Pandian stores 2: குடும்பத்துடன் ஹனிமூன் டிரிப் போன செந்தில் -மீனா.. இவ்வளவு அலப்பறையா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் குடும்ப சென்டிமெண்ட் தூக்கலாக காணப்படுகிறது. இதன் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களுடைய உறவுகளை மையமாக கொண்டு சீரியலை கொடுத்த இயக்குநர், இந்த இரண்டாவது சீசனின் தந்தை -மகன்களின் உறவை மையப்படுத்தி அடுத்தடுத்த எபிசோட்களை சிறப்பாக கொடுத்து வருகிறார்.

அப்பாவை மீறி தான் காதலித்த மீனாவை திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில். அவருக்கு அவருடைய தம்பி கதிரும் உதவுகிறார். இதனால் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் செந்தில் -மீனாவின் பிரச்சினைகளையும் அடுத்தடுத்து காட்சிப் படுத்தி வருகிறார் இயக்குநர். மீனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் இந்த முடிவை செந்தில் எடுக்க, மீனாவின் அப்பா -அம்மா அவரை வெறுத்து ஒதுக்கியதும் நடந்தது. இனிமேல் தங்களின் முகத்தில் முழிக்கக்கூடாது என்று அவர் கூறுவதாக காட்டப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் மீனா.

Vijay TVs Pandian stores 2 serial this week promo released

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: தன்னுடைய மகன்களில் கறாராக நடந்துக் கொள்கிறார் பாண்டியன். பாண்டியன் -கோமதி தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பதாக காட்டப்படுகிறது. சிறுவயதில் அவர் கோமதியை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்த நிலையில், கோமதியின் அண்ணன்களும் பகையுடன் காணப்படுகின்றனர். இருந்தாலும் கோமதி மீது இருக்கும் பாசத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் அவர்கள் காணப்படுவதையும் இந்த சீரியலில் காண முடிகிறது. கோமதியின் பிறந்தநாளுக்கு கோயிலுக்கு சென்று வழிபடும் அவர், அவரது கணவர் பாண்டியனை ஏற்காமல் விரோதத்தை காட்டி வருகின்றனர்.

செந்தில் -மீனா காதல் திருமணம்: இந்நிலையில் தான் காதலிக்கும் மீனாவை திருமணம் செய்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார் செந்தில். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டாலும், மீனாவிற்காக செந்திலை ஏற்கிறார் பாண்டியன். ஆனாலும் இந்த திருமணத்திற்கு காரணமாக கதிரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் மீனா மீது கடுப்பாகிறார் கோமதி. தொடர்ந்து கதிரை வீட்டிற்கு அழைத்து பாண்டியன் அவரை ஏற்கும்படி செய்கிறார் மீனா. ஆனாலும் வளர்ந்த பிள்ளைகள் மீது பாண்டியன் காட்டும் கட்டுப்பாடுகள் அவரை அதிகமாக யோசிக்க வைக்கிறது. 200 ரூபாயை கல்லாவிலிருந்து எடுத்ததற்காக செந்திலை வைத்து செய்கிறார் பாண்டியன்.

மனஉளைச்சலில் மீனா: இதுபோன்ற அந்த குடும்பத்தின் சூழல் மீனாவிற்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையே வெளியில் வைத்து தன்னுடைய அப்பா -அம்மாவை பார்க்கும் சூழல் மீனாவிற்கு ஏற்படுகிறது. மீனாவை அதிகமாக திட்டும் அவரது அப்பா, இனிமேல் தங்களின் முகத்தில் முழிக்க வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் அவர் எங்கேயாவது வெளியூருக்கு சென்று வரலாம் என்று செந்திலிடம் கூறுகிறார். ஹனிமூன் ட்ரிப்பாகவும் அது அமையும் என்று அவர் கூற, தன்னுடைய தந்தையிடமி பர்மிஷன் வாங்க முடியாமல் முழிக்கிறார் செந்தில்.

குடும்பத்துடன் ஹனிமூன் டிரிப்: இதையடுத்து தானே தன்னுடைய மாமனாரிடம் இதுகுறித்து கேட்க, மிகுந்த யோசனைக்கு பிறகு, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கொடைக்கானல் பயணம் செல்வதாக திட்டமிடுகின்றனர். இந்நிலையில் இந்த சுற்றுலாவிற்காக கோமதி உள்ளிட்டவர்கள் சப்பாத்தி போன்றவற்றை தயாரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்காக பிரமோவில், சுற்றுலா என்றால் ஜாலியாக செல்ல வேண்டும் என்றும் முதல்நாள் வரைக்கும் சமைத்து பேக் செய்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் மீனா சொல்வதாக காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பிரமோ: இதற்கு கதிரும் ஆமாம் போடுகிறார். உடனே குறுக்கிடும் கோமதி, இதை உன்னுடைய அப்பாவிடம் கூறுவாயா என்று கேட்கிறார். நைட் முழுவதும் அவர் கிளாஸ் எடுப்பார் என்று அவர் கூறுவதாக பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து அனைவரும் காரில் குடும்பமாக கொடைக்கானலுக்கு செல்வதாகவும் காட்டப்படுகிறது. அங்கு சென்று அவர்கள் எந்தமாதிரியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் இல்லை சச்சரவுகள் ஏற்படுமா என்பதை இந்த வார எபிசோட்களில் பார்க்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிரியல் தற்போது சேனலில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X