Pandian stores 2 serial: இந்த வீட்டுக்கு ஒரே தலைவி.. அது நீங்கதான்.. தங்கமயிலிடம் எடுபடாத கோமதியின் ஆட்டம்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. தன்னுடைய அம்மா கூறுவதற்கு ஏற்ப பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களை தங்கமயில் செய்து வருகிறார். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் கோமதி, மீனா மற்றும் ராஜி உள்ளிட்டவர்களை கடுப்புக்கு உள்ளாக்குகிறது.

கோமதி பல விஷயங்களை செய்ய வேண்டாம் என்று கூறினாலும் சிரித்தபடியே அதை செய்து முடிக்கிறார் தங்கமயில். இதனால் கோமதி தொடர்ந்து கடுப்பிற்குள்ளாகிறார். மாமியாராக தன்னுடைய பதவியை யூஸ் செய்யுமாறு மீனா மற்றும் ராஜியும் கூறும் சூழலில் தான் என்ன சொன்னாலும் தங்கமயில் கேட்காதது அவருக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து கோமதி மட்டுமில்லாமல் ராஜி, மீனா, செந்தில், கதிர் என அனைவரும் தங்கமயில் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து பாண்டியனிடம் போட்டுக் கொடுத்து வருகிறார் தங்கமயில். இதனால் எந்த விஷயத்தையும் அவர் காதுக்கு போகாமல் கோமதி, மீனா மற்றும் ராஜி என அனைவரும் பார்த்துக் கொள்கின்றனர். சரவணனும் தங்கமயில் சொல்வது எதையும் செய்யாத நிலையில், பாண்டியன் மட்டுமே தங்கமயில் கூறும் அனைத்து விஷயத்திற்கும் தலையாட்டுவதாக காணப்படுகிறது.

இந்த வார ப்ரமோ: தங்கமயில் தொடர்ந்து சரவணன் உள்ளிட்டவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்று வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரமோவில் தங்கமயில், பாண்டியன் மற்றும் சரவணனுக்காக சாப்பாடு கட்டிக் கொண்டிருக்கிறார். வெளியில் ஹாலில் இருந்தபடி உள்ளே என்ன உருட்டிக் கொண்டிருக்கிறார் என்று மீனா கேட்க. ஸ்பெஷல் விருந்து தயாரித்துள்ளதாக கோமதி கடுப்புடன் கூறுகிறார். இதையடுத்து இன்று அவள் எப்படி சாப்பாடு எடுத்துக் செல்கிறார் என்று தான் பார்ப்பதாக கோமதி கூறுகிறார். இந்நிலையில் மாமியார் என்ற பதவியை யூஸ் செய்யுமாறு மீனாவும் உசுப்பேற்றுகிறார்.

கோமதி திட்டவட்டம்: பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்து செல்லக்கூடாது என்று தான் கண்டிப்புடன் சொல்லவுள்ளதாக கோமதி கூற, தங்கமயில் கோமதி கூறுவதை கேட்கவில்லை என்றால் என்ன செய்வது என்று ராஜி கேட்கிறார். மாமியார் கூறினால் அது எப்படி கேட்காமல் இருக்க முடியும் என்று மீனாவும் தொடர்ந்து பேசுகிறார். இந்நிலையில் சாப்பாடை எடுத்துக்கொண்டு கிளம்ப தங்கமயில் தயாராகிறார். இதையடுத்து அவரிடம் சரவணனுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துச் சென்றால் போதும், மாமாவிற்கு சாப்பாடு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் கோமதி கூறுகிறார். ஆனால் இதைக் கேட்காத தங்கமயில் பாண்டியனுக்கு கால் செய்து சாப்பாடு எடுத்து வரட்டுமா என்று கேட்பதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.

எடுபடாத கோமதியின் ஆட்டம்: பாண்டியன், கஷ்டமாக இருந்தால் சாப்பாடு எடுத்துவர வேண்டாம் என்று கூற, தனக்கு என்ன கஷ்டம் என்று தங்கமயில் கூறிவிட்டு தொடர்ந்து கோமதியிடம் மாமா சாப்பாடு எடுத்து வர சொல்வதாகவும் நீங்கள் தான் தேவை இல்லாமல் ஏதேதோ யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து கோமதி கடுப்பாவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X