Pandian stores 2 serial: மீண்டும் மீண்டும் அப்பாவிடம் அவமானப்படும் மீனா.. செந்தில் எடுக்கும் அதிரடி முடிவு!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளுக்காக முன்னதாக கோயிலில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்ட மீனா மற்றும் செந்தில், கோயிலில் அவரை பார்க்கின்றனர். ஆனால் அவரோ அவர்களை அவமானப்படுத்துவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய பிரமோவில் அதையொட்டிய காட்சிகளே காணப்பட்டன. பிறந்தநாள் பரிசுடன் மீனா மற்றும் செந்தில் இருவரும் மீண்டும் மீனாவின் அப்பாவை சென்று அவரது வீட்டில் சந்திக்க அதனால் ஏற்படும் பிரச்சினைகள் இந்த வார பிரமோவில் மையமாக காணப்படுகின்றன. இதனால் மீனா கண்கலங்கி அழுவதாகவும் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரமும் அதிகமான டிஆர்பியுடன் காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கமயில், சரவணன் உள்ளிட்டவர்களை பிரதானமாக கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் செந்தில் மற்றும் மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக காணப்பட்டன. தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளையொட்டி முன்னதாக கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுகிறார் மீனா. உடன் செந்திலும் சென்ற நிலையில் தன்னுடைய அப்பாவை கோயிலில் சந்திக்கிறார் மீனா.

Television Pandian stores 2 serial Vijay TV 2

கண்கலங்கிய மீனா: கோயிலில் தன்னுடைய அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறார். முன்னதாக அவரது 50வது பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று தாங்கள் திட்டமிட்டதையும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் தன்னுடைய கோபத்திலிருந்து சிறிதும் பின்வாங்காத அவர், தொடர்ந்து மீனாவை மட்டுமில்லாமல் செந்திலையும் அவமானப்படுத்துகிறார். இதனால் மனம் வெறுத்த நிலையில் தன்னுடைய கணவனை அழைத்துக் கொண்டு மீனா வீடு திரும்புவதாகவும் இதையொட்டி அவர் கண்கலங்கியதையும் கடந்த எபிசோட்களில் பார்க்க முடிந்தது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

செந்திலாக வெங்கட்: இந்த சீரியலில் மிகப்பெரிய மாற்றமாக செந்திலாக நடித்துவந்த வசந்த் வசி தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கட் செந்திலாக இணைந்துள்ளார். இவர் முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் கணவராக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவர்களது ஜோடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான பிரமோவில், மீனாவின் அப்பாவிற்காக பிறந்தநாள் பரிசு வாங்கிவரும் செந்தில், மீனாவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அவரை பார்க்க போவதாக காணப்படுகிறது.

இந்த வார ப்ரமோ: இதையடுத்து மீனா கொடுக்கும் பிறந்தநாள் பரிசை தூக்கி விசிறி அடிக்கிறார் அவர். மேலும் அவமானப்படுத்தும்வகையில் மீண்டும் பேசுகிறார். இதனால் கண்கலங்கும் மீனா அங்கிருந்து வெளியேறுகிறார். இதுகுறித்து தன்னுடைய தம்பி கதிரிடம் கண்கலங்கி பேசுகிறார் செந்தில். அவருக்கு தேவை கவர்மெண்ட் மாப்பிள்ளை தானே, தானே கவர்மெண்ட் வேலைக்கு தேர்வெழுதப் போவதாக செந்தில் கூறுகிறார். இதை கேட்கும் மீனா, தனக்காக தன்னுடைய கணவன் கவர்மெண்ட் வேலைக்கு முயற்சிப்பது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் செந்திலை கட்டி அணைத்துக் கொள்வதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X