Pandian stores 2: நான் என்ன விடறது.. நீதான் விடனும்.. ராஜி -கதிரிடம் காதல் பூக்கும் அழகான தருணம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து துவக்கம் முதலே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் குடும்பப் பாங்கான கதையம்சத்தையும் விறுவிறுப்பாக கொடுக்க முடியும் என்பதை சாத்தியப்படுத்தி வருகிறார் இயக்குனர். தொடர்ந்து பாண்டியன் -கோமதி தம்பதியின் மகன்கள் அவர்களின் திருமணங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.

அனாதையாக இருந்த போதிலும் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என தற்போது தான் சொந்தங்கள் சூழ வாழ்வது குறித்து பாண்டியன் தொடர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். ஆயினும் அதை தன்னுடைய மகன்களிடம் வெளிப்படுத்தாமல் கெத்து காட்டி வருகிறார். தொடர்ந்து அவர்களிடம் கறாராகவே நடந்து கொள்கிறார். ஆயினும் அவரது பாசத்தை உணர்ந்தவர்களாகவே மகன்கள் மற்றும் மகள்கள் காணப்படுகின்றன

Vijay TV s Pandian stores 2 serial this week 29th April to 4th May 2024 promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதிகள், அவர்களது மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள், அவர்களின் பகை என ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அந்த வகையில் இந்த சீரியல் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களுடன் எபிசோடுகளை கொடுத்து வருகிறது. இதனிடைய இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது. தன்னுடைய கணவன் மற்றும் அவர்களது அண்ணன்களை போலீசார் கைது செய்த சூழலில் இதற்கு காரணமான தன்னுடைய அண்ணன் மற்றும் அப்பா, சித்தப்பா குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் ராஜி.

ராஜி அதிரடி: இதன் மூலம் தன்னுடைய கணவன் மற்றும் அவரது அண்ணன்களை வெளியில் கொண்டு வருகிறார் ராஜி. ராஜி மற்றும் கதிரின் திருமணம் அவர்களுக்கு விருப்பமில்லாமல் நடந்து இருந்தாலும் அவர்களுக்குள் தற்போது அன்பும் காதலும் எட்டிப் பார்க்கிறது. தனக்காக தன்னுடைய அண்ணனையும் அப்பா, சித்தப்பாவையும் பகைத்துக் கொண்ட ராஜி மீது மிகப்பெரிய அளவில் கதிருக்கு சாப்ட் கார்னர் ஏற்படுகிறது. அதை இந்த வார பிரமோவில் காண முடிகிறது. தன்னுடைய மனைவி ராஜியிடம் வம்பிழுக்கும் அவரது அண்ணன் குமரனை அடிக்க பாய்கிறார் கதிர்.

இந்த வார ப்ரமோ: ராஜி அதிகாலையில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, வேண்டுமென்றே வம்பிழுக்கும் வகையில் குமரன் கோலத்தை பைக்கில் சென்று அழித்துவிட்டு செல்கிறார். இதனால் ராஜி அதிர்ச்சி அடைகிறார். இதை மொட்டை மாடியில் இருந்து பார்க்கிறார் கதிர். இதனால் கோபமடையும் கதிர், கீழே வந்து குமரன் மறுபடியும் வண்டியில் வரும் சூழலில் தண்ணீர் பைப்பை வைத்து அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை வருகிறது. கோலம் போடுவது தெரியவில்லையா என்று கதிர் கேட்க வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தால் எப்படி வண்டியில் போவது என்று குமரன் எகத்தாளமாக கேள்வி எழுப்புகிறார்.

கதிர் -ராஜி ரொமான்ஸ்: இவர்கள் இருவரையும் ராஜி மற்றும் அப்பத்தா பிரித்து விடுவதாக இந்த பிரமோவில் காணப்பட்டது. தொடர்ந்து ராஜி சண்டையிடும் கதிரின் கையைப் பிடித்துக் கொண்டு சரவணன் மாமாவின் திருமணம் நடைபெறும் வரையிலாவது இந்த சண்டையை விட்டுவிடு என்று கூறுகிறார். இதையடுத்து நான் என்ன விடுவது நீ தான் விட வேண்டும் என்று தன்னுடைய கையை ராஜி பிடித்துக் கொண்டிருப்பது குறித்து நக்கல் அடிக்கிறார் கதிர். இதையடுத்து தான் கதிரின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ராஜி மௌனமாக கையை விடுகிறார். இதையடுத்து கதிர் ராஜிக்காக கோலம் போடுகிறார்.

கலாய்க்கும் மீனா: இதை பார்க்கும் மீனா இருவருக்கும் இடையில் இருந்த பாவம் பாசமாக மாறி தற்போது காதலாகிவிட்டதா என்று கலாய்ப்பதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. சரவணன் -தங்கமயில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரைவில் திருமண நாளும் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணத்தை குலைக்க, குமரன், சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆகியோர் தொடர்ந்து கங்கணம் கட்டி வருகின்றனர். ஆனால் தங்கமயில் குடும்பம் குறித்து குமரன் உள்ளிட்டவர்கள் விசாரித்து அறிவதாகவும் அவர்களின் அடாவடித்தனம் தெரிந்து பாண்டியன் குடும்பத்தினர் நன்றாக மாட்டட்டும் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் யூதிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X