Pandian stores 2 serial: உங்க நொண்ணி.. தங்கமயிலால் ஏகத்துக்கும் கடுப்பான மீனா.. முழித்த செந்தில்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மீனா சென்னைக்கு ட்ரெய்னிங் செல்வது குறித்த காட்சிகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது. செந்திலுக்கு கடையில் அதிகமாக வேலை இருக்கும் என்பதால் மீனாவுடன் அவரை அனுப்ப முடியாது என்று பாண்டியன் கூறிவிடுகிறார்.
இதனால் செந்தில் மற்றும் மீனா இருவரும் தனியாக சென்னைக்கு இரு தினங்கள் செல்வது குறித்து முன்னதாக போட்டிருந்த திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்னை செல்வது தன்னுடைய பொறுப்பு என்று கோமதி உத்தரவாதம் அளிக்கிறார். இதனால் மீனா சமாதானம் அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. இன்றைய தினம் வழக்கம் போல அரசி கடை கணக்குகளை தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் அவர்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கும் வேளையில் தினமும் அரசி தான் கடை கணக்குகளை பார்க்க வேண்டுமா நான் வேண்டுமானால் உதவி செய்கிறேன் என்று தங்கமயில் அதிலும் தன்னுடைய மூக்கை நுழைக்க தயாராவதாக காணப்பட்டது. இதையடுத்து கோமதி தான் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணம் சிறப்பாக நடந்தால் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வருவதாக வேண்டியுள்ளதாக பாண்டியனிடம் கூறுகிறார்.
மீனாவின் ட்ரெயினிங்: பாண்டியனையும் கோயிலுக்கு உடன்வர கோமதி கேட்கும் சூழலில் மகன்கள் அல்லது மருமகள்களில் யாரையாவது அழைத்து செல்லுமாறு பாண்டியன் கூறுகிறார். அடுத்த வாரத்தில் ட்ரெயினிங்கிற்காக சென்னைக்கு செல்ல வேண்டியது உள்ளதாக மீனா கூறுகிறார். தொடர்ந்து இரண்டு நாட்களாக தான் சென்னைக்கு ட்ரெய்னிங் போவது குறித்து பாண்டியனிடம் கூறுமாறு மீனா கூறி வந்த சூழலில் அதை கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார் செந்தில். இந்நிலையில் இன்றைய தினம் மீனாவே அதை கூறும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ட்ரெயினிங்கிற்கு எல்லாம் தனியாக வரச் சொல்வார்களா என்று பாண்டியன் கேட்கிறார்.
கடுப்பான மீனா: உடனே தங்க மயிலும் தனியாக சென்னைக்கு எப்படி போவீர்கள், தனியாக ஹோட்டலில் தங்குவீர்களா? நானெல்லாம் அப்படி தங்க மாட்டேன் என்று பலவாறாக மீனாவை கடுப்பேற்றுகிறார். வீட்டில் வேலை உள்ளதாக கூறுமாறும் ஆலோசனை கூறுகிறார். ஆனாலும் மீனா தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டாமல் தொடர்ந்து அமைதி காக்கிறார். இந்நிலையில் செந்தில் நான் வேண்டுமானால் மீனாவுடன் சென்று வருகிறேன் என்று கூற, நீ சென்று விட்டால் கடை வேலைகளை யார் பார்ப்பார்கள் என்று பாண்டியன் தட்டிக் கழிக்கிறார். தொடர்ந்து கோமதியை மீனாவுடன் சென்று வருமாறு பாண்டியன் கூறுகிறார்.
தங்கமயில் யோசனை: கோமதியும் இதற்கு தலையசைக்க, பக்கத்தில் இருக்கும் ராஜி அவர் சென்னைக்கு இரண்டு நாட்கள் சென்று வந்தால் தங்கமயில் இந்த வீட்டில் அனைத்து அதிகாரத்தையும் தனதாக்கி கொள்வார் என்று எச்சரிக்கிறார். இதையடுத்து கோமதியும் தான் சென்னைக்கு செல்லவில்லை என்று கூறிவிடுகிறார். இந்நிலையில் தங்கமயில் இடை நுழைந்து தானும் சரவணனும் மீனாவுடன் செல்லட்டுமா என்று கேட்க, இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று பாண்டியனும் ஓகே சொல்கிறார். ஆனால் கதிர் உள்ளிட்டவர்கள் மீனாவிற்கு ஒரு ரூம் தான் தருவார்கள் என்றும் அதில் எப்படி மூவர் தாங்க முடியும் என்றும் கேட்க அந்த யோசனையும் நிராகரிக்கப்படுகிறது.
மீனா ஆத்திரம்: இந்நிலையில் இன்னும் ஒரு வார காலம் இருப்பதால் அப்போது யோசித்துக் கொள்ளலாம் என்று பாண்டியன் அங்கிருந்து செல்கிறார். இந்நிலையில் மீனா மிகுந்த யோசனையுடன் காணப்படுவதை பார்த்து கோமதி, மீனாவும் செந்திலும் சென்னை செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கிறார். தான் மாமாவிடம் பேசி ஓகே வாங்குவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அறைக்குள் செந்திலிடம் பேசும் மீனா, தங்கமயிலின் அடுத்தடுத்த பேச்சுக்கள் குறித்து ஆத்திரப்படுகிறார். தன்னுடன் அவரும் சரவணனும் வருவதாக கூறியதை சுட்டிக்காட்டி கோபப்படுகிறார். இனிமேல் அவர்கள் எங்காவது தனியாக சென்றால் தானும் உடன் வருவதாக முன்னால் போய் நிற்பேன் என்று மீனா கோபத்துடன் கூற, அவரை மீனுக்குட்டி என்று பலவாறாக அழைத்து சமாதானப்படுத்துகிறார் செந்தில்.


Click it and Unblock the Notifications











