Pandian stores 2: சரவணனை தூக்கி உள்ளே வைத்த முத்துவேல்.. கேள்விக்குறியான திருமணம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தன்னுடைய அம்மா வழுக்கிவிழ அவரை காப்பாற்றி வீட்டிற்குள் சென்று விடுகிறார் ராஜி. இதையடுத்து அங்குவரும் சக்திவேல் மற்றும் குமரன் அவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினையில் குமரன் பாண்டியனை அடித்து விடுகிறார்.
உடனடியாக குமரனை அடிக்க கதிர் பாய்கிறார். ஆனால் கோமதி உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் குமரனை வழியில் பார்த்து சரவணன், கதிர் மற்றும் செந்தில் மூவரும் இணைந்து தாக்குவதாகவும் அதனால் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இதன் முதல் சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்ற நிலையில், உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது சரவணனின் திருமணம் தங்கமயில் என்பவருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள சூழலில் திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. இதையொட்டிய கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக ஒளிபரப்பப்பட்டன.
பாண்டியனை அடித்த குமரன்: இந்நிலையில் இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். இதனிடையே தன்னுடைய அம்மா வாசலில் வழுக்கி விழ, அவரை காப்பாற்றி ராஜி வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். இதையடுத்து அங்குவரும் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் ஆகியோர் வீட்டைவிட்டு ராஜியை வெளியேற்றுகின்றனர். ராஜியை அடித்து வெளியில் தள்ளுகிறார் குமரன். இதை தடுக்கப் பாய்ந்த பாண்டியன் மீது குமரனின் அடி விழுகிறது. இதைப் பார்க்கும் கதிர், குமரனை அடிக்கப் பாய்கிறார். ஆனால் கோமதி, பாண்டியன் உள்ளிட்டவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.
குமரனை அடித்த சகோதரர்கள்: இந்நிலையில் தன்னுடைய அப்பாவை அடித்த குமரனை சும்மா விடக்கூடாது என்று சகோதரர்கள் மூவரும் கங்கணம் கட்டிக் கொள்வதாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து அடி உதைப்பட்டு குமரன் வீட்டில் இருப்பதாகவும் காட்டப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மூவரும் குமரனை அடித்ததாக அவரது நண்பர் கூறுகிறார். இதையடுத்து ஆவேசப்படும் சக்திவேல், அரிவாளுடன் அவர்களை வெட்ட கிளம்புகிறார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முத்துவேல், கோபத்தில் புத்தியை இழந்துவிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். அவர்களது வீட்டில் திருமணம் வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
சரவணனை கைது செய்த போலீசார்: திருமணம் நடக்கவுள்ள இந்த சூழலில் வீட்டில் மாப்பிள்ளை இல்லையென்றால், அண்ணன் -தம்பிகள் மூவரும் ஜெயிலில் இருந்தால் என்னவாகும் என்று கேட்பதாகவும் உடனடியாக சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து செல்வதாகவும் இந்த வார ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து கேள்விப்படும் பாண்டியன் மற்றும் கோமதி அதிர்ச்சியடைகின்றனர். பாண்டியன் காவல்நிலையத்திற்கு விரைய, அங்கே, சக்திவேல் எகத்தாளமாக பேசுகிறார். தொடர்ந்து இன்ஸ்பெக்டரும் எப்ஐஆர் போட்டாயிற்று என்றும் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுமாறும் கூறுவதாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











