பழனிவேலை வீட்டை விட்டு வெளியேற்றும் பாண்டியன்.. சோகத்தில் பாண்டியன் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பழனிவேலுக்கு திருமண ஏற்பாடுகளை பாண்டியன் செய்த நிலையில், அவரது நிச்சயதார்த்தத்தை அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் குலைக்கின்றனர்.
இதனால் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதையொட்டி பழனிவேலின் அம்மா, அண்ணிகளும் மிகவும் மனவேதனை கொள்கின்றனர். முத்துவேல், சக்திவேலின் இந்த குணம் அனைவரையும் குலைக்கின்றது. இதுகுறித்து பாண்டியன் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் சண்டையும் ஏற்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்து ரசிக்களை வெகுவாக கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேலுக்கு திருமண ஏற்பாடுகளை பாண்டியன் நடத்தி முடிக்க, அதை பொறுக்க முடியாமல் பழனிவேலின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்தி வேல் இருவரும் குலைக்கின்றனர். பெண் வீட்டாரிடம் போய் தன்னுடைய தம்பி ஒன்றுமில்லாதவனாக இருப்பதாக அவர்கள் கூற, பெண் வீட்டாரும் நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துகின்றனர். குடும்பத்துடன் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் பழனிவேலின் நிச்சயதார்த்தத்திற்காக கோயிலில் காத்திருக்க பெண்வீட்டார் அங்கு வராமல் இருக்கின்றனர்.
பழனிவேல் நிச்சயதார்த்தம்: இதுகுறித்து பாண்டியன் குடும்பத்தினர் நேரில் சென்று விசாரிக்கும் நிலையில், பழனிவேலின் அண்ணன்கள் செய்த சதியால் நிச்சயதார்த்தம் நின்றது தெரியவருகிறது. இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடக்காததால் அவமானத்தில் பழனிவேல் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கூனி குறுகுவதாக காணப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய அண்ணன்களே குலைத்ததை கேள்விப்படும் பழனிவேல், அனைவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு வாசலிலேயே காத்திருக்கும் முத்துவேல், சக்திவேல் அவர்களை மேலும் அவமானப்படுத்துகின்றனர்.
வலுக்கும் சண்டை: பழனிவேலின் திருமணத்தை நிறுத்துவது தங்களது நோக்கமில்லை என்றும் பாண்டியன் அதை ஏற்பாடு செய்ததுதான் தங்களை இப்படி நடந்துக் கொள்ள தூண்டியதாகவும் முத்துவேல் கூறுகிறார். இதையடுத்து கோமதி மற்றும் பாண்டியன் உள்ளிட்டவர்கள் அனைவரும் அவர்களின் இந்த செயலை கேள்விக் கேட்கின்றனர். அவர்களும் மாற்றி மாற்றி பேச சண்டை வலுக்கிறது. இதனிடையே பழனிவேலை சமாதானப்படுத்த முடியாமல் குடும்பத்தினர் அனைவரும் முழி பிதுங்குகின்றனர். ஆனால் அவரோ தன்னுடைய சோகத்தை மறைத்தபடி, கடைக்கு கிளம்புகிறார்.
புதிய ப்ரோமோ: இந்நிலையில் கடைக்கு வரும் கதிர், பழனிவேலை வெளியில் அழைத்து செல்ல கூப்பிடுகிறார். பாண்டியனும் அவரை மட்டுமில்லாமல் செந்திலையும் சேர்த்து அனுப்பி வைப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது. முன்னதாக பழனிவேலின் திருமணம் நின்றது குறித்து கடைக்கு வந்தவர்கள் அனைவரும் துக்கம் விசாரிப்பதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில், பழனிவேலை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு அவரது அம்மா பாண்டியனிடம் அழுதபடி கேட்பதாக காணப்படுகிறது. அவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை பாண்டியன் புரிந்துக் கொள்கிறார்.
பாண்டியனின் அதிரடி முடிவு: தான் பழனிவேலுக்கு திருமணம் நடத்த முற்பட்டால் அவரது அண்ணன்கள் தொடர்ந்து அதை நிறுத்துவார்கள் என்பதை புரிந்துக் கொள்ளும் பாண்டியன், பழனிவேலை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆனால் அவரோ, தான் எது நடந்தாலும் தன்னுடைய அக்கா வீட்டை விட்டு போக மாட்டேன் என்று கூறுகிறார். இதனிடையே, பழனிவேல் மறுநாள் காலைக்குள் வீட்டைவிட்டு போகவேண்டும் என்று பாண்டியன் கண்டிப்பாக கூறுவதாக இந்த பிரோமோவில் காணப்படுகிறது. இதையடுத்து மிகுந்த சோகத்துடன் பழனிவேல் வீட்டை விட்டு கிளம்புகிறார். உடன் குடும்பத்தினர் அனைவரும் அழுதபடி இருப்பதாக இந்த பிரமோவில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











