Pandian stores 2: அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன்.. கதிருக்காக குமரனிடம் மல்லுக்கட்டிய ராஜி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சரவணன் -தங்கமயில் திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, அதை குலைக்கும் வகையில் காய் நகர்த்தி வருகின்றனர் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன். இவர்களின் சதியை மீறி இந்த திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விருப்பமில்லாத திருமணம் செய்து கொண்ட போதிலும் கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் இடையில் தற்போது அன்னியோன்னியம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அடுத்தடுத்த காட்சிகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுத்து வருகிறார் இயக்குநர். மொத்தத்தில் கல்யாண கலாட்டாக்களுடன் இவர்களது ரொமான்ஸ் காட்சிகளும் சிறப்பாக அமைந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து துவக்கம் முதலே ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகி உள்ளது. விருப்பமில்லாமல் கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் திருமணம் நடந்த சூழலில் அவர்களுக்கு அடுத்தடுத்து அன்னியோன்யம் ஏற்படும் சூழ்நிலைகள் சீரியலில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. தன்னுடைய கணவன் கதிர் மற்றும் அவரது அண்ணன்களை தன்னுடைய அண்ணன் மற்றும் அப்பா, சித்தப்பா ஆகியோர் சிறையில் தள்ள முற்பட்ட நிலையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ராஜி அவர்களுக்கு எதிராக கம்பளைண்ட் கொடுத்து கதிர் உள்ளிட்டவர்கள் வெளியில் வர உதவி செய்தார்.
ராஜியின் மனமாற்றம்: தொடர்ந்து தனக்கு எதிரிகளாகவே காட்டப்பட்டு வந்த தன்னுடைய அத்தை மற்றும் அவரது குடும்பத்தினரை தற்போது ராஜி சிறப்பாக புரிந்து கொண்டுள்ளார். தனக்காகவும் தன்னுடைய தேவைகளுக்காகவுமே கதிர் பார்ட் டைம் வேலைக்கு செல்வதையும் ராஜி புரிந்து வைத்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய மாமியார் வீட்டில் இருந்து தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார் ராஜி. கதிர் -ராஜி திருமணத்தை பாண்டியன் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சகஜமாக அடுத்தடுத்து பேச துவங்கியுள்ளார். ஆயினும் தனக்கு திருட்டு பட்டம் வாங்கி கொடுத்த கதிரை அவர் மன்னிக்க தயாராக இல்லை. அவ்வப்போது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கதிர் -ராஜி அன்னியோன்னியம்: இந்நிலையில் அவ்வப்போது ராஜி மற்றும் கதிர் இருவரும் தங்களுக்கு இடையே உள்ள பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் சூழ்நிலைகளும் காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்னதாக ராஜி கோலம் போட்டதை அழித்த குமரனை அடிக்க சென்றார் கதிர். தொடர்ந்து அப்பத்தா மற்றும் ராஜி இருவரும் அவர்களை விலக்கி விட்டதையும் பார்க்க முடிந்தது. இன்னிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஃபுட் டெலிவரி செய்யும் கதிரை சரவணன் அலைக்கழிக்கிறார். இதை கேள்விப்படும் ராஜி தன்னுடைய அண்ணன் மீது கோபப்படுகிறார்.
கதிருக்காக குமரனிடம் சண்டை: தொடர்ந்து இரவு நேரத்தில் வீட்டு வாசலில் இருக்கும் குமரன் மீது கல்லெறிகிறார் ராஜி. தன்மீது கதிர் தான் கல்லெறிந்ததாக நினைக்கும் குமரன் தொடர்ந்து கதிரிடம் சண்டைக்கு வருகிறார். இதையடுத்து இடையில் புகும் ராஜி, குமரனிடம் கதிருக்காக சண்டை போடுகிறார். வேலையை பார்த்துக் கொண்டு செல்லவில்லை என்றால் அண்ணன் என்று கூட பார்க்க மாட்டேன் என்று ராஜி கூறுகிறார். இதை பார்க்கும் கதிர், இவ்வளவு சிறியதாக இருந்துக் கொண்டு எகிறி எகிறி சண்டை போடுகிறாயே என்று கேட்கிறார். அதற்கு ராஜி, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று கூறுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்பட்டது. விருப்பமில்லாத திருமணத்தால் இருவரும் திட்டிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்த சூழலில் சிறிது சிறிதாக தற்போது இருவருக்கும் சிறப்பான அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











