Pandian stores 2 serial: அவசரப்பட்டு பேசி காரியத்தை கெடுத்து விடாதீங்க.. தங்கமயிலால் பொங்கிய ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் உள்ள செந்தில் மற்றும் மீனா இருவரும் கடற்கரையில் என்ஜாய் செய்ததை தன்னுடைய மாமனார் பாண்டியனிடம் போட்டுக் கொடுக்கிறார் தங்கமயில்.

இதனால் பாண்டியன் தங்கமயிலால் மட்டுமே தனக்கு வீட்டில் நடக்கும் விஷயங்கள் தெரிய வருவதாக கூறி கோமதியை திட்டித் தீர்க்கிறார். இதனால் கோமதி, ராஜி உள்ளிட்ட அனைவரும் தங்கமயில் மீது ஆத்திரமடைகின்றனர். இவ்வாறாக இந்த வார பிரமோவின் அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே தங்கமயிலின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பாண்டியன் மற்றும் கோமதி இடையில் புகைச்சல் காணப்படுகிறது. தங்கமயிலையும் கோமதியையும் கம்பேர் செய்து அடுத்தடுத்து பாண்டியன் பேசி வருகிறார். இதனால் தங்கமயிலிடம் மட்டுமில்லாமல் பாண்டியனிடமும் கோமதி கோபப்படுவதாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில் சென்னையிலிருந்து மீனா தானும் செந்திலும் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஜிக்கு அனுப்பி வைக்கிறார்.

செந்தில் -மீனா புகைப்படம்: இந்த புகைப்படத்தை ராஜி, கோமதி, அரசி உள்ளிட்டவர்கள் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இதை பார்க்கும் தங்கமயில் மிகவும் நன்றாக இருப்பதாக கூறுகிறார். உடனே அடுத்த காட்சியில் வீட்டிற்கு வரும் பாண்டியன் செந்தில் எதுவும் போன் செய்தானா அவனது மொபைல் சுவிட்ச் ஆஃப்பில் உள்ளது என்று கூறுவதாக காணப்பட்டது. இதற்கு மற்றவர்கள் யாரும் பதில் சொல்வதற்கு முன்னதாக வழக்கம் போல முந்திக் கொள்ளும் தங்கமயில், போன் எதுவும் செய்யவில்லை ஆனால் மீனா தான் செந்திலுடன் கடற்கரையில் இருக்கும்படியான புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறுகிறார்.

கோமதியிடம் பாண்டியன் ஆத்திரம்: இதைக் கேட்கும் பாண்டியன் மிகுந்த கடுப்புடன் இந்த வீட்டில் தங்கமயில் தவிர வேறு யாரும் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை தன்னிடம் கூறுவதில்லை என்று கோபத்துடன் பேசுகிறார். இதை கேட்கும் கோமதி தான் மறந்து விட்டதாக பாண்டியனிடம் சொல்கிறார். ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தையும் தற்போது செந்தில் கடற்கரையில் சுற்றி திரியும் விஷயத்தையும் வேண்டுமென்றே கோமதி சொல்லாமல் மறந்ததாகவும் தங்கமையிலால் தான் அந்த வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தனக்கு தெரிய வருவதாகவும் கூறுகிறார். இதனால் கோமதி உள்ளிட்ட அனைவரும் கடுப்புக்கு உள்ளாகின்றனர்.

ராஜி கோபம்: இந்நிலையில் பாண்டியன் சென்றவுடன் சமையலறையில் தங்க மயிலிடம் ராஜி மிகவும் கோபத்துடன் பேசுவதாக காணப்படுகிறது. நல்லது செய்வதாக நினைத்து தேவையில்லாமல் அனைத்து விஷயங்களிலும் அவர் முந்திக்கொண்டு பேசுவதால் வீட்டில் அதிகமான பிரச்சனைகள் வருவதாக ராஜி கோபத்துடன் தங்கமயிலிடம் பேசுகிறார். அவசரப்பட்டு பேசி காரியத்தை கெடுத்து விட வேண்டாம் என்றும் கூறுகிறார். இதைக் கேட்கும் தங்கமயில் அழுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்பட்டது. ஏறக்குறைய வில்லியாகவே மாறியுள்ளார் தங்கமயில். ராஜி ட்யூஷன் எடுத்தால் தன்னையும் டியூஷன் எடுக்க சொல்வாள் என்பதற்காக அந்த டியூஷனை தன்னுடைய அம்மாவின் ஆலோசனைப்படி எடுக்க விடாமல் செய்கிறார்.

அடுத்தடுத்த சதித்திட்டம்: தொடர்ந்து கதிர் தன்னிடம் இந்த விஷயம் குறித்து பேசியதையும் தன்னுடைய கணவன் சரவணன் மற்றும் மாமனார் பாண்டியன் இருவரிடமும் போட்டுக் கொடுக்கிறார். இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளில் இந்த பிரச்சனை பூதாகரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக செந்தில் மற்றும் மீனா விவகாரத்தையும் தங்கமயில் போட்டுக் கொடுத்துள்ள நிலையில் சென்னையிலிருந்து வீடு திரும்பும் அவர்களும் அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்று தெரிய வருகிறது. தான் படிக்காதவர் என்பதை மறைப்பதற்காக ராஜி டியூஷனை குலைத்திருந்தார் தங்கமயில். இந்நிலையில் சரவணனைவிட அவர் வயதில் மூத்தவர் என்ற விஷயம் தெரியவரும் நிலையில் என்ன மாதிரியான சமாளிப்புகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X