Pandian stores 2: சுகன்யாவின் இரட்டை முகம்.. பாண்டியன் குடும்பத்திற்கு எதிராக களமிறங்கும் புதுப்பெண்
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பழனிவேலின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பழனிவேலுக்கு பாண்டியன் நிச்சயித்திருந்த திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில், முத்துவேல் மற்றும் சக்திவேல் பார்த்த பெண்ணை பழனிவேல் திருமணம் செய்துக் கொள்கிறார்.
தொடர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க தன்னுடைய அண்ணன்கள்தான் காரணம் என்பதை பழனிவேல் தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து அவர் மீண்டும் பாண்டியன் வீட்டிற்கே வருவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து அவரது இரட்டை முகம் வெளிப்படுவதாகவும் காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பழனிவேலுக்கு பாண்டியன் திருமணம் நிச்சயித்த நிலையில் அந்த திருமணத்தை அவரது அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் மீண்டும் நிறுத்துகின்றனர். மேலும் தங்களின் உறவுக்கார பெண் சுகன்யாவை பழனிவேலுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இக்கட்டான நிலையிலும் தன்னுடைய திருமணம் நின்ற நிலையிலும் அவர்கள் கை காட்டும் சுகன்யாவை பழனிவேல் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு பாண்டியனும் சம்மதிக்கிறார்.
பழனிவேல் -சுகன்யா திருமணம்: இந்நிலையில் முத்துவேல் மற்றும் சக்திவேல், பழனிவேல் திருமணத்தை நிறுத்த செய்த சதி வெளியாகிறது. இதையடுத்து அவர்களின் குடோனுக்கு சென்று பாண்டியன் சண்டையிடுகிறார். அவர்களும் பதிலுக்கு சண்டையிடும் நிலையில் அங்கு பாண்டியனின் மகன்கள் வந்து தங்களது அப்பாவிற்கு சப்போர்ட்டாக நிற்கின்றனர். இதை மறைந்திருந்து கேட்கும் பழனிவேல் மிகுந்த ஆத்திரத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகிறார். இதையடுத்து அவர் கொந்தளிப்பதாக நேற்றைய எபிசோடு காணப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள பிரமோவில் அவர் தன்னுடைய அண்ணன்களுடன் சண்டையிட்டு தன்னுடைய மனைவி சுகன்யாவை அழைத்துக் கொண்டு பாண்டியன் வீட்டுக்கு வருவதாக காணப்படுகிறது.
இந்த வார ப்ரமோ: இந்நிலையில் சுகன்யா பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்பு தன்னை மிகவும் அடக்கமான பெண்ணாக காட்டிக் கொள்கிறார். ஆனால் தனியாக பழனிவேலுடன் இருக்கும்போது அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாக இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது. இதனிடையே பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக சக்திவேலின் மகன் குமார், பாண்டியனின் மகள் அரசியை காதலிப்பதாக நடிக்கிறார். இதை தெரிந்து கொள்ளும் சுகன்யா, அவர்களிடம் நேரில் சென்று அவர்களின் திட்டத்திற்கு தான் உதவி செய்வதாக கூறுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது.
கேள்விக்குறியாகும் அரசி வாழ்க்கை: இதனால் அரசியின் வாழ்க்கை எப்படி முடியும் என்று ரசிகர்கள் தங்களது கோபத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இனிவரும் நாட்களில் இந்த சீரியல் மேலும் அதிகமான டிஆர்பி பெறும் வகையில் காட்சிகளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறுவயதிலேயே தன்னுடைய அண்ணன்களை விட்டுவிட்டு, தன்னுடைய அக்கா மற்றும் மாமா வீட்டில் அவருடைய குழந்தையாக வளர்கிறார் பழனிவேல். பாண்டியனை எந்த காலத்திலும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. இந்நிலையில் அவரது மனைவியாக வந்துள்ள சுகன்யா, இரட்டை முகத்துடன் செயல்படுவது இந்த சீரியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











