Pandian stores 2: வீட்ல நடக்குற எல்லா பிரச்சினைக்கும் காரணம் நீதான்.. மீனாவை கோபமாக பேசிய பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீரியல் தொடர்ந்து சேனலில் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களைக் கவரும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை இந்த சீரியல் கொடுத்து வருகிறது.

புதிதாக திருமணமான தங்கமயில் தன்னுடைய அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த குடும்பத்தினரிடம் தொடர்ந்து அடுத்தடுத்த வகையில் பிரச்சினைகளை மேற்கொண்டு வருகிறார். ராஜி எடுப்பதாக இருந்த டியூஷனையும் அவர் பாண்டியனிடம் போட்டு கொடுத்து குலைப்பதாக காணப்பட்டது. மீண்டும் அந்த டியூஷன் விவகாரத்தை வைத்து இந்த வார பிரமோவும் வெளியாகியுள்ளது.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. கதிர் தினந்தோறும் கல்லூரியிலும் படித்துக் கொண்டு வேலைக்கும் சென்று மிகவும் சிரமப்படுவதை பார்க்கும் ராஜி, தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்ய யோசித்து வருகிறார். முன்னதாக டியூஷன் எடுக்க அவர் முயற்சித்த நிலையில், தங்கமயில் சதி திட்டத்தால் அது நடக்காமல் போகிறது. இந்நிலையில் மீனாவிடம் இது குறித்து ராஜி மீண்டும் பேசுகிறார். அப்போது தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்மணியின் குழந்தைகளுக்கு ஹோம் டியூஷன் தேவைப்படுவதாகவும் அதை வேண்டுமானால் ராஜி செய்யலாம் என்றும் மீனா ஆலோசனை கூற தான் கண்டிப்பாக அதை செய்வதாக ராஜி கூறுவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது.

இந்த வார ப்ரமோ: இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாண்டியன் ராஜி மற்றும் மீனாவிடம் பயங்கர ஆக்ரோஷத்துடன் சண்டையிடுவதாக காணப்படுகிறது. இந்த குடும்பத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்டு அனைவரும் இருந்ததாகவும் மீனா வந்தவுடன் அனைத்தும் மாறிவிட்டதாகவும் அவர் சத்தமிடுகிறார். தொடர்ந்து வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் மீனா தான் என்றும் அவர் ஆத்திரத்துடன் கூறுகிறார். மீனா கூறி ராஜி ஹோம் டியூஷன் எடுக்க திட்டமிடுவது குறித்து குறிப்பிட்ட பாண்டியன் இவ்வாறு ஆத்திரத்துடன் பேசுகிறார்.

மீனாவிடம் பாண்டியன் ஆத்திரம்: இதனால் அழுது கொண்டே மீனா, தன்னுடைய அறைக்கு செல்வதாக இந்த வார ப்ரமோவில் காணப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கடையில் பாண்டியனிடம் செந்தில் கேள்வி எழுப்புகிறார், மீனாவை வரவர அதிகமாக திட்டுவதாகவும் வீட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மீனா என்று ஏன் பேசினீர்கள் என்று செந்தில் கேட்க தன்னுடைய மருமகளிடம் எப்படி பேச வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று பாண்டியன் கூறுவதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் மாலை வீட்டிற்கு வரும் பாண்டியன் மீனா மற்றும் ராஜிக்கு தான் ஸ்னாக்ஸ் வாங்கி வந்ததாகவும் தன்னை தன்னுடைய அப்பா போல நினைத்துக் கொள்ளுமாறும் மீனாவிடம் கூறுகிறார். தன்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார்.

சமாதானப்படுத்திய பாண்டியன்: தொடர்ந்து தான் வாங்கி வந்து கொடுத்தால் சாப்பிட மாட்டாயா என்று அவர் மீனாவிடம் கேள்வியெழுப்ப, சாப்பிடுவேன் என்பதாக கூறி மீனா அந்த ஸ்னாக்ஸை எடுத்து சாப்பிடுவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்பட்டது. பாண்டியன் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரிடமும் கண்டிப்பாக நடந்து கொள்கிறார், ஆனாலும் மீனா மற்றும் ராஜி அவரை புரிந்து கொள்பவர்களாகவே காணப்படுகின்றனர். மீனாதான் அந்த குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என அனைவரும் முன்னிலையிலும் ஆத்திரத்துடன் பேசினாலும் மாலை தன்னுடைய கெத்து எல்லாம் விட்டுவிட்டு மீனாவை சமாதானம் செய்யும் முயற்சியில் பாண்டியன் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது.

தங்கமயில் திட்டம்: இதனால் அந்த குடும்பம் கட்டுக் குலையாமல் இருப்பதற்கு பாண்டியன் தொடர்ந்து காரணமாக இருப்பார் என்பது தெரிய வருகிறது. ஆனாலும் ஒற்றுமையுடன் இருக்கும் மீனா, கோமதி மற்றும் ராஜியை பிரிக்கும் திட்டத்தை தங்கமயிலுக்கு பாக்கியம் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களது திட்டம் பலிக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம். பாண்டியன் -கோமதி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் மனமொத்து மிகவும் ஒற்றுமையாகவும் பாசமாகவும் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X