Pandian stores 2 serial: ஹனிமூனில் இப்படி ஒரு சோகமா.. மருத்துவமனையில் பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வரும் பாண்டியன் உழைப்பின்மூலம் மிகப்பெரிய இடத்தை அடைந்தவர். தன்னுடைய மூன்று மகன்கள் மற்றும் மகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துவந்த நிலையில், தான் காதலித்த மீனாவை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வருகிறார் செந்தில். முதலில் இந்த திருமணத்தை எதிர்த்தாலும் பாண்டியன் உள்பட வீட்டினர் அனைவரும் மீனாவை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் மீனாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஒப்புக் கொள்ளாமல் ஆத்திரத்தை தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து மீனா மீதும் செந்தில் மீதும் கோபப்படுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மீனா, செந்திலுடன் சில தினங்கள் எங்காவது வெளியூருக்கு செல்லும் தன்னுடைய விருப்பத்தை மிகுந்த தயக்கத்துடன் தன்னுடைய மாமனார் பாண்டியனிடம் சொல்கிறார். இதை கேட்கும் பாண்டியன் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல சம்மதிக்கிறார். ஹனிமூனுக்கு சம்மதம் கிடைக்காத நிலையில், குடும்பத்துடனாவது மீனாவின் விருப்பம் நிறைவேறியதே என்று செந்தில் மகிழ்ச்சியடைகிறார்.

Vijay TVs Pandian stores 2 serial new episode and Promos

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரும் மாறியுள்ளது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசன் 5 ஆண்டுகளை கடந்து சிறப்பான டிஆர்பியுடன் நடைபோட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எண்ட் கார்ட் போட்டது. இந்நிலையில் உடனடியாக இரண்டாவது சீசனும் துவங்கப்பட்டது. இந்த சீசனில் அப்பா -மகன்களின் உறவை மையமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சிரியலில் பாண்டியனின் முதல் மகன் சரவணன், தன்னுடைய அப்பாவிற்காக தன்னுடைய காதலையே தியாகம் செய்கிறார்.

மீனாவை திருமணம் செய்யும் செந்தில்: ஆனால் இரண்டாவது மகன் செந்தில், தான் காதலித்த மீனாவையே திருமணம் செய்கிறார். இந்த திருமணத்தை முதலில் எதிர்த்தாலும் மீனாவின் அன்பான நடவடிக்கைகளால் அவரை பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்கின்றனர். ஆனாலும் பாண்டியனின் அடுத்தடுத்த கறாரான நடவடிக்கைகளால், 200 ரூபாய்க்காக தன்னுடைய கணவன் செந்தில் திட்டு வாங்குவது போன்ற சம்பவங்களால் மீனா மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார். மேலும் தன்னுடைய பெற்றோரும் தன்னை ஏற்காத சூழலில் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதையடுத்து செந்திலுடன் ஹனிமூன் செல்லும் தன்னுடைய விருப்பத்தை மாமனார் பாண்டியனிடம் சொல்கிறார்.

செந்தில் -மீனாவை ஏற்கும் பாண்டியன்: இதை ஏற்கும் பாண்டியன், குடும்பத்தினருடன் கொடைக்கானல் சுற்றுலா செல்ல சம்மதிக்கிறார். முதலில் தயங்கினாலும் இதற்கு மீனாவும் ஓகே சொல்ல, குடும்பத்தினர் தற்போது கொடைக்கானல் வந்துள்ளனர். அங்கு வந்தும் காசை பார்த்து பார்த்து செலவழிக்கும் பாண்டியன், ஹோட்டலில் உணவிற்கு அதிகமான காசு வசூலிக்கப்படுவதை பார்த்துவிட்டு குடும்பத்தினருக்கு ரோட்டோர கடையில் இரவு உணவை வாங்கிக் கொடுக்கிறார். தொடர்ந்து, உழைப்பவர்களுக்கு எங்கு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகும் என்றும் கூறுகிறார். ஆனால் மற்றவர்களுக்கு அந்த உணவு ஏற்றுக் கொள்ள அவருக்கே அது வினையாக முடிகிறது.

ஹனிமூனில் சோகம்: ஃபுட் பாய்சன் ஆகி அவர் வாந்தியெடுத்து இரவெல்லாம் கஷ்டப்பட, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இதனால் குடும்பத்துடன் ஹனிமூனுக்கு வந்த செந்தில் -மீனா மேலும் பரிதவிப்பதாக காட்டப்படுகிறது. இதனிடையே அவர்களின் ஹனிமூனை தாங்கள் அனைவரும் சொதப்பிவிட்டதாக கூறும் கதிர், அவர்களை தனியாக வெளியில் சென்றுவருமாறு கூறுகிறார். அப்பாவை தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூற, அவர்கள் ஒருவழியாக தனியாக சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். ஆனால் கூடவே செந்திலின் தங்கையும் இணைந்துக் கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

தனியாக செல்லும் ஜோடி: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில், செந்தில் மற்றும் மீனா தனியாக கொடைக்கானல் சாலையில் நடந்து செல்வதாக காட்டப்பட்டுள்ளது. ஹனிமூன் வந்த இடத்தில் தன்னுடைய அப்பாவிற்கு இப்படி ஆனதற்கு செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து தன்னுடைய அப்பாவிற்கு இப்படி ஆனால் தான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அதுபோலத்தான் தன்னுடைய மாமனார் பாண்டியனும் என்று மீனா கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X