Pandian stores serial: ஒரு கிலோ அன்பு.. ஒரு கிலோ கண்டிப்பு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புதிய ப்ரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த வாரத்தில் நிறைவடைந்துள்ள்ளது.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது.

முதல் சீசனில் மூர்த்தியாக அண்ணன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்டாலின், இந்த சீசனில் அப்பாவாக களமிறங்கியுள்ளார்.

Vijay TVs Pandian stores 2 serial new promo released and impressed fans

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் நிறைவு பெற்றுள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை முன்னிருத்தி 5 ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் தொடர்ந்தது. எந்த சூழ்நிலையிலும் தங்களது ஒற்றுமையை விட்டுக் கொடுக்காத அண்ணன் -தம்பிகளின் பாசம், பிரச்சினைகள், சவால்கள் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் கடந்த வாரத்தில் சுபம் போட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் அண்ணன் மூர்த்தியாக நடித்திருந்த ஸ்டாலின் இந்த சீசனில் கண்டிப்பு மிக்க தந்தையாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் மகள் என வளர்ந்த பிள்ளைகள் இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தன்னுடைய தந்தைக்கு மகன்கள் உதவுவதாக காட்டப்பட்டுள்ளது.

Vijay TVs Pandian stores 2 serial new promo released and impressed fans

செந்தில் -மீனா காதல்: இதில் செந்தில், மீனாவை காதலிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. மீனாவின் குடும்பத்தில் அனைவரும் அரசு வேலைகளில் இருப்பதாகவும் அரசு வேலையில் இருப்பவருக்கே தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்றும் அவரது பெற்றோர் முடிவு செய்துள்ள நிலையில், செந்தில் பாண்டியன் ஸ்டோர்சில் வேலை செய்து வருகிறார். மேலும் தன்னுடைய தந்தைக்கு பயந்தவராக, அவரது கட்டுப்பாட்டில் செயல்படுபவராக காட்டப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இதனிடையே இந்தத் தொடரை ப்ரமோட் செய்யும் வகையில் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் அண்ணன் -தம்பிகள் மற்றும் அவரது மாமா உள்ளிட்டவர்கள் இணைந்து புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளனர். ஒரு கிலோ அன்பு, ஒரு கிலோ கண்டிப்பு, கால் கிலோ பொறுப்பு காதல், வீம்பு என அனைத்தும் கிடைக்கும் ஒரே ஸ்தாபனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதாக இந்தப் ப்ரமோவில் காணப்படுகிறது.

Vijay TVs Pandian stores 2 serial new promo released and impressed fans

புதிய ப்ரமோ: மேலும் தங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்பதாக இந்தப் ப்ரமோவில் காணப்படுகிறது. இந்தத் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மற்றும் நிரோஷாவின் அண்ணன்களான முத்துவேல் குடும்பத்தினர் இடையில் குடும்பத் தகராறு நிலவுவதாக காட்டப்படுகிறது. இதனால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதாகவும் காட்டப்படுகிறது. ஸ்டாலின் மற்றும் நிரோஷாவின் திருமணத்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் காட்டப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X