Pandian stores 2: மாமான்னு கூப்பிடலாமா மாமா.. சரவணனிடம் உரிமையுடன் பேசிய தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இடம்பெற்று கெத்து காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையில் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து குடும்ப உறவுகளின் மகத்துவத்தை கதைக்களமாக கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

இந்த சீசனில் கண்டிப்பான மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்ட பாண்டியன் மற்றும் அதே போன்ற மனநிலையுடன் செயல்படும் அவரது மகன்கள் மற்றும் மகள்கள் என அடுத்தடுத்த கேரக்டர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களுக்கு வரும் மருமகள்களும் அதே போன்ற மனநிலையுடன் காணப்படுகின்றனர். தற்போது கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

Vijay TV s Pandian stores 2 serial this week 8th -13th April 2024 promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் சில மாதங்களிலேயே இடம்பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்தடுத்த இயல்பான எபிசோட்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக மாறியுள்ளது. இதன் முதல் சீசன் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி முன்னணியில் இருந்தது. முன்னணியில் இருந்த போதே இந்த சீரியல் நிறைவு செய்யப்பட்டு உடனடியாக இரண்டாவது சீசனும் துவங்கப்பட்டது. இந்த சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவையும் மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: கண்டிப்பான மற்றும் உழைப்பிற்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் தரும் அப்பாவாக இந்த சீரியலில் பாண்டியன் என்ற கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார். அவருக்கு மனைவியாக பிரபல நடிகை நிரோஷா கோமதியாக களமிறங்கியுள்ளார். இவர்களின் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் கோமதியின் பகைமை பாராட்டும் அண்ணன்கள் அவர்களது குடும்பம் என இந்த சீரியல் குறைவான கேரக்டர்களை வைத்து நிறைவான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நீண்ட இழுபறிக்கு உள்ளான சரவணன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பொய்களை அடுக்கும் பாக்கியம்: அவருக்கு கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் தங்கமயில் என்ற பெண்ணை பார்த்து பாண்டியன் குடும்பத்தினர் நிச்சயித்து உள்ளனர். தங்கமயில் குடும்பத்தினர் குறித்து பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் உயர்வாக நினைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு நேரெதிரான குண நலன்களை அவர்கள் கொண்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. தங்கமயில் அடக்க ஒடுக்கமான பெண் என்பதாக பாண்டியன் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் அவர் தன்னுடைய அம்மா அப்பா போலவே அடாவடியான கேரக்டராக காணப்படுகிறார். இந்நிலையில் இரு வேறு குணாதிசயங்களை கொண்ட இருவர் திருமணம் மற்றும் அதன் மூலம் இணையும் குடும்பங்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை, பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதை இனிவரும் எபிசோடுகளில் இந்த சீரியல் மூலம் பார்க்க முடியும்.

Vijay TV s Pandian stores 2 serial this week 8th -13th April 2024 promo

இந்த வார ப்ரமோ: இதனிடையே இந்த வாரத்திற்கான பிரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. தங்கமயிலை அவரது வீட்டில் சென்று பெண் பார்த்துவிட்டு வரும் பாண்டியன் குடும்பத்தினர், ஹோட்டலில் ஆர்டர் செய்து தடபுடல் விருந்து சாப்பிட தயாராகின்றனர். அப்போது தங்கமயில் அம்மா பாக்கியம் சரவணனுக்கு போன் செய்கிறார். பாண்டியனுக்கு செய்ததாக நினைத்து சரவணனுக்கு கால் செய்து விட்டதாக கூறும் அவர், தன்னுடைய மகளிடம் போனை கொடுக்கிறார். இதையடுத்து பேசும் தங்கமயில், சாப்பிட்டாரா என்று கேட்கிறார். பக்கத்தில் இருக்கும் பாக்கியம் சரவணனை மாமா என்று கூப்பிடும்படி கூறுகிறார்.

தங்கமயில் கேட்ட கேள்வி: இதையடுத்து சரவணனிடம் பேசும் தங்கமயில், உங்களை மாமா என்று கூப்பிடலாமா மாமா என்று கேட்கிறார். போன் ஸ்பீக்கரில் இருக்க, இதை கேட்டு சரவணன் அசடு வழிகிறார். இதையடுத்து பாண்டியன் குடும்பத்தினர் சரவணனை ஓட்டுவதாக இந்த வார ப்ரொமோவில் காணப்படுகிறது. அவர்கள் அனைவரும் இணைந்து மாமா மாமா என்ற பாடலை பாடி சரவணனை கலாய்ப்பதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. முன்னதாக சரவணனை பிடிக்கவில்லை என்று கூறிய தங்கமயில் தற்போது சகஜமாக பேசத் துவங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X