Neeya Naana :பிரசவ வலியை நினைத்தாலே ஒரு குழந்தை போதும்னு இருக்கு.. நீயா நானாவில் சுவாரஸ்யம்!

சென்னை: விஜய் டிவியின் விவாத நிகழ்ச்சியான நீயா நானா தொடர்ந்து வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அடுத்தடுத்த சிறப்பான விவாதங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் எந்த தலைப்பில் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

Vijay TVs Neeya Naana this weeks show promo released and impressed fans 19-08-2023

இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் களமிறங்கியுள்ளது நீயா நானா ஷோ. நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வருகிறார் கோபிநாத்.

சுவாரஸ்யமான தலைப்பில் இந்த வார நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியாக உள்ளது நீயா நானா ஷோ. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யம் குறையாத தலைப்புகளில் இருதரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் துவக்கம் முதல் இறுதிவரை கொண்டு செல்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கோபிநாத். இவர் இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே தொடர்ந்து ஆங்கராக இருந்து வருவதும் நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி தொடாத டாப்பிக்கே இல்லை என்று கூறுமளவில் நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்பான பல தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வாரமும் நிகழ்ச்சியில் சிறப்பான தலைப்புடனேயே களமிறங்கியுள்ளார் கோபிநாத். தங்களுக்கு ஒரு குழந்தை போதும் என்பவர்கள் மற்றும் ஒரு குழந்தை போக்கு சரியில்லை என்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு குழந்தை போதும் என்றவர்கள் பல விஷயங்களை முன் வைத்தனர்.

நிதி நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்தது என்றும் ஒரு பெண் கூற, 4 முதல் 5 மணி நேரங்கள் பிரசவ வலியால் துடித்ததை நினைத்து தான் ஒரு குழந்தையே போதும் என்று முடிவெடுத்ததாக மற்றொரு பெண் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மற்றொரு பெண்ணோ, ஒரு குழந்தையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டார்.

Vijay TVs Neeya Naana this weeks show promo released and impressed fans 19-08-2023

தன்னுடைய முதல் குழந்தை பிறந்தபோது பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில் தனக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தனக்கு முழுமையான ஓய்வை கொடுத்துவிட்டு கணவர் இரவு முழுவதும் குழந்தையை பார்த்துக் கொண்டதாக ஒரு பெண் குறிப்பிட்டார். தொடர்ந்து மறுநாள் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு குழந்தையை பார்த்துக் கொண்டதாகவும் அந்த கஷ்டத்தை அவருக்கு மீண்டும் கொடுக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவரது கணவர், தன்னுடைய மனைவி பிரசவ வலி மற்றும் ஆபரேஷன் வலி என இரண்டையும் தாங்கிக் கொண்டதால் தான் அட்லீஸ்ட் குழந்தையையாவது பார்த்துக் கொண்டு, மனைவிக்கு ஓய்வு கொடுக்க நினைத்ததாக கூறினார். இதைக் கேட்ட கோபிநாத், இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக லவ் செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். இதைக்கேட்ட சக போட்டியாளர்களும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு குழந்தை போதும் என்பதே இந்த தம்பதியின் முடிவு.

Vijay TVs Neeya Naana this weeks show promo released and impressed fans 19-08-2023

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X