Pandian stores 2 serial: ஹனிமூன் கூட்டிட்டு போனா உங்களை நம்புறேன்.. சரவணனுக்கு தங்கமயில் வைத்த செக்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இயல்பான மற்றும் குடும்ப சென்டிமெண்டை அதிகமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்துவரும் இந்த தொடர் துவங்கி சில மாதங்களே ஆன நிலையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பாண்டியன் -கோமதி தம்பதி, அவர்களின் மகன்கள், அவர்களின் திருமணங்கள், மகள்கள், பகை பாராட்டும் கோமதியின் அண்ணன்கள் என குறுப்பிட்ட கேரக்டர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பான எபிசோட்களை கொடுத்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் கேரக்டர் மிகவும் பிரதானமாக அமைந்து வருகிறது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து சேனலின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மற்றும் கதிருக்கு எதிர்பாராத விதமாக திருமணங்கள் நடந்த நிலையில், தன்னுடைய மூத்த மகன் சரவணனுக்கு தன்னுடைய விருப்பப்படி அரேஞ்சுடு மேரேஜ் செய்ய திட்டமிட்டு அதை செய்து முடித்துள்ளார் பாண்டியன். ஆனால் அவர் சரவணனுக்கு மணமுடித்து வைத்த தங்கமயில் மற்றும் அவரது அம்மா இருவரும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேட முற்படுகின்றனர்.

தங்கமயிலின் பொய்கள்: போலி நகைகளை போட்டுக் கொண்டு வந்த தங்கமயில், அதை மறைக்க படாத பாடு படுகிறார். இதனிடையே அவர் எம்ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் படித்துள்ளதாக அவர் அம்மா அளந்துவிட்ட கதையும் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்பது தெரியமல் முழித்து வருகிறார். இந்த விஷயம் வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக, ராஜியின் டியூஷன் விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதை நடக்க விடாமல் செய்ததையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து சரவணனை விட அவர் ஒரு வயது அதிகமானவர் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் வெளியில் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அவருக்கு தொடர்ந்து காணப்படுகிறது.

தங்கமயிலின் திட்டம்: இந்நிலையில் தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டுக் கொண்டு பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்த குழப்பங்களை ஏற்படுத்துகிறார். இது தெரியாமல் தங்கமயில் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு, குடும்பத்தினரிடையே சண்டையிடுகிறார் பாண்டியன். இவ்வாறு இருக்க, ஹனிமூனுக்கு போக வேண்டும் என்று தொடர்ந்து சரவணனிடம் கேட்கிறார். அவரோ, திருமண செலவே மிகவும் அதிகமாக இருந்ததால் இதுகுறித்து தன்னுடைய அப்பாவிடம் கேட்காமல் தாமதம் செய்து வருகிறார். ஆனால் தன்னுடைய அம்மாவின் தூண்டுதலும் இருக்க தங்கமயில் இந்த விஷயத்தில் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார்.

இந்த வார ப்ரமோ: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரமோவில், சரவணன், தன்னுடைய தம்பிகள், சித்தப்பா என அனைவருடனும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை தங்கமயில் அழைக்க, அவர் அப்புறமாக வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கேயே படுத்து தூங்கி விடுகிறார். அவருக்காக காத்திருக்கும் தங்கமயில், கோபத்துடன் இருக்க, வழக்கம்போல காலையில் எழுந்திருக்காமல் இருக்கிறார். சரவணனுக்காக மதிய உணவையும் எடுத்து செல்லாமல் இருக்க, வீட்டிற்கு வரும் சரவணனிடம் சண்டை பிடிக்கிறார் தங்கமயில்.

தங்கமயில் வைத்த செக்: சரவணனுக்கு தன்மீது எந்தவிதமான அக்கறையும் இல்லை என்று அவர் கூறுவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது. இதையடுத்து நீண்ட பேச்சுக்கு பிறகு எதை செய்தால் தன் மீது தஙகமயிலுக்கு நம்பிக்கை வரும் என்று கேட்பதாகவும் தன்தை ஹனிமூனுக்கு கூட்டி சென்றால் தான் சரவணனை நம்புவதாக தங்கமயில் கூறுவதாகவும் இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது. தன்னுடைய தந்தையின் பேச்சை அப்படியே கேட்கும் சரவணன், இந்த விஷயத்தில் என்ன மாதிரியான முடிவெடுப்பார், பாண்டியனிடம் கேட்பாரா என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X