Neeya Naana show: உன்னை நம்பி கார் ஷோரூம் வச்சோம்.. முடிஞ்சுது கதை.. நீயா நானாவில் கோபிநாத் பேச்சு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக நீயா நானா தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஷோவின் மெயின் அட்ராக்ஷனாக கோபிநாத் காணப்படுகிறார். நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே அவர் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார். இருதரப்பு நியாயங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த வாரமும் சிறப்பான விவாதத்துடன் இந்த நிகழ்ச்சி களமிறங்கவுள்ளது. ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா ஷோவின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வேலைக்கு போகாமல் சாக்குபோக்கு சொல்லும் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என இரு தரப்பு நியாயங்களை இந்த நிகழ்ச்சி பதிவு செய்ய உள்ளது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் முக்கியமான ஒன்றாக ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். ஒரு டாபிக்கை எடுத்துக்கொண்டு அதன் இருதரப்பு நியாயங்களை அவர் சிறப்பாக கொண்டு செல்வதும் அவரவர் தரப்பில் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஷோவை தொடர்ந்து அடுத்தடுத்த சேனல்களில் டாக் ஷோக்கள் துவங்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் நீயா நானா இடத்தை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை தொடர்ந்து இந்த ஷோ, நிருபித்து வருகிறது.
சிறப்பான தலைப்பு: இந்த வாரமும் இந்த ஷோ சிறப்பான தலைப்புடனேயே ரசிகர்களை கவர காத்திருக்கிறது. இதற்கான அடுத்தடுத்து ப்ரோமோக்களை விஜய் டிவி தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வேலைக்கு செல்லாமல் சாக்குபோக்கு சொல்லும் இளைஞர்கள் மற்றும் எப்போ சொந்த காலில் நிற்கப் போகிறாய் என்று கேட்கும் பெற்றோர்கள் என இந்த வாரம் விவாதத்திற்கான டாபிக் காணப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய மகன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றதாகவும் ஆனால் அந்த நிறுவனம் போல தனக்கு சொந்தமாக வைத்துக் கொடுக்க கேட்டதாகவும் ஒரு அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கார் ஷோரூம் கேட்ட இளைஞர்: அதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தால் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அவருக்கு பதிலளித்து பேசிய கோபிநாத், இளைஞர்கள் டிசைன் டிசைனாக யோசிப்பதாக தெரிவித்தார். தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அதனால் சொந்தமாக நாமே அந்த நிறுவனத்தை வைத்துவிடலாம் என்று யோசிப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அந்த இளைஞர், தனக்கு சிறுவயதிலிருந்தே கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் என்றும் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே தான் கார் ஓட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
கோபிநாத் அளித்த பதில்: அவருக்கு பதிலளித்த கோபிநாத், அவரை நம்பி கார் ஷோரூம் வைத்தால் கதை முடிந்தது என்றும் ஷோரூமில் இருக்கும் அனைத்து கார்களையும் அவரே எடுத்து ஓட்டி திரிவார் என்றும் பேசினார். இதனால் நிகழ்ச்சி சுவாரசியமாக காணப்பட்டது. இதனிடையே மற்றொரு பிரமோவில் கிரிக்கெட் என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து சுறுசுறுப்பாக தன்னுடைய மகன் கிளம்புவார் என்று ஒரு அப்பா தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார். தன்னுடைய மகன் ஆன்லைனில் கேம் விளையாடுவதாகவும் வேலைக்கு செல்ல சிறிதும் மெனக்கிடவில்லை என்றும் மற்றொருவர் குறிப்பிட்டார். இந்த வேலையை விடிய விடிய செய்வார் என்றும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். இவ்வாறு இந்த வார நீயா நானா ஷோவின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.


Click it and Unblock the Notifications











