Pandian stores 2 serial: குடும்பத்துடன் பெண் பார்க்க சென்ற சரவணன்.. கடுப்பாகி வெளியேறிய பெண்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் கேள்விக்குறியான சரவணனின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரோக்கர் மற்றும் மீனா மூலம் வந்த வரன்களை சக்திவேல் கண்டதையும் சொல்லி தடுக்கிறார். சரவணனுக்கு உடலளவில் பிரச்சினை இருப்பதாகவும் அதனால்தான் அவரது தம்பிகளுக்கு திருமணம் நடந்ததாகவும் அவர் பற்ற வைக்க, சரவணனின் திருமணம் அடுத்தடுத்து நிற்கிறது.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளாகின்றனர். செந்தில் -மீனா, கதிர் -ராஜி அடுத்தடுத்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால் குடும்பத்தின் அமைதி குலைகிறது. இதையடுத்து அடுத்த 50 நாட்களில் சரவணனின் திருமணத்தை தான் நடத்தி காட்டுவேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் இடுகிறார். செருப்பு போடாமல் நடந்து சென்று காலில் முள் குத்தி அவர் பிரச்சினைகளை சந்திக்கிறார். அவருக்கு சுகர் இருக்கும் நிலையில், கோமதி இதனால் கவலை கொள்கிறார். தொடர்ந்து சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடர்கிறது.

Vijay TV s Pandian stores 2 serial this week 16th to 18th March 2024 promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. செந்தில் மற்றும் கதிர் திருமணங்களால் கேள்விக்குறியாகியுள்ள சரவணனின் திருமணத்தை 50 நாட்களில் நடத்திக் காட்டுவேன் என்று பாண்டியன் சபதம் ஏற்றுள்ளார். அதுவரை தன் காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் அவர் தன்னுடைய சபதத்தில் கூறுகிறார். இதனால் அவர் வெறும் காலில் நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாகவும் சாலையில் நடந்து செல்வர்கள் அனைவரும் அவரை கலாய்ப்பதாகவும் நேற்றைய சீரியலில் காணப்பட்டது.

இந்த வார ப்ரமோ: தற்போது சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகியுள்ளது. சரவணன் திருமணத்திற்காக செந்தில் உள்ளிட்டவர்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்கின்றனர். அதிலிருந்து ஒரு பெண் தன்னுடைய ஒப்புதலை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவரிடம் பேசி எந்த இடத்தில் சந்திப்பது என்பது குறித்து மீனா பிக்ஸ் செய்கிறார். ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவர் சரவணனை சந்திக்க ஓகே சொன்ன நிலையில் அங்கு தனியாக செல்வதற்கு சரவணன் தயக்கம் காட்டுகிறார், இதையடுத்து வீட்டிற்கு வரும் பாண்டியன் சரவணனுடன் அனைவரும் குடும்பத்துடன் செல்லலாம் என்று கூறுகிறார். இதையடுத்து அனைவரும் காரில் குடும்பத்துடன் அந்த ரெஸ்டாரண்டுக்கு செல்கின்றனர்.

மேட்ரிமோனி மூலம் வந்த பெண்: அங்கு மிகவும் மாடர்னாக அந்தப் பெண் வரும் நிலையில் சரவணனை தனியாக உள்ளே அனுப்பி வைக்கின்றனர். இதையடுத்து பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்து சரவணன், வெளியில் நிற்கும் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் சரவணனிடம் யாரை பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப, தன்னுடைய குடும்பத்தினர் வெளியில் காத்திருப்பதாக அவர் கூறுகிறார். இதையடுத்து தான் தனியாக தானே வர சொன்னேன் என்று கோபப்படும் அந்த பெண், அங்கிருந்து கிளம்பி போகிறார். இதனால் இந்த பெண் பார்க்கும் படலமும் தோல்வியில் முடிவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது.

கோபத்தில் முத்துவேல் குடும்பத்தினர்: தன்னுடைய மகள் ராஜியை, திருமணத்தின் போது வீட்டை விட்டு கூட்டிக்கொண்டு சென்று கதிர் திருமணம் செய்ததாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பாண்டியன் மற்றும் கதிர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது மிகுந்த கோபத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மேற்கொள்ளும் திருமணம் முயற்சிகள் ஒவ்வொன்றாக குலைத்து வருகிறார் சக்திவேல். இதனால் சரவணனின் திருமணம் கைகூடாமல் போகிறது. இதனால் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். இதனிடையே தான் சபதம் செய்தபடி 50 நாட்களில் சரவணனுக்கு பாண்டியன் திருமணத்தை செய்து வைப்பாரா என்பது குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X