Pandian stores 2: நடந்தது எல்லாத்தையும் மறந்துடுவோமே.. ஹனிமூன் கொண்டாட்டத்தில் சரவணன் -தங்கமயில்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. சென்னைக்கு சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு சென்றவுடன் மேலும் 21,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று ஹோட்டல் ரிசப்ஷனில் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடையும் சரவணன் தன்னுடைய அப்பாவிடம் இந்த விஷயத்தை கூற முடியாமல் தம்பிகளிடம் உதவி கேட்கிறார்.
செந்தில், கதிர், பழனிவேல் மூவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து பணத்தை அனுப்புகின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவின் அக்கவுண்டில் இருந்தே பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைக்கிறார் கதிர். தொடர்ந்து கல்லாவில் இருந்தும் ஆயிரம் ரூபாயை எடுக்கிறார். இதை பார்க்கும் பழனிவேல் மற்றும் செந்தில் இருவரும் திகைப்பும் அதிர்ச்சியும் கலந்து முழிப்பதாக கடந்த எபிசோடுகளில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வார தொடருக்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாகவே இந்த சீரியலில் தங்கமயில் செய்த தவறால் சரவணன் மற்றும் தங்கமயில் இருவருமே ஹனிமூனுக்கு சென்றும் நிம்மதி இல்லாமல் தவிப்பதாக காணப்பட்டது. ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கட்ட வேண்டும் என்று கூறி ஹோட்டல் அறையை ஆன்லைனில் புக் செய்கிறார் தங்கமயில். ஆனால் 26 ஆயிரம் ரூபாய் அந்த ஹோட்டலுக்கு கட்ட வேண்டியிருந்த நிலையில் அந்த காசு கையில் இல்லாமல் சரவணன் தவிக்கிறார்.
பணத்தை அனுப்பிய கதிர்: நிலைமையை தன்னுடைய அப்பாவிடம் கூற முடியாமல் அவர் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய தம்பிகளிடம் இது குறித்து கால் செய்து உதவி கேட்கிறார். அவர்களும் பல்வேறு இடங்களில் பணத்திற்காக தேடி அலைகின்றனர். இதனிடையே, தன்னுடைய அப்பாவிற்கு தெரியாமல் அவருடைய அக்கவுண்டில் இருந்து கதிர் பணம் எடுத்து தன்னுடைய அண்ணனுக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் தானும் ஏற்பாடு செய்து 10,000 ரூபாயை அனுப்பி வைக்கிறார். மேலும் 1,000 ரூபாய் குறைய, பாண்டியன் ஸ்டோர்ஸ் கல்லாவில் கை வைக்கிறார் கதிர். இதை பார்த்துக் கொண்டிருக்கும் பழனிவேல் மற்றும் செந்தில் இருவருமே நடுங்குகின்றனர்.

இந்த வார ப்ரமோ: பாண்டியனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்னவாகும் என்று அவர்கள் அச்சப்படும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒரு வழியாக பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து ஹோட்டல் அறைக்குள் நுழைவதாக காணப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்யும் தங்கமயில், ஹோட்டல் அறையை தவறாக தான் புக் செய்தேன் என்றும் விஷயம் தெரிந்த உடன் அதை மற்றவர்களிடம் கூறி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் பாக்கியம் கையில் காசில்லாமல் வந்தது சரவணன் தவறுதானே என்று நியாயம் பேசுகிறார்.

நடந்ததை மறந்துடுவோமே: இதையடுத்து நடந்ததை நினைத்து சங்கடப்பட்டு கொண்டிருக்கும் சரவணனிடம் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் நாம் மறந்து விடலாம் என்று ஆசுவாசப்படுத்துகிறார் தங்கமயில். தொடர்ந்து சரவணன் நடந்த விஷயங்களை மறந்து விட்டு தங்கமயிலுடன் அன்னியோன்னியமாக பழகுகிறார். இருவரும் ஹோட்டலில் பல்வேறு இடங்களில் சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதாகவும் அவர்களுக்குள் ரொமான்ஸ் பற்றி கொள்வதாகவும் தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரோமோவில் காணப்பட்டது. இதனிடையே, பாண்டியனிடம் இருந்து பணத்தை திருட்டுத்தனமாக கதிர் எடுத்தது தெரியவந்தால் அவர் தாண்டவமாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











