என் குழந்தையை யூடியூப் பார்த்துதான் நான் வளர்த்தேன்.. குழந்தை வளர்ப்பு குறித்து பேசிய நீயா நானா ஷோ!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோ கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான ஷோவாக சேனலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் இந்த ஷோ ரசிகர்களை சந்தித்து வருகிறது. நீயா நானா ஷோ ரசிகர்களின் வாழ்க்கையின் அங்கமாக அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

நீயா நானா ஷோவில் இருதரப்பினரின் கருத்துக்களை சிறப்பாக வழி நடத்தி செல்வது ஆங்கர் கோபிநாத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதிகமான டிஆர்பிஐ பெற்று வரும் நீயா நானா ஷோவின் இந்த வார தலைப்பும் சிறப்பாகவே அமைந்துள்ளது. காரசார மற்றும் ஆதங்கத்தை கொட்டும் ஷோவாக இந்த நிகழ்ச்சி காணப்பட்டது.

Television Neeya naana show Vijay TV
நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா டாக் ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி ஷோவாக இருந்து வருகிறது. இந்த ஷோவின் அட்ராக்ஷன்களில் முக்கியமானதாக ஆங்கர் கோபிநாத் பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் இந்த ஷோவை ஆங்கர் கோபிநாத் வழிநடத்தி சென்றுள்ளார். நாளைய தினம் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

டென்ஷனான வாழ்க்கை: குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கை டென்ஷன் ஆயிடுச்சு என்று ஒரு தரப்பினரும் இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயங்களைகூட பெரிதாக்குவதாக மற்றொரு தரப்பினரும் பேசியதை பார்க்க முடிந்தது. இந்த ஷோவிற்காக வெளியிடப்பட்டுள்ள பிரமோவில் குழந்தை வளர்ப்பில் சொல்ல முடியாத எரிச்சல் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்ப, தாத்தா வெளியில் கூட்டிக் கொண்டு போவதையும் யானை சவாரி செய்வதையும் தான்தான் செய்வதாக ஒரு இளம் தாய் குறை கொட்டிக் கொள்கிறார். தொடர்ந்து சோறு ஊட்டுவதையும் கழுவி விடுவதையும் தான்தான் செய்வதாக அவர் கூறியதை பார்க்க முடிந்தது.

பிரைவசிக்கு முக்கியத்துவம்: இதற்கு பதிலளித்த எதிர்தரப்பினர், மாமியார், மாமனாரை உடன் வைத்துக் கொள்ளாத நிலை தற்போது காணப்படுவதாகவும் தன்னுடைய பிரைவசிக்கு பங்கம் வராத சூழலில் வாழவே பெண்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய மற்றொரு இளம் தாய், தான் தன்னுடைய குழந்தையை பெரும்பாலும் யூடியூபை பார்த்துதான் வளர்த்ததாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த தலைப்பில் இருவேறு தரப்பினரும் அடுத்தடுத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிலையில், குழந்தை தூங்கும் போது தாய்மார்களும் தூங்கிக் கொள்ளுமாறு சொல்கிறார்கள் ஆனால் அந்த குழந்தை தூங்குவதே இல்லை என்று ஒரு தாய் குறை கொட்டிக்கொண்டார்.


சுவாரஸ்யமான தலைப்பு: அதை கேட்ட எதிர் தரப்பினர் குழந்தை கண்டிப்பாக ஒரு நாளில் சில மணி நேரங்கள் தூங்க தான் செய்யும், ஆனால் குழந்தை தூங்கும் நேரத்தில் தானும் தூங்காமல் அந்த தாய் உட்கார்ந்து கொண்டு மொபைலை நோண்டிக் கொண்டிருப்பார் என்பதாக கூறினார். மற்றொருவரோ குழந்தை வளர்ப்பை தற்காலத்திய இளம் தாய்மார்கள் வேலையாக பார்ப்பதாக தெரிவித்தார். இவ்வாறாக சுவாரசியங்கள் நிறைந்ததாக இந்த வார நீயா நானா ஷோவின் தலைப்பு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X