முதலிரவு அறையில் செந்தில் -மீனா, கதிர் -ராஜி ரொமான்ஸ்.. இப்படியெல்லாமா ஆசையை தீர்த்துக்குறது?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் நீண்ட இழுபறிக்கு பிறகு சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சீரியலின் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பிரமோவில் சரவணன் மற்றும் தங்கமயிலின் முதலிரவிற்கான ஏற்பாடுகளில் செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் மூவரும் ஈடுபடுகின்றனர். அறையை சிறப்பாக அலங்கரிக்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த சுவாரஸ்யங்களையும் இந்த பிரமோவில் காண முடிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் கேள்விக்குறியான சரவணனின் திருமணத்தை சபதம் செய்து நிறைவேற்றி வைக்கிறார் பாண்டியன். கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் தங்கமயிலுடன் சரவணனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது சரவணனுக்கும் தங்கமயிலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. இடையில் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த குமரன் செய்த சதித்திட்டமும் அரங்கேறியது.
குமரனின் சதித்திட்டம்: தங்கமயிலை கடத்தி அதன்மூலம் திருமணத்தை நிறுத்தி, பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க குமரன் சதித்திட்டம் தீட்டிய நிலையில், மண்டபத்திற்கு வந்த அவரது கோஷ்டியினர் மாற்றி மீனா மற்றும் ராஜியை கடத்துகின்றனர். இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையில், இந்த விஷயம் தெரியவந்து, குமரனே அவர்கள் இருவரையும் விடுவித்த சூழல் காணப்பட்டது. இந்த விஷயம் ராஜி மற்றும் மீனாவிற்கு தெரியவந்த நிலையில், குமரனை திட்டித் தீர்க்கின்றனர். தொடர்ந்து திருமணம் நடந்து முடிந்தவுடன் குமரனை போலீசில் பிடித்து கொடுப்போம் என்றும் எச்சரித்துவிட்டு வருவதாக காணப்பட்டது.
சரவணன் -தங்கமயில் திருமணம்: இந்நிலையில் சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்காக தன்னுடைய கையை மீறி பாண்டியன் அதிகமாக செலவு செய்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சரவணனின் முதலிரவிற்காக செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் அவர்களது அறையை பூக்களால் அலங்கரிக்கின்றனர். தொடர்ந்து கதிர் தனியாக அறையை அலங்கரித்து கொண்டிருக்கும்போது அங்குவரும் ராஜி, தவறி கட்டிலில் விழுவதாகவும் இதையடுத்து அவர்கள் இருவருக்கு இடையிலும் ரொமான்ஸ் பற்றிக் கொள்வதாகவும் இந்த வார பிரமோவில் காணப்பட்டது.
இந்த வார ப்ரமோ: தொடர்ந்து அங்குவரும் மீனா மற்றும் செந்தில் இருவரும் அவர்களை கலாய்ப்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாகி ஓடுகின்றனர். இதையடுத்து, அந்த இடத்தில் செந்தில் மற்றும் மீனாவின் ரொமான்ஸ் துவங்குகிறது. அவர்கள் இருவரும் முதலிரவு அறையில் டான்ஸ் ஆடி தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதனிடையே, முதலிரவுக்கு தயாரான தங்கமயிலை, அறைக்கு செல்லுமாறு கூறும் கோமதி, அவருடன் அங்கு வருகிறார். அங்கு இவர்களின் டான்சை பார்த்து என்னடா நடக்குது என்று அவர் கூறுவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது. ஆனால் இதை பார்க்கும் தங்கமயிலின் முகம் மாறுவதாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











