Neeya naana show: இளம் தேவதைகளை கொண்டாட தவறிய அப்பாக்கள்.. மகள்களின் விருப்பங்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஒவ்வொரு வாரமும் தனித்துவமான தலைப்புகளால் கவனம் ஈர்த்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக ஆங்கர் கோபிநாத் இருக்கிறார்.
கோபிநாத் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஒரு விஷயத்தின் இருதரப்பு நியாயங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்க உள்ளது. இதற்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றன.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது/ ஒவ்வொரு வார இறுதியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஷோ ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷோவாக தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் இந்த ஷோவின் வித்தியாசமான தலைப்புகள் ரசிகர்களுக்கு விருந்தாக மாறி வருகிறது. ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதன் இருதரப்பு நியாயத்தையும் பேசுவதே இந்த ஷோவின் தனித்துவமாக காணப்படுகிறது.
ஆங்கர் கோபிநாத்: இது மட்டும் அல்லாமல் இந்த ஷோவின் மற்றொரு முக்கியமான தனித்துவமான விஷயமாக கோபிநாத் காணப்படுகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கியமான டாப்பிக்கை எடுத்துக் கொண்டு அதன் இரு தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத்தின் பல பரிணாமங்களை பார்க்கலாம். சில நேரம் கடுப்பாவார், சில நேரம் குஷியாவார், சில நேரம் அட்வைஸ் கொடுப்பார், சில நேரம் அட்வைஸை பெற்றுக் கொள்வார் இப்படி பல விஷயங்களை அவர் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த வார ஷோ பிரமோ: அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் ரசிகர்களும் பயணிக்க அவர் வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார். இதன் இடையே இந்த வாரத்திற்கான நீயா நானா ஷோவின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வீட்டு இளவரசிகளை தாலாட்ட தவறிய அப்பாக்கள் குறித்து இந்த வார ஷோ அலசி ஆராய்கிறது. தன்னுடைய அப்பா தன்னுடன் சேர்ந்து உட்கார்ந்து பேச வேண்டும், நீண்ட தூர பயணம் வரவேண்டும் என்று இளம்பெண்கள் தங்களது விருப்பங்களை இந்த வார ஷோவில் வெளிப்படுத்தியதை தற்போது வெளியாகியுள்ள பிரமோக்களின்மூலம் பார்க்க முடிந்தது.
கோபிநாத் கேள்வி: இதன் முதல் பிரமோவில் மகள்களின் இந்த விருப்பம் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். மகள்களுடன் இணைந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதில் அப்பாக்களை எது தடுக்கிறது என்று கேள்வியை எழுப்ப, இதைக் கேட்கும் அப்பாக்கள் கலகலப்பு என்றால் என்ன என்று பதிலுக்கு கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதிலளிக்கும் மகள்கள், அப்பாக்கள் தங்களுடன் தோழமையுடன் பழக வேண்டும் என்று கூறுவதாக இந்த பிரமோ நிறைவடைந்துள்ளது. மொத்தத்தில் இந்த வார நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைதயும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











