செலவுகளை தொடர்ந்து இழுத்துவிட்ட தங்கமயில் குடும்பத்தினர்.. 3 மடங்கு செலவு செய்த பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மற்றும் உழைப்பாளியான பாண்டியனின் திட்டமிட்ட வாழ்க்கை மற்றும் செலவுகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து காட்சிப்படுத்தி வருகிறது. இதனால் பாண்டியன் கேரக்டரில் தங்களை இணைத்து பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் தன்னுடைய மூன்று மகன்களுக்கும் திருமணத்திற்காக சேர்த்து வைத்த காசை தன்னுடைய மகன் சரவணனுக்காக செலவழிக்க போவதாக பாண்டியன் முன்னதாக கூறினார்.
இந்நிலையில் அவரது திருமணத்திற்கு ஜவுளி எடுக்க குடும்பத்தினருடன் பாண்டியன் சென்றதையும் அங்கு ஜவுளிக்கு மட்டுமே மூன்று லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவானதையும் பார்க்க முடிந்தது. தங்கமயில் குடும்பத்தினர் ஒன்றுக்கும் இல்லை என்றாலும் அவர்களின் ஆடம்பரம் மிகப்பெரிய அளவில் காட்சிப்படுத்தப்படுகிறது. தன்னுடைய அப்பாவை எதிர்த்து கூட பேசாத சரவணன் தங்கமயிலிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடப் போகிறாரோ என்று ரசிகர்கள் தற்போதே அவருக்காக கவலைப்பட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தொடர்ந்து பாண்டியனின் முழி பிதுங்கும் கல்யாண செலவுகள் குறித்த அடுத்தடுத்த எபிசோட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கல்யாண ஜவுளி எடுப்பதற்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் தங்கமயில் குடும்பத்தினருடன் ஜவுளி கடைக்கு செல்கிறார் பாண்டியன். முன்னதாகவே அவர் எத்தனை பேருக்கு புடவை, எத்தனை பேருக்கு வேட்டி சட்டை என்று கணக்குப் போட்டு ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் போடுகிறார். ஆனால் தங்கமயிலுக்கு எடுக்கப்படும் முகூர்த்த புடவை மட்டுமே ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் விலைக்கு எடுக்கப்படுகிறது.
பாண்டியன் அதிர்ச்சி: இதனால் மிகவும் அதிர்ச்சி அடைகிறார் பாண்டியன். தொடர்ந்து தங்கமயிலின் அம்மா ரிசப்ஷனுக்கும் புடவை எடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். இதனால் மீனாவின் உதவியை குடும்பத்தினர் அனைவரும் கேட்கின்றனர். பட்ஜெட்டிற்குள் புடவையை எடுப்பதாக கூறும் மீனா, தங்கமயிலை ஒருவழியாக சமாதானப்படுத்தி 12 ஆயிரம் ரூபாய்க்கு ரிசப்ஷன் புடவையை எடுக்க வைக்கிறார். இதனால் தங்கமயில் மற்றும் அவரது அம்மா பாக்கியத்தின் முகம் மாறினாலும் அனைவரும் கூறுவதை கேட்டு அவர்கள் அந்த புடவையை எடுத்துக் கொள்கின்றனர். தன்னுடைய மகளுக்கு ஆரி ஒர்க்கில் பிளவுஸ் எடுக்க வேண்டும் என்று பாக்கியம் கூறுகிறார்.

சரவணனுக்கு கோட் சூட்: அதற்கு தனியாக செலவாகிறது. இது மட்டுமில்லாமல் சரவணனுக்கு கோட் சூட் எடுக்க வேண்டும் என்றும் அதை போட்டால் ராஜா போல இருப்பார் என்றும் பாக்கியம் கூற, அதற்கு எக்ஸ்ட்ரா செலவாகிறது. இதையடுத்து மீனா, ராஜி, கோமதி உள்ளிட்டவர்கள் 2000, 3000 என குறைந்த பட்ஜெட்டில் புடவை எடுத்துக் கொள்கின்றனர். பத்தாயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாண்டியன் கூற, பரவாயில்லை மாமா ஒரு நாளைக்கு தானே போடப் போகிறோம் என்று மீனா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் பாண்டியன் மிகப்பெரிய அளவில் சந்தோஷமடைகிறார்.
ரெஸ்டாரெண்டிலும் அழிச்சாட்டியம்: தொடர்ந்து சாப்பிட்டு போங்கள் என்று பாண்டியன் சம்பிரதாயத்திற்காக கூற, பாக்கியம் பெண் வீட்டாரருக்கு ஜவுளி எடுத்துக் கொடுத்து சாப்பிட வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் முறை என்று கூறிவிட்டு உடனே சாப்பிட கிளம்புகிறார். பெரிய ரெஸ்டாரெண்டிற்கு தங்கமயிலின் அப்பா அழைத்து செல்கிறார். அங்கு பாண்டியன் தங்க மயிலை அனைவருக்கும் ஆர்டர் கொடுக்குமாறு கூற, அவரும் சிறிதும் பொறுப்பில்லாமல் 11 பேர் இருக்கும் சூழலில் 11 மட்டன் பிரியாணி, 11 பிரைட் ரைஸ், 11 கலக்கி, 11 சிக்கன் 65 பிளேட் என அடுக்குகிறார். அதை பார்த்து பாண்டியன் முழிக்கிறார்.

கைக்கொடுக்கும் மீனா: தொடர்ந்து அவர் மீனாவை பார்க்க மீனா களத்தில் இறங்குகிறார். 11 பேருக்கும் பிரியாணி ஆர்டர் செய்தால் அத்தனையும் வேஸ்ட் ஆகும் என்று கூறும் மீனா, நான்கு பிரியாணி, நான்கு ப்ரைடு ரைஸ் என அனைத்தையும் பாதிக்கும் கீழாக குறைக்கிறார். தொடர்ந்து அனைவரும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு லஞ்சை முடிக்கின்றனர். ஆனாலும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காத பாக்கியம், காசு அதிகம் என்று யோசிக்கிறீர்களா சம்பந்தி, நாங்கள் வேண்டுமானால் கொடுக்கிறோம் என்று கூறுகிறார். பாண்டியனோ உணவை வீணடிக்க கூடாது என்று கூறி சமாளிக்கிறார். உணவு ஐட்டங்களை குறைத்ததை தங்க மயிலும் அவரது அம்மாவும் கடுப்புடன் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
3 லட்சத்து 28 ஆயிரம்: தொடர்ந்து வீடுவரும் பாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் செலவானதை கணக்கு போடுகிறார். அவர் ஜவுளி எடுக்க கிளம்புவதற்கு முன்னதாக ஒரு லட்சம் பட்ஜெட் போட்ட சூழலில் தற்போது மூன்று லட்சத்து 28 ஆயிரத்து சொச்சம் என மொத்த செலவு ஆனதை அவர் கணக்கு போட்டு பார்க்கிறார். இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. அவரை பார்க்கும் போது மிகவும் பாவமாக இருப்பதாகவும் ஆனால் காமெடியாக இருப்பதாகவும் கதிர் கலாய்ப்பதாகவும் பாவம்டா அப்பா என்று செந்தில் கூறுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











