Pandian stores 2: பத்து பேருக்கு ஒத்த ஆளா சமைக்க முடியுமா.. மீனா -ராஜியிடம் சவால் விட்ட பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் நடந்து முடிந்துள்ள சூழலில் தன்னுடைய அம்மா பாக்கியத்தின் அறிவுரைப்படி அந்த குடும்பத்தில் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தங்கமயில் ஈடுபடுகிறார்.

முதல் நாளிலேயே சுவையான சமையலை செய்து தன்னுடைய மாமனார் பாண்டியனை அசத்துகிறார். அவர் தங்கமயிலை பாராட்டுவதுடன் மீனா மற்றும் ராஜிக்கும் இதுபோல சமைக்க முடியுமா என்று சவால் விடுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதனால் ராஜி மற்றும் மீனா மட்டும் இல்லாமல் கோமதியும் கடுப்பாவதாகவும் இந்த பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவி முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் நடந்து முடிந்துள்ள சூழலில் தன்னுடைய அம்மா பாக்கியத்தின் அறிவுரைப்படி தன்னுடைய கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை கைக்குள் போட்டுக் கொள்ளும் நடவடிக்கையில் தங்கமயில் ஈடுபடுகிறார். திருமணமாகி வந்த மறுநாளே தன்னுடைய ஆட்டத்தை துவங்குகிறார். அதிகாலை நான்கு மணியளவில் இருந்து வாசலுக்கு கோலம் போட்டது முதல் டீ காபி போட்டு வைப்பதிலிருந்து அனைவருக்கும் டிபன் ரெடி செய்து விட்டு தொடர்ந்து வீட்டின் அனைத்து வேலைகளையும் தானே செய்கிறார் தங்கமயில்.

television pandian stores 2 serial vijay tv

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் தங்கமயில் சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் பாண்டியன் பாராட்டி தள்ளுகிறார். அனைத்துமே மிகவும் சிறப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். இந்நிலையில் அருகில் நின்றபடி இதை கேட்கும் கோமதி, இத்தனை வருடங்களாக தான் சமைத்து வரும் நிலையில் ஒரு நாளாவது அது குறித்து பாராட்டி இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து தொடர்ந்து பேசும் பாண்டியன் 10 பேருக்கு ஒரே ஆளாக இவ்வளவு ருசியாக சமைக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து ராஜி மற்றும் மீனாவையும் குறிப்பிட்டு இதுபோல சமைக்க முடியுமா என்று சவால் விடுகிறார்.

television pandian stores 2 serial vijay tv

கடுப்பாகும் மீனா -ராஜி: இதை கேட்கும் தங்கமயில் உற்சாகத்துடன் சிரிப்பதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. பாண்டியனின் இந்த கேள்வியால் ராஜி மற்றும் மீனாவின் முகம் மாறுகிறது. தொடர்ந்து மொட்டை மாடியில் பழனிவேல், கதிர், செந்தில் ஆகியோர் பேசிக்கொள்வதாகவும் அப்போது பழனிவேல், இந்த வீட்டில் மாமியார் -மருமகள் சண்டை வராது என்றும் ஆனால் மாமனார் -மருமகள் சண்டை வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார். இந்நிலையில் சமையலறையில் கோமதியிடம் மீனா மற்றும் ராஜி இருவரும் பேசுவதாகவும் கோமதி கோபத்துடன் இனி தன்னுடைய கணவன் தங்கமயிலை தனியாக அழைத்து ஏதாவது சொல்லட்டும் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபத்துடன் கூறுவதாகவும் காணப்பட்டது.

television pandian stores 2 serial vijay tv

கோமதி கோபம்: உடனடியாக பாண்டியன் தங்கமயிலை அழைத்து முக்கியமான விஷயம் பேச உள்ளதாக கூறுவதாகவும் இந்த வார பிரமோவின் காணப்படுகிறது. மிகவும் மனமொத்த தம்பதிகளாக பாண்டியன் மற்றும் கோமதி காணப்படுகின்றனர். ஒன்றுமே இல்லாத தனக்கு கோமதி கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று அனைவரிடமும் பாண்டியன் தொடர்ந்து கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையின் அவர்கள் இருவருக்குள்ளேயே தங்கமயில் நடவடிக்கைகள் சண்டையை மூட்டி விடும் படி அமைகிறது. மேலும் மீனா மற்றும் ராஜியும் தங்கமயில் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும் அடுத்தடுத்த எபிசோடுகளில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X