Pandian stores 2 serial: அடப்பாவிகளா.. கல்யாண பொண்ணுன்னு நினைச்சி மீனா -ராஜியை கடத்திய குமரன் கோஷ்டி

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது சரவணன் மற்றும் தங்கமயில் திருமண நிகழ்வுகளையொட்டி அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலில் சரவணனின் திருமணத்தை நிறுத்துவதற்காக கங்கணம் கட்டி கொள்ளும் குமரன், கல்யாண பெண்ணை கடத்த தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டுகிறார்.

ரிஷப்ஷன் முடிந்து இரவில் அனைவரும் மண்டபத்தில் தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருக்க, அங்கு வரும் குமரனின் நண்பர்கள், மணப்பெண் என்று நினைத்து ராஜி மற்றும் மீனாவை கடத்துகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை இந்த வார பிரமோவில் பார்க்க முடிகிறது. தடைகளை தாண்டி சரவணன் -தங்கமயில் திருமணம் எப்படி நடக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay TV s Pandian stores 2 serial this week 20th to 25th May 2024 promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமண ரிசப்ஷன் நடந்து முடிந்துள்ள சூழலில், அடுத்ததாக அவர்களது திருமணம் குறித்த அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் தயாராகியுள்ளனர். தங்கமயிலை கடத்தி அதன் மூலம் திருமணத்தை நிறுத்த குமரன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிடுகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் குமரன் கல்யாண பெண்ணை கடத்துவதற்கு தன்னுடைய நண்பர்களை திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

மீனா -ராஜியை கடத்திய குமரன்: அங்கு செல்லும் அவர்கள், மணப்பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் இருப்பதாகவும் யார் மணப்பெண் என தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதையடுத்து இரண்டு பெண்களையும் தூக்குமாறு குமரன் அவர்களிடம் கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பெண்களையும் அவர்கள் கடத்துகின்றனர். மறுநாள் காலையில் கோமதி, மீனா மற்றும் ராஜியை மண்டபத்தில் தேடுகிறார். அவர்கள் இருவரையும் மண்டபத்தில் காணாமல் குடும்பத்தினர் அனைவரும் தேடும் சூழலில், அவர்கள் இருவரும் தான் கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

வெளியானது இந்த வார பிரமோ: தாங்கள் எதற்காக கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அவர்கள் இருவரும் முழிப்பதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த தடைகளை தாண்டி சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் எப்படி நடக்கும் என்பது குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் காணலாம். செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த காதல் திருமணங்களால் சரவணன் திருமணம் தடைப்பட்ட சூழலில் கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் ஒரு வழியாக அவருக்கு பாண்டியன் தங்கமயிலை நிச்சயிக்கிறா. இந்நிலையில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இந்த திருமணம் தற்போது திருமண மேடை வரையில் வந்துள்ளது.

திருமணம் நடக்குமா?: இந்நிலையில் தற்போது மீனா மற்றும் ராஜியை குமரன் கடத்தியுள்ளார். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். முன்னதாக குழலி ஒருபுறம் தொடர்ந்து தங்கமயிலிடமும் அவரது அம்மாவிடமும் பல்வேறு கேள்விகளை அடுக்கி வந்தார். நேற்றைய எபிசோடில் திருமண நகைகளை எடை போடும் சூழலை ஏற்படுத்தினார். இந்நிலையில் தங்கமயில் மயக்கம் வந்ததாக சமாளித்ததும் நடந்தது. இந்நிலையில், தற்போது குமரன் தன்னுடைய பங்கிற்கு ராஜி மற்றும் மீனாவை கடத்தியுள்ளார். அவர்கள் மணப்பெண் இல்லை என்று தெரியவந்தால் என்னமாதிரியான சூழல் ஏற்படும் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X