Neeya naana show: திருமணத்தில் மணமகள் அதிகம் demand செய்கிறாரா.. சுவாரஸ்யமான தலைப்பில் நீயா நானா ஷோ!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமான டாக் ஷோவாக அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்க உள்ளது. இதற்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

திருமணத்திற்கு பெண்கள் அதிகமான டிமாண்ட் செய்கிறார்களா என்பது குறித்து மணமகன் வீட்டார் பேசியதையும் அவர்களது சில குற்றச்சாட்டுகளுக்கு இளம்பெண்கள் விளக்கம் அளித்ததையும் பார்க்க முடிந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகலில் நீயா நானா ஷோவை விஜய் டிவி ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Television Neeya naana show Vijay TV

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் தனித்தன்மையுடன் கூடிய தலைப்புகளுடன் ரசிகர்களை இந்த ஷோ சந்தித்து வருகிறது. ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு இரண்டு தரப்பு நியாயங்கள் இருக்கும் என்பதே இந்த ஷோவின் சாராம்சமாக உள்ளது. மேலும் இந்த ஷோவின் தனித்தன்மைக்கு இதன் தொகுப்பாளர் கோபிநாத் முக்கியமான காரணமாக அமைந்து வருகிறார். இந்த வாரமும் நீயா நானா ஷோவின் விவாதத்திற்கான தலைப்பு மிக சிறப்பாக காணப்பட்டது.

மணமகள் அதிகம் டிமாண்ட் செய்கிறாரா?: இதில் திருமணத்திற்காக மணமகள் அதிகமாக டிமாண்ட் செய்கிறாரா என்பது குறித்து இந்த வார தலைப்பு பேசியுள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் மணமகள் அதிகமாக டிமாண்ட் செய்வதாக மணமகன் குடும்பத்தினர் கூறியதையும் அதற்கு இளம்பெண்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தையும் அடுத்தடுத்து பிரமோக்களில் பார்க்க முடிந்தது. இதில் ஒவ்வொரு ப்ரொபஷனலை சேர்ந்த மணமகன்கள் பொம்மைகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் எந்த மணமகனை இளம்பெண்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்தும் பார்க்கப்பட்டது.

மவுசு குறைந்த டாக்டர் புரொபஷன்: இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால் காலங்காலமாக டாக்டர் மாப்பிள்ளைகளுக்கு அதிக டிமாண்ட் இருந்த நிலையில், டாக்டர் ப்ரொபஷன் பொம்மைக்கு ஒரே ஒரு மாலை மட்டுமே விழுந்ததை பார்க்க முடிந்தது. மீடியா உள்ளிட்ட மற்ற ப்ரொபஷன்களை பெண்கள் அதிகமாக தன்னுடைய வருங்கால கணவருக்கான சாய்ஸாக தேர்ந்தெடுத்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் மணப்பெண்கள் மிக அதிகமாக தங்களது டிமாண்ட்களை வைப்பதாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர். மணமகனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா, மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார்களா என்பது உள்ளிட்ட பல விஷயங்களை பார்த்துவிட்டே பெண்கள் தங்களது வருங்கால துணையை தேர்ந்தெடுப்பதாக மணமகன் வீட்டார் கூறினர்.

வாரந்தோறும் நீயா நானா: இவ்வாறாக இந்த வார நீயா நானா ஷோ மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பகலில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நீயா நானா நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் சூழலில், பல ஆண்டுகளாக பல வீடுகளில் நீயா நானா இல்லாத சண்டேவை பார்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இருதரப்பு நியாயங்களையும் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் சிறப்பாக எடுத்துச் செல்வதும் இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷனுக்கு முக்கியமான காரணமாக அமைந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X