மகளை நினைத்து ஏங்கும் அப்பத்தா.. வீட்டைவிட்டு வெளியேற்றிய சக்திவேல்.. பளார் விட்ட முத்துவேல்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சண்டே ஸ்பெஷல் சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பானது. தன்னுடைய மகள் கோமதி குறித்து தன்னுடைய ஏக்கத்தையும் ஆதங்கத்தை இன்றைய எபிசோடில் வெளிப்படுத்துகிறார் அப்பத்தா. தன்னுடைய மகள் செய்த ஒரு சிறிய தவறு காரணமாக 30 ஆண்டுகளாக அவளிடம் பேச முடியாமல் தான் இருப்பதாகவும் மனம் புழுங்குகிறார்.
தன்னுடைய காலம் அவள் இல்லாமல் முடிந்து விடுமோ என்றும் அப்பத்தா அடுத்தடுத்து கேள்விகளை தன்னுடைய மகன் பழனிவேலிடம் கேட்கிறார். தொடர்ந்து இது குறித்து ஆத்திரப்படும் சக்தி வேலிடமும் அவர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதாக இன்றைய சிறப்பு எபிசோடில் காணப்பட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய சண்டே ஸ்பெஷல் சிறப்பு எபிசோட் மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை 2 மணிநேரம் எபிசோடாக ஒளிபரப்பான நிலையில் இன்றைய தினம் பல சிறப்பான காட்சிகளை காண முடிந்தது. தன்னுடைய மகன் கதிருக்காக பாண்டியனிடம் தொடர்ந்து சண்டையிடுகிறார் கோமதி. தன்னுடைய மகன் வார நாட்களில் புட் டெலிவரியையும் வாரயிறுதி நாட்களில் ஆக்டிங் டிரைவர், இதனிடையே கல்லூரி படிப்பு என அடுத்தடுத்து நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடுவதை பார்க்கும் கோமதி இதுகுறித்து பாண்டியனிடம் தொடர்ந்து சண்டையிடுகிறார்.
https://www.youtube.com/watch?v=X-baIlJmBr4
கோமதி மகிழ்ச்சி: இதையடுத்து கதிர் வார நாட்களில் ஃபுட் டெலிவரி செய்யவும் வார இறுதியில் தன்னுடைய கடைக்கு வந்து வேலை செய்யவும் பாண்டியன் கூறுகிறார். கடையில் வேலை செய்வதற்கான சம்பளத்தை தான் கொடுப்பதாகவும் பாண்டியன் கூறுகிறார். இதனால் தான் கதிருக்காக பேசி சிறப்பான விஷயத்தை செய்துள்ளதாக கோமதி மகிழ்கிறார். தன்னுடைய மருமகள்களிடமும் இது குறித்து சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால் ராஜியோ இந்த விஷயத்திற்கு கண்டிப்பாக கதிர் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று மீனாவிடம் புலம்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
கோமதி புலம்பல்: இதற்கு ஏற்ப மறுநாள் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கதிரிடம் கோமதி இது குறித்து பேசுகிறார். கண்டிப்பாக கடைக்கு வேலைக்கு செல்ல மாட்டேன் என்று கதிர் கூறுவதாக இந்த சிறப்பு எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து அங்கு வரும் பாண்டியன் கதிரிடம் சண்டையிட, தான் கண்டிப்பாக கடைக்கு வந்து வேலை செய்ய மாட்டேன் என்றும் எனக்கு தன்னுடைய தன்மானம் தான் முக்கியம் என்றும் கதிர் கூறுவதாக அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருந்தன. இந்நிலையில் தான் நினைத்தது போல இல்லாமல் கதிர் கடைக்கு வேலைக்கு செல்ல மறுத்தது குறித்து மீனாவிடம் ராஜியிடமும் புலம்புகிறார். தன்னுடைய கணவனுக்கும் மகனுக்கும் இடையில் தான் மத்தளமாக மாறிவிட்டதாகவும் கோமதி கூறுகிறார்.
அப்பத்தாவிடம் சக்திவேல் ஆத்திரம்: இந்நிலையில் முந்தைய நாள் கோமதி பாண்டியனிடம் கத்தி பேசியது குறித்து பழனிவேலிடம் அவரது அம்மா கேட்கிறார். தான் இறப்பதற்கு முன்னதாக தன்னுடைய மகளிடம் தான் பேசி சிரிக்க வேண்டும் என்றும் தன் கையால் சமைத்து போட வேண்டும் என்றும் அவர் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். அவர் அழுகையுடன் பேசுவதை பார்த்தபடி அங்குவரும் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் அவரது அழுகையை பார்த்து கோபப்படுகின்றனர். தொடர்ந்து ஆத்திரத்துடன் சக்திவேல் பேச, தன்னுடைய மகளை பார்க்க தான் போவேன் என்று அப்பத்தா கூறுவதாக சிறப்பு எபிசோடில் காணப்பட்டது.
வீட்டை விட்டு துரத்தப்படும் அப்பத்தா: இதைக் கேட்டு ஆத்திரமடையும் சக்திவேல், தன்னுடைய அம்மாவை கையை பிடித்து வெளியில் தரதரவென இழுத்து சென்று துரத்துகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கவலையுடன் பின்தொடர்கின்றனர். கடைக்கு கிளம்பும் பாண்டியன், கோமதி உள்ளிட்ட அனைவரும் இதனை பார்த்து பரிதவிக்கின்றனர். தன்னுடைய அம்மாவை சக்திவேல் அவமதிப்பதை பார்த்து கோமதி மனம் புழுங்குகிறார். இதையடுதது கோபத்துடன் வெளியில் வரும் முத்துவேல், சக்திவேலை கண்டித்து, தன்னுடைய அம்மாவை வீட்டிற்குள் செல்லுமாறு கூறுவதாக இன்றைய சிறப்பு எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











