பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கறுத்துப் போன நகைகள்.. பார்க்கும் கோமதி.. இந்த முறை மாட்டுவாரா தங்கமயில்?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராஜிக்கு அவரது அம்மா வடிவு தன்னுடைய நகைகளை கொடுத்த நிலையில், அதையொட்டி முத்துவேல் குடும்பத்தினர் பாண்டியனை கேவலமாக பேசுகின்றனர். இதையடுத்து அந்த நகைகளை திருப்பிக் கொடுக்கும் வகையில் கோமதி அவற்றை வங்கியில் இருந்து எடுத்து வருகிறார்.
இதனிடையே சென்னையில் இருந்து வந்த தங்கமயில், தன்னுடைய அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் தன்னுடைய நகைகளையும் வங்கியில் இருந்து எடுத்து வருவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. நகைகள் போலி என்ற விஷயம் பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரிவதற்கு முன்னதாக அந்த நகைகளை மீண்டும் எடுத்துச் சென்று விட வேண்டும் என்று பாக்கியம் தொடர்ந்து தங்க மயிலுக்கு கூறி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. ராஜியின் அம்மா வடிவு தன்னுடைய நகைகளை அவருக்கு கொடுத்த நிலையில் அதுகுறித்து முத்துவேல் மற்றும் சக்திவேலுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து பாண்டியனை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகின்றனர். இந்நிலையில் அந்த நகைகளை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து அவர்களிடம் திரும்பி கொடுக்க பாண்டியன் தன்னுடைய மனைவி கோமதியிடம் கூறுகிறார். இதையொட்டி இந்த வார பிரமோவில் காட்சிகள் காணப்பட்டன.
இந்த வார ப்ரமோ: சென்னையிலிருந்து ஹனிமூனை முடித்துவிட்டு திரும்பிய தங்க மயிலுக்கு அவரது அம்மா பாக்கியம், ராஜியின் நகைகளை எடுக்கும்போது அவரது நகைகளையும் எடுத்து வரும்படியும் அவை போலி என்று தெரியும் முன்பு, தான் ஏதாவது சொல்லி அந்த நகைகளை திரும்ப எடுத்துச் சென்று விடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து கோமதியுடன் செல்லும் தங்கமயில், தன்னுடைய நகைகளையும் எடுத்து வருவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்பட்டது. இதனிடையே தன்னுடைய நகைகளை தங்கமயில் பார்த்துக் கொண்டிருக்க, அவை கறுத்துப் போனதை அவர் பார்க்கிறார்.
சிக்கலில் தங்கமயில்: தன்னுடைய போலி நகைகளை மற்றவர்கள் பார்த்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவர் அச்சத்துடன் பார்க்கும் நிலையில், அங்கிருக்கும் அரசி, தங்கமயிலின் காசு மாலை மிகவும் அழகாக இருப்பதாகவும் தான் அதை போட்டு பார்க்கட்டுமா என்றும் கேட்கிறார். இந்நிலையில் அந்த நகைகளை கோமதி திரும்பி பார்ப்பதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. இதையடுத்து அந்த நகைகளை பார்த்து கோமதி என்ன மாதிரி ரியாக்ட் செய்வார் என்பது குறித்து அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்க முடியும். ராஜியின் நகைகளையும் அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் பாண்டியன் குடும்பத்தினர் திரும்பி தரும் நிலையில் அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளுக்கும் ரசிகர்கள் வெயிட்டிங்.
குட்டு வெளிப்படுமா?: இதனிடையே தங்க மயிலின் நகைகள் போலி என்ற குட்டு வெளிப்படுமா அல்லது வழக்கம் போல அவர் ஏதாவது சொல்லி தப்பித்து விடுவாரா என்பதும் இனிவரும் எபிசோடுகளில் காணக் கிடைக்கும். தங்கமயிலின் திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் 80 சவரன் நகைகள் போடுவதாக வாக்கு கொடுத்து, அதை போட்டு விட்டனர். ஆனால் அவர்கள் குடும்பத்தினருக்கு அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையில் போலி நகைகளையே தங்கமயிலின் அம்மா பாக்கியம் போடுகிறார். இதுபோன்ற பல விஷயங்களை மறைத்தே தங்கமயில் -சரவணன் திருமணத்தை அவர் நடத்தி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











