Pandian stores 2 serial: கண்ணனை தேடி அலையும் ராஜி.. ராஜியை தேடி அலையும் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். குடும்ப கதைக்களத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்துவரும் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து நிறைவான காட்சி அமைப்புகளை கொடுத்து வருகிறது. ராஜியின் எதிர்காலத்தை காப்பதற்காகவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை மீட்டெடுக்கும் வகையிலும் தன்னுடைய மகன் கதிரின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார் கோமதி. இது தெரியாமல் அவரது அண்ணன்கள் தொடர்ந்து விரோதம் பாராட்டி வருகின்றனர்.
தன்னுடைய வாழ்க்கை தாறுமாறாக மாறவும் தன்னுடைய தந்தை உள்ளிட்ட மற்றவர்களின் வெறுப்பை சந்திக்கவும் தன்னுடைய திருமணம் மற்றும் அதற்கு ராஜிதான் காரணம் என்று நினைக்கும் கதிர், தொடர்ந்து அவரை திட்டித் தீர்க்கிறார். காதலித்து திருமணம் செய்த இவர்கள் ஏன் தொடர்ந்து சண்டையிடுகின்றனர் என்ற சந்தேகம் பழனிச்சாமிக்கு வருகிறது. இதை அவர் கேள்வி கேட்கும்போதெல்லாம் மீனா, கோமதி உள்ளிட்டவர்கள் மழுப்பலான பதில்களுடன் அவரை சமாதானப்படுத்துகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கதிரின் மாற்றம் அவரை சந்தேகப்பட வைக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தத் தொடர் அடுத்தடுத்து டிஆர்பியில் சிறப்பான புள்ளிகளை பெற்று சேனலின் முதல் 5 இடங்களில் இடம்பெற்று வருகிறது. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரின் முதல் சீசனும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை இந்த சீரியலின் கதை மாந்தர்களாக களமிறக்கி தொடர்ந்து சீரியலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சீரியல் இயக்குநர்.
அப்பா -மகன்களின் பாசம்: முந்தைய சீசனில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். தொடர்ந்து இந்த சீசனில் அதிகமாக மெனக்கெடல் இல்லாமல் கதையை அப்பா -மகன்களின் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார். ஆனால் அடுத்தடுத்து விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் கதைக்களத்தையும் காட்சி அமைப்புகளையும் கொடுத்து வருகிறார். அப்பா பாண்டியன், அம்மா கோமதி, அவர்களின் மூன்று மகன்கள், இரு மகள்கள் எதிர்வீட்டிலேயே இருக்கும் சொந்தங்களின் பகை இவ்வாறாக இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.
கதிர் -ராஜி திருமணம்: திருமணத்தின்போது வீட்டைவிட்டு வெளியேறி தன்னுடைய காதலனால் கைவிடப்படுகிறார் ராஜி. ராஜியை திருச்செந்தூரில் சந்திக்கும் கோமதி, அவரது வாழ்க்கையை காப்பாற்றும் வகையிலும் தற்கொலைக்கு முயன்ற தன்னுடைய அண்ணனின் கௌவரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் தன்னுடைய மகனின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார். தன்னுடைய மகன் கதிருக்கும் ராஜிக்கும் சிறிதும் விருப்பமில்லாமல் திருமணத்தை நடத்தி வைக்கிறார். முன்னதாக குடும்பப்பகை காரணமாக எலியும் பூனையுமாக இருந்த இருவரும் திருமணத்திற்கு பிறகும் அதையே தொடர்கின்றனர்.

கண்ணனை தேடி அலையும் ராஜி: தன்னுடைய வாழ்க்கை சீர்குலைய ராஜிதான் காரணம் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் கதிர். இதனிடையே ராஜியின் அண்ணன் குமரன், கதிரை ஆளை வைத்து அடிக்கிறார். இதுவும் அவரது வெறுப்பிற்கு காரணமாக அமைகிறது. இதனிடையே இந்த வாரத்திற்கான பிரமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கதிர் தன்னால் பழி சுமந்ததுடன், தன்னுடைய நகை, மற்றும் பணத்தையும் எடுத்து அனைவரையும் ஏமாற்றியதாக அவர்மீது விழுந்த பழியை துடைக்க களத்தில் இறங்குகிறார் ராஜி. இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி கண்ணனை தேடும் படலத்தில் ஈடுபடுகிறார். அவரை காணாமல் பரிதவிக்கும் பாண்டியன் குடும்பத்தினர் அவரை தேடி அலைவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











