும் கவரும் விஷயங்கள் வரையிலும் குடும்ப உறவுகளையும் இணைத்து பல தலைப்புகளில் விவாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த வாரம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத தலைப்பு காணப்படுகிறது. இதை கண்டிப்பாக கோபிநாத், மிகவும் சிறப்பாகவே செய்திருப்பார் என்பது இந்த பிரமோ மூலம் வெளிப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











