Pandian stores 2 serial: பாண்டியன் கொடுத்த அனுமதி.. நெகிழ்ச்சியில் ராஜி.. அதிர்ச்சியில் கதிர்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் தந்தை மற்றும் மகன்களுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து கதைக்களம் உருவாகி வருகிறது. பாண்டியனின் கண்டிப்பு, கறார், சிக்கனம் போன்றவை அவரை குடும்பத்தினரிடையே மோசமாக சித்தரிக்கிறது.
இருந்த போதிலும் தன்னுடைய மகன்கள் மீது அவர் காட்டும் அக்கறை மற்றும் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் மீது அவர் காட்டும் அன்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான ப்ரமோவிலும் இதையொட்டிய காட்சிகளே காணப்படுகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் தன்னுடைய 2வது சீசனை துவங்கியுள்ள நிலையில் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் வாழ்க்கை, பாசப்பிணைப்பை காட்சிப்படுத்திய இயக்குநர், இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். சிக்கனம், கண்டிப்பு, கறார் என்று தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து வந்தாலும் அவர்கள் மீது காட்டும் பாசத்திலும் அக்கறையிலும் சிறிதும் தான் குறைந்தவன் இல்லை என்பதை அடுத்தடுத்து பாண்டியன் நிருபித்து வருகிறார்.
பாண்டியன் கேரக்டர்: தன்னுடைய மகன்கள், மகள்கள் மட்டுமில்லாமல் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்களிடமும் அவர் தன்னுடைய அதிகமான பாசத்தை காட்டி வருகிறார். அந்த வகையில் வீட்டை எதிர்த்து தன்னுடைய மகன்களை திருமணம் செய்த மீனா மற்றும் ராஜி இருவரையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்து வருகிறார். புதிதாக தான் பார்த்து திருமணம் செய்து வைத்த தங்க மயிலையும் தாங்கி வருகிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. தன்னுடைய கணவன் கல்லூரியில் படித்துக் கொண்டே தனக்காகவும் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காகவும் வண்டி ஓட்டி சம்பாதிப்பதை பார்க்கும் ராஜி தானும் கதிருக்கு கைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அதிரடியாக பேசிய ராஜி: ஆனால் படிக்கும் பெண்ணிற்கு டியூஷன் அவசியம் இல்லை என்று பாண்டியன் கறாராக கூறும் நிலையில் இந்த விஷயத்தில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டன, இந்நிலையில் தான் கண்டிப்பாக டியூஷன் எடுத்தே தீருவேன் என்பதில் ராஜி உறுதியுடன் இருக்கிறார். இது குறித்து தன்னுடைய மாமியாரிடம், பாண்டியனுக்கு எடுத்துரைக்க சொல்லி அவர் கேட்டுக்கொள்கிறார். ஆனால் பாண்டியனிடம் இது குறித்து பேச கோமதி மிகுந்த தயக்கமும் பயமும் காட்டுகிறார். அவர் தொடர்ந்து காலதாமதம் செய்வதை பார்க்கும் ராஜி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தானே தன்னுடைய மாமனாரிடம் சென்று தன்னுடைய டியூஷன் விவகாரம் குறித்து அதிரடியாக பேசுகிறார்.
இந்த வார பிரமோ: இதையொட்டிய காட்சிகளே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகின்றன. பாண்டியன் பெண்கள் சொந்தக்காலில் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் இல்லை என்பதை தெளிவு படுத்தி ராஜி பேசியதை கேட்கும் பாண்டியன் ராஜியின் இந்த தைரியமான நடவடிக்கை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். தொடர்ந்து ராஜிக்கு டியூஷன் எடுக்க பர்மிஷனும் கொடுப்பதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. பாண்டியனிடம் பேசுவதற்கு கோமதி மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவருமே பயத்தையும் தயக்கத்தையும் காட்டிய நிலையில் ராஜி அதிரடியாக தனக்காக பேசி டியூஷன் எடுக்க சம்மதம் பெறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.
அதிர்ச்சியில் கதிர்: இதையொட்டி பாண்டியன் கறார் பேர்வழி என்றாலும் ஒரு விஷயத்தை நியாயத்துடன் அவருக்கு எடுத்துரைத்தால் அவர் அதை புரிந்து கொண்டு சம்மதம் சொல்வார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜியின் டியூஷன் விவகாரம் குறித்து கதிர் ஓகே சொன்ன நிலையில், தன்னுடைய அப்பா இதற்கு எப்படி சம்மதிப்பார் என்ற தயக்கம் அவருக்கும் இருந்தது. இந்நிலையில், ராஜிக்கு தன்னுடைய அப்பா சம்மதம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சியடைவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











