Pandian stores 2: சாயங்காலமாக இருந்திருந்தா பேயே துரத்தியிருக்கும்.. கதிருக்குள் அரும்பும் காதல்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் கோமதியின் அண்ணன்கள் என முக்கியமான கேரக்டர்களை கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது இந்த சீரியல். குறைந்த மாதங்களிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது சேனலின் மூன்றாவது இடத்தில் நிலை கொண்டுள்ளது. அதிகமான டிஆர்பி புள்ளிகளையும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் அடுத்தடுத்த எபிசோடுகளை கொடுத்து வருகிறார்.

இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. முதல் சீசனில் நடித்திருந்த நடிகர் ஸ்டாலின் மற்றும் ஹேமா மட்டுமே தற்போது இரண்டாவது சீசனில் இடம் பெற்றுள்ளனர். பாண்டியன் மனைவி கோமதியாக நடிகை நிரோஷா இந்த இரண்டாவது சீசனில் தன்னுடைய அடக்கமான மற்றும் அழகான நடிப்பால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சில இடங்களில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலை அவர் ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Vijay TV s Pandian stores 2 serial this week 1st to 6th April promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று சேனலின் மூன்றாவது சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததால் தற்போது வரை கோமதியின் அண்ணன்கள் இவர்களை பகையாளிகளாக நடத்தி வருவதாக காட்டப்படுகிறது. பாண்டியன் மற்றும் கோமதி தம்பதியின் மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் கோமதியின் அண்ணன்களின் பகை உள்ளிட்டவையை கொண்டு இந்த சீரியலின் கதைக்களம் அடுத்தடுத்து எபிசோடுகளாக வெளியாகி வருகிறது. ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

நிச்சயிக்கப்பட்ட சரவணன் திருமணம்: இயல்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் மூத்தவர் சரவணனின் திருமணம் கேள்விக்குறியான நிலையில் தற்போது சரவணனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தங்க மயில் என்ற பெண்ணை சரவணனுக்கு நிச்சயம் செய்கின்றனர் கோமதி மற்றும் பாண்டியன் தம்பதி. இந்த திருமணம் எப்படி நடக்கும், சக்திவேல் மற்றும் குமரனின் சூழ்ச்சியிலிருந்து சரவணன் மற்றும் பாண்டியன் குடும்பத்தினர் எப்படி தப்பிப்பார்கள் என்பதாக இனிவரும் நாட்களில் இந்த சீரியலின் எபிசோடுகள் காணப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

பார்ட் டைம் வேலைக்கு போகும் கதிர்: ராஜி கல்லூரிக்கு பணம் கேட்ட நிலையில், பாண்டியன் கோபத்தில் கதிரை திட்டுகிறார். தன்னுடைய மனைவிக்கு காசு கொடுக்க முடியாத சூழலில் கதிர் உள்ளதை அவர் கோபத்துடன் சுட்டிக்காட்டிய நிலையில் ராஜி அழுது கொண்டே நடந்தே கல்லூரிக்கு செல்லும் நிலை காணப்பட்டது. இந்நிலையில் இந்த சூழலில் ராஜியை காக்கும் வகையில் கதிர் பார்ட் டைம் வேலைக்கு செல்கிறார். முதல் நாளிலேயே கார் ஓட்டி 2000 வரை சம்பாதிப்பதாக தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பணத்தை ராஜியிடம் அவர் கொடுப்பதாகவும் அவர் வீரப்பாக அதை மறுப்பதாகவும் காட்டப்படுகிறது.

இந்த வார ப்ரமோ: இதனிடையே நடந்தே கல்லூரிக்கு செல்ல முயலும் ராஜியை நாய் துரத்த வீட்டிற்குள் மீண்டும் ஓடி வருகிறார். வந்து கதிர் கொடுத்த பணத்தை எடுப்பதாக காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை நேரமாக இருப்பதால் நாய் துரத்துகிறது, சாயங்காலமாக இருந்திருந்தால் பேய் துரத்தி இருக்கும் என்று ராஜியை கதிர் நக்கல் அடிப்பதாகவும் ராஜி தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதாகவும் இந்த வார பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த சீரியலில் கொடுத்து வரும் இயக்குநர் அதன் ஊடாக, காட்சிகளில் காமெடி கலந்தும் கொடுத்து வருவதும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்து வருகிறது. தொடர்ந்து இந்த சீரியல் இன்னும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே பெரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X