Pandian stores 2: முத்துவேலிடம் சிக்கிய தங்கமயிலின் அப்பா.. விசாரிக்கும் போலீஸ்.. குட்டு வெளிப்படுமா
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களாகவே அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று சேனலின் இரண்டாவது இடத்தில் இடம்பெற்று வருகிறது. குடும்ப உறவுகளின் மகத்துவத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
பாண்டியன் -கோமதி தம்பதிக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள் உள்ள நிலையில் இவர்களின் உறவுநிலை, கோமதியின் அண்ணன்களின் பகை என அடுத்தடுத்த காட்சி அமைப்புகள் இந்த சீரியலில் சிறப்பாக காட்சிப்படுததப்பட்டு வருகின்றன. பொய் புகாரில் போலீஸ் ஸ்டேஷன் சென்றுவந்த கதிரின் பிரச்சினை தீர்க்கப்பட்ட நிலையில் தற்பேது தங்கமயிலின் விவகாரம் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் பாகம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் கலக்கிய நிலையில், அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடர் நிறைவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசன் துவங்கப்பட்டது. இந்த சீசனில் அப்பா மற்றும் மகன்களின் பாசப் பிணைப்பையும் குடுமப உறவுகளின் மகத்துவத்தையும் பிரச்சினைகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் காட்சிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிறப்பான வரவேற்பு: இந்த சீசனும் தொடர்ந்து அதிகமான டிஆர்பிகளை பெற்று சேனலில் இரண்டாவது சீரியலாக வலம்வந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அப்பாவாக ஸ்டாலினும் அம்மாவாக நடிகை நிரோஷாவும் நடித்துவரும் நிலையில் இவர்களின் ஜோடி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் மட்டுமில்லாமல் ஹேமா, வெங்கட் ஆகியோரும் இந்த சீசனிலும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கறார் காட்டும் மற்றும் பாசத்தை வெளிப்படுத்த தெரியாத அப்பாவாக பாண்டியன் கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார். இவரது கேரக்டர் இந்த சீரியலின் சக்சஸுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
திருடப்புகும் தங்கமயில் அப்பா: பொய்யாக குற்றச்சாட்டால் தன்னுடைய மகன் கதிர் சிறை சென்ற நிலையில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவர் வெளியில் வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருமகள்களை கோமதி திட்டுவதாகவும் அதையொட்டிய சென்டிமெண்ட் காட்சிகளும் காணப்பட்டன. இதனிடையே போலி நகைகள் கொடுத்தும் மற்றும் எம்ஏ படித்ததாக கூறியும் தங்கமயிலை பாண்டியன் மகன் சரவணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அவரது அம்மா பாக்கியம். இந்நிலையில் இந்த விவகாரம் தெரிந்துவிடாமல் இருக்க, வீடு புகுந்து அவற்றை திருடுவதாக பாண்டியன் வீட்டிற்குள் நுழைகிறார் தங்கமயிலின் அப்பா.
உண்மை வெளிப்படுமா?: நேற்றைய தினம் அவர் பிடிபடும சூழலில் அங்கிருந்து தப்பித்து, முத்துவேல் வீட்டின் கொல்லைக்குள் நுழைகிறார். அங்கு அவர்களிடம் அகப்படுவதாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான பிரமோ வெளியாகியுள்ளது. அதில் தங்கமயிலின் அப்பாவை போலீசில் முத்துவேல் பிடித்து கொடுப்பதாக காணப்படுகிறது. மேலும் இந்த விஷயத்தை வைத்து பாண்டியன் குடும்பத்தினரை கேவலமாக பேசுவதாகவும் காணப்பட்டது. இதனிடையே, கையும் களவுமாக சிக்கிய தன்னுடைய அப்பாவை காக்கும்வகையில் தங்கமயில் உண்மையை சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை வரும் வாரத்தின் எபிசோட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











