Pandian stores 2 serial: தங்கமயிலை பாராட்டிய பாண்டியன்.. கோமதி நினைப்பில் விழுந்த மண்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பிரமோவில் கடைக்கு பாண்டியன் மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சாப்பாடு எடுத்து செல்கிறார் தங்கமயில். இதை கோமதி தடுத்த போதிலும் அவரை சமாளித்து தங்கமயில் சாப்பாடு எடுத்து செல்கிறார்.
இதையடுத்து மீனாவிடம் பேசும் கோமதி கண்டிப்பாக பாண்டியன் வீட்டிற்கு வந்து தங்கமயிலை திட்டுவார் என்று கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. ஆனால் அவர் நினைத்ததற்கு எதிரான விஷயங்கள் நடந்ததையும் இந்த வார ப்ரோமோ காட்சிப்படுத்தியுள்ளது. சரவணனுக்கு பாண்டியனே நிச்சயம் செய்த தங்கமயிலுடன் திருமணம் நடந்துள்ள நிலையில் மாமனார் மெச்சிய மருமகளாக தொடர்ந்து தங்கமயில் நடந்துக் கொள்கி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு அடுத்தடுத்து திருமணம் நடந்து முடிந்துள்ள சூழலில் தன்னுடைய அம்மா பாக்கியத்தின் அறிவுரைப்படி அந்த குடும்பத்தின் ஆதிக்கத்தை தன் கையில் எடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து செயல்பட்டு வருகிறார் தங்கமயில். அதையொட்டி முன்னதாக தன்னுடைய கணவன் சரவணனுக்கு அவரது கடைக்கு சென்று மதிய உணவு கொடுத்து வந்தார். தற்போது தன்னுடைய மாமனார் மற்றும் பழனிவேலுக்கு கடைக்கு சாப்பாடு கொண்டு செல்கிறார் தங்கமயில்.
இந்த வார ப்ரோமோ: இதுகுறித்து வெளியாகி உள்ள இந்த வார ப்ரோமோவில் தன்னுடைய மாமியார் கோமதி வேண்டாம் என்று கூறியும் அதைக் கேட்காமல் சமாளித்துவிட்டு கடைக்கு சாப்பாடு எடுத்துச் செல்கிறார் தங்கமயில். இதுகுறித்து சென்னையில் உள்ள மீனாவிற்கு தொலைபேசி மூலம் கோமதி பேசுகிறார். இதைக் கேட்கும் மீனா மாமாவிற்கு இதெல்லாம் பிடிக்காதே என்று கேட்கிறார். ஆமாம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது வந்தவுடன் கண்டிப்பாக தங்கமயிலை திட்டுவார் என்று கோமதி கூறுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது. ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக வீட்டிற்கு வந்தவுடன் தங்கமயிலை அடுத்தடுத்து புகழ்கிறார் பாண்டியன்.
பாண்டியன் பாராட்டு: தங்கமயில் கடைக்கு சாப்பாடு எடுத்து வந்ததால் வீட்டிற்கு வந்து போகும் நேரம் மிச்சமானதாகவும் அதனால் இன்னும் அதிகமான வேலையை முடித்ததாகவும் பாண்டியன் பாராட்டு தெரிவிக்கிறார். இதனால் கோமதியின் முகம் வாடிப் போகிறது. இருந்த போதிலும் அவர் அமைதியாக இருக்கிறார். மீண்டும் அறைக்கு வந்து பாண்டியன் தொடர்ந்து தங்கமயில் புராணத்தையே பாடுகிறார். அந்த பெண் கடைக்கு வந்து அனைவருக்கும் அன்பாக உணவு பரிமாறியது குறித்தும் அவர் பாராட்டு தெரிவிக்கிறார். இதனால் கோமதி மிகவும் கோபமடைவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.
கோமதி அதிர்ச்சி: இவ்வாறு தொடர்ந்து பாண்டியன் ஒவ்வொரு விஷயத்திலும் தங்கமயிலை பாராட்டுவதாக அடுத்தடுத்த எபிசோட்களில் காணப்படுகிறது. இதனால் கோமதியும் ராஜி மற்றும் மீனாவும் கடுப்பாவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய ஆதிக்கத்தில் இருந்த சமையலறை மட்டும் வீட்டு வேலைகளை வந்த அடுத்த நாளே தங்கமயில் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டது கோமதிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முன்னதாக இது குறித்து அவரிடம் பேசிய மீனா, ராஜி ஆகியோர் இத்தனை நாள் உழைத்து விட்டீர்கள் இனி சும்மா ஓய்வெடுக்க வேண்டியது தானே என்று கூறிய போதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை இந்த குடும்பத்தில் தான் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கோமதி கூறியதாக காணப்பட்டது.
வருத்தத்தை வெளிப்படுத்தாத பாண்டியன்: இதனிடையே சினிமாவிற்கு தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் சென்ற நிலையில், அதற்காக தங்கமயில் செலவழித்த 1200 ரூபாயும் கோமதிக்கு தொடர்ந்து மன உளைச்சலை கொடுத்தது. இதுகுறித்து அவர் தொடர்ந்து அங்கலாய்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்த விஷயங்கள் பாண்டியனுக்கும் வருத்தத்தை கொடுத்த போதிலும் அவர் பெரிய அளவில் ரியாக்ட் செய்யாததையும் பார்க்க முடிந்தது. தான் கொண்டு வந்த மருமகள் என்ற ஒரு விஷயம் அவர் கண்முன்னே இருப்பதுடன், தங்கமயிலும் அடுத்தடுத்து வீட்டு வேலைகள் அனைத்தையும் பொறுப்புடன் செய்வதையும் அவர் தொடர்ந்து பாராட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











