Pandian stores 2: நினைத்தபடி மாப்பிள்ளை அமைந்ததடி.. நடந்து முடிந்த சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தம்

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சேனலின் 3வது இடத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் பாண்டியன், கோமதி மற்றும் அவர்கள் மகன்கள், மகள்கள், அண்ணன்கள் என குறைவான கேரக்டர்களே லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.

சரவணனுக்கு தங்கமயில் என்பவரை நிச்சயம் செய்த பாண்டியன் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்திற்கும் நாள் குறிக்கின்றனர். இதையடுத்து புடவை மற்றும் துணிமணிகள் எடுக்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரமோவில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக காட்டப்படுகிறது. அதையொட்டி தங்கமயில் குடும்பத்தினர் மீது பாண்டியன் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து எழும் சந்தேகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Vijay TV s Pandian stores 2 serial this week 15th to 20th April promo Saravanan -Thangamayil engagement

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு விருந்தாகி வருகின்றன. குடும்ப உறவுகளை மையமாக கொண்டு வெளியாகிவரும் இந்த சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து சேனலின் 3வது முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது. பாண்டியன் -கோமதி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அடுத்தடுத்த பிரச்சினைகள், உறவுச்சிக்கல்கள், பாண்டியனின் கண்டிப்பு, கோமதியின் அப்பாவித்தனம், அடுத்தடுத்த மருமகள்கள் மீனா மற்றும் ராஜி உள்ளிட்டவர்களை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay TV s Pandian stores 2 serial this week 15th to 20th April promo Saravanan -Thangamayil engagement

இந்த வார ப்ரமோ: சிக்கலுக்கு உள்ளாகியிருந்த பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கு தங்கமயில் என்ற பெண்ணை, குடும்பத்தினர் நிச்சயம் செய்கின்றனர். அவர்கள் குடும்பம் குறித்து பாண்டியன் மிகப்பெரிய மதிப்பை வைத்துள்ள சூழலில் அவர்கள் அனைவரும் அடாவடியாக காட்டப்படுகின்றனர். முதலில் சரவணனனை பிடிக்காமல் இருந்த தங்கமயிலுக்கு ஒருகட்டத்தில் அவரை மிகவும் பிடித்துப் போகிறது. அவரை மாமா என்று கூப்பிடலாமா என்று கேட்கும் அளவிற்கு அவருக்கு அன்பு ஏற்படுகிறது. இதையடுத்து அவர்களின் நிச்சயதார்த்த நாளும் வந்துள்ளது. இதுகுறித்து இந்த வார பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தம்: சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தத்தையொட்டி தங்கமயில் வீட்டிற்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் செல்கின்றனர். இதனிடையே, அவர்கள் வீட்டில் அதிகமான உறவினர்கள் இல்லாத சூழல் காணப்படுகிறது. அதிகமான உறவினர்கள் இருப்பதாக கூறினீர்களே, யாருமே வரவில்லையா என்று பாண்டியன் குடும்பத்தினர் கேட்பதாகவும், அதற்கு அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம் என்றும் தங்கமயிலின் அப்பா பதிலளிக்க, இது பாண்டியனுக்கு நெருடலாக அமைகிறது. தொடர்ந்து தங்கமயில் அணிந்திருக்கும் நகைகள் சிறப்பாக உள்ளதாக அது கவரிங் என்று தெரியாமலே, சரவணனின் அக்கா குழலி பாராட்டுகிறார். இதனால் தங்கமயிலின் முகம் மாறுகிறது.

திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு: இதனிடையே தங்கமயில் சபைக்கு அழைக்கப்பட அவருக்கு மாலை போடப்படுகிறது. இதையடுத்து நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கப்படுவதாக இந்த வார எபிசோடில் காணப்படுகிறது. இதையடுத்து, நினைத்தபடி நினைத்தபடி மாப்பிள்ளை அமைந்ததடி என்ற பாட்டுக்கு அனைவரும் உற்சாகமாக ஆடுவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இவ்வாறு சந்தேகங்கள், குழப்பங்கள், அச்சங்கள் உள்ளிட்டவற்றுடன் வரும் வாரத்தின் எபிசோட்கள் அமையவுள்ளது. ஒருவழியாக கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரனின் தலையீடு இல்லாமல் நிச்சயதார்த்தம் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X