Pandian stores 2 serial: அடுத்தடுத்து பாண்டியனுக்கு தெரியவந்த உண்மைகள்.. கேவலப்படுத்தும் முத்துவேல்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தத் தொடரில் அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமான வகையில் எபிசோட்களாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வீட்டிற்கு தெரியாமல் ஹோம் டியூஷன் எடுத்துவரும் ராஜியின் நடவடிக்கை அவரது அப்பா மற்றும் சித்தப்பாவிற்கே தெரியும் சூழலை இந்த வார ப்ரமோவில் பார்க்க முடிகிறது. இதனால் பாண்டியன் அவமானப்படுவதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் இந்த வார ப்ரமோவில் அமைந்திருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தான் டியூஷன் எடுப்பதற்கான பர்மிஷன் பாண்டியனிடம் இருந்து கிடைக்காத நிலையில் வீட்டிற்கு தெரியாமல் ஹோம் டியூஷன் எடுக்கிறார் ராஜி. தன்னுடைய கணவன் கதிரிடமும் இந்த விஷயத்தை அவர் கூறாத நிலையில், மீனாவிற்கு மட்டுமே இந்த விஷயம் தெரிந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில், ராஜி டியூஷன் எடுக்கும் வீட்டிற்கு வருகிறார் சக்திவேல்.
அடுத்தடுத்த உண்மைகள்: அங்கு அவருக்கு தெரியாமல் ராஜி மறைந்துக் கொள்கிறார். ஆனாலும் வண்டி சாவியை மறந்துவிட்டு சென்ற அவர் மீண்டும் அதை எடுக்க வீட்டிற்குள்ளே வர, ராஜி அங்கு ஹோம் டியூஷன் எடுப்பதை பார்த்து விடுகிறார். இதனால் அவர் ஆத்திரமடைகிறார். இதனிடையே, வடிவின் நகைகள் குறித்த உண்மை தனக்கு உடனடியாக தெரிய வேண்டும் என்று முத்துவேலும் அவரை தள்ளி விடுகிறார். இதை பார்த்து பொறுக்க முடியாத மாரி, அவருடைய பெண் ராஜிக்கு தான் வடிவு தன்னுடைய நகைகளை கொடுத்ததாக உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் மறுபுறம் முத்துவேலும் ஆத்திரமடைவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது.
பாண்டியனை கேவலப்படுத்திய முத்துவேல்: அடுத்தடுத்து தெரியவந்துள்ள இந்த விஷயங்களால் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைகின்றனர். தொடர்ந்து பாண்டியனிடம் இதுகுறித்து கேவலமாக பேசுவதாகவும் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. ராஜி டியூஷன் எடுத்து கொண்டுவரும் பணத்தில்தான் வீட்டில் உலை வைக்கிறீர்களா என்று முத்துவேல் கேட்பதாக காணப்பட்டது. இதனால் பாண்டியன் ஆத்திரத்துடன் அவர் கேட்பது உண்மையா பொய்யா என்று ராஜியிடம் கேள்வி எழுப்புகிறார். இதனிடையே சக்திவேல் பாண்டியனை பார்த்து மானம் கெட்டவர்கள் என்று கூறுவதாகவும் காணப்பட்டது.
சக்திவேலும் ஆத்திரம்: மேலும் வடிவின் நகைகளையும் வாங்கியுள்ளதை சுட்டிக்காட்டி முத்துவேல் ஆத்திரப்படுகிறார். இதனிடையே, சக்திவேல் பாண்டியனை பார்த்து வெட்கமாக இல்லையா என்றும் கேள்வி எழுப்புகிறார். இதனால் பாண்டியன் ஆத்திரமடைவதாகவும் இந்த வார ப்ரமோவில் காணப்பட்டது. இதுபோன்ற அவமானங்களை சந்திக்க நேரும் என்பதாகத்தான் முன்னதாக ராஜி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் கதிருக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு ஹோம் டியூஷன் எடுத்து வந்தார் ராஜி. தற்போது இந்த விஷயம் பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், அடுத்தடுத்து சீரியல் எபிசோட்கள் எப்படி நகரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











