Pandian stores 2: இரண்டாவது முறையும் நின்ற பழனிவேலின் திருமணம்.. அண்ணன்கள் கொடுத்த அதிர்ச்சி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சீரியலில் 40 வயதை நெருங்கிய நிலையிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் பழனிவேலுக்கு பாண்டியன் திருமணம் நிச்சயிக்கும் நிலையில் திருமணத்தை கௌரவ குறைச்சலாக அவரது அண்ணன்கள் நினைக்கின்றனர்.
முதல் முறை திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண் வீட்டாரிடம் சென்று இல்லாததை சொல்லி திருமணத்தை நிறுத்துகின்றனர் முத்துவேல் மற்றும் சக்திவேல். இதனால் பழனிவேல் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினருடம் உடைகின்றனர். இதனிடையே இரண்டாவது முறையாக அவருக்கு நிச்சயிக்கப்படும் திருமணமும் நின்று போகிறது. இதன் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்து எபிசோடுகள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் பழனிவேல் திருமணத்தை ஒட்டிய காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. முன்னதாக அவருக்கு திருமண ஏற்பாடுகளை பாண்டியன் செய்த நிலையில் அவர் இதை செய்வதை கௌரவக் குறைச்சலாக நினைக்கும் பழனிவேலின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பெண் வீட்டாரிடம் சென்று இல்லாததை சொல்லி திருமணத்தை நிறுத்துகின்றனர். அந்த திருமணம் நிச்சயத்துடன் நின்ற நிலையில் பழனிவேலுடன் இணைந்து பாண்டியன் குடும்பத்தினரும் உடைகின்றனர்.
பழனிவேல் திருமணம்: தன்னுடைய மகன்கள் தான் இந்த திருமணம் நின்றதற்கு காரணம் என்று தெரியவரும் நிலையில் பழனிவேலின் அம்மா மற்றும் அண்ணிகளும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இதனிடையே இரண்டாவது முறையாக அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கொண்டாட்டங்களை பாண்டியன் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த திருமணத்தை நிறுத்தி விடாதீர்கள் என்று தன்னுடைய அண்ணன்களிடம் பழனிவேல் கேட்பதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகியுள்ளது.
இந்த வார பிரமோ: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோவில் திருமண கோலத்தில் மண்டபத்தில் பழனிவேல் மற்றும் மணப்பெண்ணிற்கிடையில் திருமண சம்பிரதாயங்கள் நடந்து வரும் நிலையில் திடீரென வரும் மணப்பெண்ணின் பெற்றோர் இந்த திருமணம் நடக்காது என்று உறுதியுடன் கூறுகின்றன. தொடர்ந்து மணப்பெண்ணுடன் அவர்கள் வெளியேறுவதாக காணப்படுகிறது. இதற்கான காரணத்தை பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கேட்டாலும், தீர்க்கவே முடியாத பிரச்சினையால்தான் இந்த திருமணத்தை நிறுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் தன்னுடைய மகனின் திருமணம் இரண்டாவது முறையாக நின்று விட்டதை எண்ணி காந்திமதி அம்மாள் பரிதவிக்கிறார். கண்ணீர் விட்டு கதறுகிறார்.
அதிர்ச்சி கொடுத்த பழனிவேல் அண்ணன்கள்: இதனிடையே மண்டபத்திற்கு வரும் முத்துவேல் மற்றும் சக்திவேல் இந்த திருமணம் நடக்காது என்றும் இந்த பெண் உன்னை திருமணம் செய்து கொள்வாள் என்றும் ஒரு பெண்ணை காட்டுகின்றனர். பழனிவேல் ஒப்புக் கொண்டால் அந்த மண்டபத்திலேயே அவரது திருமணம் விமரிசையாக நடக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனால் பழனிவேல் மற்றும் பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பழனிவேல் ஒப்புக் கொள்வாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியே ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தாலும் பழனிவேல் பாண்டியன் வீட்டிற்கு செல்வாரா அல்லது தன்னுடைய அண்ணன்களுடன் அவர்கள் வீட்டிற்கு செல்வாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











