தாமதமாக பிள்ளை பெற்றவர்கள்.. எரிச்சலாகும் பிள்ளைகள்.. கோபிநாத் கேட்ட கேள்வி.. இந்த வார நீயா நானா ஷோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து பல ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கிறது நீயா நானா ஷோ. ஒவ்வொரு வாரமும் இந்த ஷோவில் வித்தியாசமான தலைப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் ஆங்கர் கோபிநாத். அந்த வகையில் இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் ரசிகர்களை கவர நீயா நானா ஷோ தயாராகி வருகிறது.

இதற்கான அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தற்போது வெளியிட்டு வருகிறது. நீண்ட நாள் காத்திருந்து குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும் கைக்குள் வைத்து வளர்ப்பதால் சுதந்திரம் பறிபோனதாக அவர்களது குழந்தைகளின் குற்றச்சாட்டு என இந்த வார ஷோவின் தலைப்பு காணப்படுகிறது. மிகவும் சுவாரசியமான தலைப்புடன் இந்த வார நிகழ்ச்சியை கோபிநாத் நடத்தியுள்ளார்.

televisiion neeya naana show anchor gopinath

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ கடந்த பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த ஷோவின் anchor கோபிநாத்திற்கும் நீயா நானா ஷோ மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது. அதற்கேற்றாற்போல இந்த ஷோவிற்கு தன்னுடைய மிகச் சிறப்பான ஆங்கரிங்கை கொடுத்து வருகிறார் கோபிநாத். இவரை தவிர இந்த ஷோவை வேறு யாராலும் இப்படி சிறப்பாக நடத்தி விட முடியாது என்பதாக பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் ரசிகர்களை சந்தித்து வரும் இந்த ஷோ இந்த வாரமும் சிறப்பான மற்றும் யூனிக்கான தலைப்புடன் ரசிகர்களை சந்திக்க உள்ளது.

இந்த வார ஷோ: இதற்கான அடுத்தடுத்த பிரமோகளை தற்போது விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. நீண்ட நாட்கள் காத்திருந்து குழந்தைகளை பெறும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கைகளில் ஏந்தும்போது பெறும் பரவசம் மற்றும் அக்கறை என்ற பெயரில் குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்களா என்பதாக இந்த வார நீயா நானா ஷோ காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் பிரமோவில் எட்டு வருடங்கள் கழித்து தன்னுடைய குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அவனை கையில் வாங்கும் போது எட்டு வருடங்கள் தான் பட்ட துன்பங்கள் அனைத்து போய் விட்டதாக ஒரு அம்மா கூறுகிறார்.

வித்தியாசமான தலைப்பு: மற்றொரு அம்மாவோ, தாய்மை என்ற சந்தோஷத்தை தன்னுடைய மகள் கொடுத்ததாகவும் அதை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கண்கலங்க பேசுகிறார். அதை கேட்கும் அவரது மகளும் கண்கலங்கி அழுததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தாமதமாக குழந்தை பெற்றதால் தங்களை தெருவில் சென்று விளையாட கூட தன்னுடைய அம்மா அனுமதித்தது இல்லை என்று ஒரு மகன் தன்னுடைய குறையை கொட்டித் தீர்க்கிறார். மற்றொருவரோ, அது எப்படி தெருவிற்கு செல்லலாம், உள்ளே வந்து விளையாடு என்று தன்னுடைய அம்மா எப்போதும் கூறுவார் என்றும் உள்ளே எப்படி விளையாட முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: இந்நிலையில் பேசிய அவரது அம்மா, தங்கள் வீட்டின் முன்பு அனைத்து குழந்தைகளும் டெண்ட் போட்டுக்கூட விளையாடலாம் என்று கூற, இதுகுறித்து கோபிநாத் கேள்வி எழுப்பியத்தையும் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் பார்க்க முடிந்தது. ஒரு விஷயத்தின் இருதரப்பு நியாயங்களை இரு தரப்பினர் பேசும் நிலையில் அதில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை குறிப்பிட்டு கோபிநாத் கேள்வி எழுப்புவதை அடுத்தடுத்து நீயா நானா ஷோவில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த வாரமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் டைட்டில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X