நான் உங்களை விட்டு போறேன்.. செந்திலுக்கு செக் வைத்த மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகியுள்ளது. இந்த பிரமோவில் தன்னிடம் பாண்டியன் மற்றும் கோமதி ஆகியோரும் பேசிய நிலையில், பேசாமல் இருக்கும் செந்திலுக்கு செக் வைக்கிறார் மீனா.

வீட்டில் சொன்னாலும் பர்மிஷன் கிடைக்காது என்ற சூழலில் சொல்லாமல் ஹோம் டியூஷன் எடுக்கிறார் ராஜி. இதற்கு மீனாவும் உதவி செய்ய, இந்த விஷயம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவருகிறது. மீனாவின் அப்பாவும் சித்தப்பாவும் பாண்டியனை இந்த விஷயத்தில் கேவலமாக பேசியதையும் பார்க்க முடிந்தது.

pandian stores 2 serial vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசன் வெளியாகி அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தியது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் நிறைவு பெற்று, உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. இந்த சீசனில் அப்பா -மகன் உறவை மையமாக வைத்து சீரியலின் கதைக்களம் அமைந்திருந்தது. முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்திருந்த ஸ்டாலின் இந்த சீசனில் அப்பாவாக நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார்.

ராஜி எடுத்த ஹோம் டியூஷன்: இந்த சீசனில் அவரது மனைவியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருவது சீரியலுக்கு மிகப்பெரிய அட்ராக்ஷனை கொடுத்துள்ளது. இவர்களின் அன்னியோன்னியம் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இவர்களின் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள், மருமகள்கள் இவர்கள் அனைவரையும் கேரக்டர்களாக வைத்து கதை அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை கொடுத்து வருகிறது. ராஜி வீட்டிற்கு தெரியாமல் ஹோம் டியூஷன் எடுத்த நிலையில், அவரது சித்தப்பா மூலம் அனைவருக்கும் தெரியவருகிறது. இந்த விஷயத்தில் ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் பாண்டியனை கேவலமாக பேசுகின்றனர்.

செந்தில் -மீனா சண்டை: இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் பாண்டியன், கோமதி மற்றும் குடும்பத்தினர் யாருமே மீனா மற்றும் ராஜியிடம் பேசாமல் விலக்கி வைக்கின்றனர். இந்நிலையில் தங்களின் சூழ்நிலை குறித்து கோமதி மற்றும் பாண்டியனிடம் அவர்கள் பேச, அவர்களும் நடந்ததை மறந்து அவர்களை ஏற்றுக் கொண்டு சகஜமாக பேசத் துவங்குகின்றனர்.ஆனாலும் மீனாவிடம் செந்திலும், ராஜியிடம் கதிரும் அடுத்தடுத்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி பேசாமல் இருக்கின்றனர். இதனால் மீனா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். ராஜியோ கதிரிடம் தானும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

pandian stores 2 serial vijay tv

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில், தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளுக்காக துணிகள் எடுக்க செல்லும் மீனா, இனிமேல் தன்னிடம் பேசும் வாய்ப்பு வராது என்றும், தான் செந்திலை விட்டு போவதாகவும் வாய்ஸ் மெசேஜ் மூலம் செந்திலுக்கு பயத்தைக் கொடுக்கிறார். இந்நிலையில் இதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகும் செந்தில், தன்னுடைய தம்பி கதிருடன் சேர்ந்து மீனாவை பல இடங்களிலும் தேடி திரிகிறார். இந்நிலையில் மீண்டும் மீனாவிற்கு அவர் கால் செய்ய, அவர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறுகிறார். அங்கு அலறி அடித்துக் கொண்டு வரும் செந்தில், மீனாவிடம் தன்னைவிட்டு போவதாக முடிவு செய்து விட்டாயா என்று நெகிழ்ச்சியுடன் கேட்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X