Pandian stores 2: இப்படி ஒரு கல்யாணம் பண்ணினதுக்கு செத்திருக்கலாம்.. கோமதியிடம் சண்டையிட்ட ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரின் அடுத்தடுத்த கட்ட எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்களும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்து வருகின்றன. இந்த வார பிரமோவும் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான எக்ஸ்பீரியன்சை கொடுக்கும்வகையில் அமைந்துள்ளன. பாண்டியன், கோமதி, செந்தில், கதிர், சரவணன் மற்றும் செந்தில் -கதிரின் மனைவிகள் என அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை கொடுத்து வருகின்றனர்.

கோமதியின் அண்ணன்களாக முத்துவேல், சக்திவேல் கேரக்டர்களில் நடித்துள்ளவர்களும் சிறப்பான எபிசோட் நகர்வுக்கு காரணமாக அமைந்துள்ளனர். இந்த சீரியலில் தன்னுடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகும் பாண்டியன், தொடர்ந்து தன்னுடைய மூத்த மகன் சரவணனின் திருமணமும் இதனால் பாதிக்கப்படுவதை நினைத்து தொடர்ந்து கலங்குகிறார். தன்னுடைய மனவேதனையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். சரவணனுக்கு உடலளவில் பிரச்சினை இருப்பதாக பெண் வீட்டார் கூறுவதை ஏற்க முடியாமல் செயலிழந்து காணப்படுகிறார்.

Vijay TV s Pandian stores 2 serial this week latest promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கோமதியின் காதல் திருமணத்தால் பாதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக அவரை ஏற்காமல் உள்ள முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோர் பாண்டியன் மற்றும் கோமதியிடம் தொடர்ந்து பகை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முத்துவேலின் மகள் ராஜி, திருமணத்தின்போது வீட்டைவிட்டு தன்னுடைய காதலனுடன் வெளியேறி அவரால் ஏமாற்றப்படுகிறார். தொடர்ந்து அவரை மீட்கும் கோமதி, தன்னுடைய மகனுக்கு ராஜியை திருமணம் செய்து வைக்கிறார்.

28 ஆண்டு குடும்ப பகை: இதனால் முத்துவேல் மற்றும் சக்திவேலின் கோபம் அதிகரிக்கிறது. இதற்கு காரணம் பாண்டியன்தான் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவரை பழிவாங்கும் நோக்கத்தில் மூத்த மகன் சரவணனின் திருமணத்தை தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். மீனா தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவரின் மகளை சரவணனுக்காக பேசி முடிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பெண் பார்க்க சென்ற நிலையில், அந்த திருமணத்தையும் குலைக்கிறார் சக்திவேல்.

ராஜியிடம் ஆத்திரப்பட்ட கதிர்: சரவணனுக்கு உடலில் ஏதோ பிரச்சினை இருப்பதாக அவர் வத்திவைக்க, பெண்ணின் தந்தை இந்த திருமணத்தை நிறுத்துகிறார். இதனிடையே, சரவணனின் திருமணம் தடைபட்டதற்கு மீனாதான் காரணம் என செந்தில் அவரிடம் ஆத்திரம் கொள்கிறார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தான் ராஜியை திருமணம் செய்துக் கொண்டதுதான் காரணம் என ஆத்திரப்படுகிறார் கதிர். இதையடுத்து அவரிடம் கடுப்பாக பேசிய ராஜி, தன்னை கல்யாணம் செய்துக் கொள்ளும்படி தான் கெஞ்சினேனா அல்லது அவரது அம்மாவிடம் கெஞ்சினேனா என்று கேள்வி எழுப்புவதாக பிரமோவில் காணப்படுகிறது.


அதிரடி காட்டிய ராஜி: நடந்த கல்யாணம் எப்படி கதிருக்கு பிடிக்கவில்லையோ அதேபோலத்தான் தனக்கும் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். தொடர்ந்து சத்தம் கேட்டு கதவை தட்டும் கோமதியின் கையை பிடித்து உள்ளே இழுக்கும் ராஜி, தங்களுக்கு யார் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டது என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்புகிறார். ராஜி சாகப்போவதாக கூறியதை கேட்டு அந்த முயற்சியில் இருந்து அவரை மீட்கும் வகையில் தான் அந்த திருமணத்தை செய்து வைத்ததாக கோமதி கூறுகிறார். தொடர்ந்து இந்தக் கல்யாணத்தை செய்துக் கொண்டு தினம்தினம் சாவதை காட்டிலும் அப்போதே செத்து தொலைந்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வம்பிழுத்த ராஜி: இதையடுத்து கதிரின் அழுக்கு சட்டைகளை எடுத்து அவர் துவைக்க எடுத்து செல்வதாகவும் கதிர் அவர் அதையெல்லாம் எடுக்கக்கூடாது என்று கூறுவதாகவும் பிரமோவில் காணப்படுகிறது. இதனால் அவரது சட்டைகள் அனைத்தையும் கலைத்துப்போடும் ராஜி, கதிரே அவற்றையெல்லாம் சரி செய்துக் கொள்ளட்டும் என்றும் அழிச்சாட்டியம் செய்கிறார். தொடர்ந்து அழுகையாகவே பார்த்துக் கொண்டிருந்த ராஜியின் இந்த மாற்றம் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. திருமணத்திற்கு முன்பிருந்த பழைய ராஜியை பார்க்க முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X