பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: நீங்கதான் எங்களோட பெரிய பலம்.. மீனா -ராஜிக்கு அம்மாவாக மாறிய கோமதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து பல மாதங்களை கடந்து மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை மிகவும் சிறப்பாக கவர்ந்துள்ளது. ராஜியின் ஹோம் டியூஷன் விவகாரத்தில் அவரது அப்பா மற்றும் சித்தப்பாவிடம் அவமானப்பட்ட பாண்டியன் ராஜி மற்றும் இந்த விஷயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த மீனாவிடம் பேசாமல் ஒதுக்கி வைக்கிறார்.

குடும்பத்தினர் அனைவரும் அவர்களை ஒதுக்கி வைத்த நிலையில், தங்கமயில் உதவியுடன் கோமதியை சமாதானம் செய்கின்றனர் ராஜி மற்றும் மீனா. தங்கமயில் நல்லவரா கெட்டவரா என்பதாக அவரது நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தொடர்ந்து தன்னுடைய அம்மா பாக்கியத்தின் அட்வைசுடன் மீனா மற்றும் ராஜி குறித்து நெகட்டிவ்வாக யோசிக்கிறார் தங்கமயில்.

television pandian stores 2 serial vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள் காணப்பட்டன. ராஜி மற்றும் மீனா இருவரும் மொட்டைமாடியில் பேசிக் கொண்டிருக்க அங்கு டீ எடுத்துக் கொண்டுவரும் தங்கமயில் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து ராஜி விவகாரத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தற்போது பேசாமல் இருப்பது குறித்து ராஜி வேதனையை வெளிப்படுத்த, கோமதி பேசியதை போலவே அனைவரும் விரைவில் பேசுவார்கள் என்று தங்கமயில் ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து தங்கமயில் -சரவணனின் சென்னை ஹனிமூன் மற்றும் அவர் அனுப்பிய புகைப்படங்கள் குறித்து ராஜி மற்றும் மீனா கலாய்க்கத் துவங்க, அங்கிருந்து தங்கமயில் எஸ்கேப் ஆகிறார்.

சரவணன் திண்டாட்டம்: இதனிடையே, தன்னுடைய தம்பிகள் ஹோட்டலுக்காக ஏற்பாடு செய்துக் கொடுத்த 20 ஆயிரம் ரூபாயை திரும்பக் கொடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் சரவணன். இதனிடையே அங்குவரும் தங்கமயில், தன்னுடைய நகைகளை கொடுப்பதாக ஒப்புக்கு சொல்கிறார். ஆனாலும் தன்னுடைய போலி நகைகளை எப்படி கொடுப்பது என்ற உதறல் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நினைத்தபடி சரவணன், தன்னுடைய மனைவியின் நகைகளை வாங்க மாட்டேன் என்று உறுதியுடன் கூறுகிறார். இதையடுத்து தங்கமயிலுக்கு போன் செய்யும் அவரது அம்மா இந்த விஷயத்தில் அவரை மீண்டும் தவறாக வழிநடத்துகிறார்.

சம்பளத்தை யாரிடம் கொடுக்கவேண்டும்?: கடையில் வேலை செய்யும் சரவணன், முழு சம்பளத்தையும் தன்னுடைய அப்பாவிடம் திருமணத்திற்கு முன்னதாக கொடுத்திருக்கலாம், ஆனால் தற்போது திருமணமான நிலையில், அவர் தங்கமயிலிடம்தான் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று பாக்கியம் கூறுகிறார். இதனிடையே போலி நகைகள் குறித்து தங்கமயில் மீண்டும் அச்சத்தை வெளிப்படுத்த, 20,000 ரூபாய் கூட இல்லாமல் திண்டாடும் சரவணனுக்கு போலி நகைகள் போதும் என்று பாக்கியம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

ராஜிக்கு சப்போர்ட் செய்யும் கோமதி -மீனா: இந்நிலையில் தன்னிடம் பேசாத கதிருடன் ஒரே ரூமில் தூங்காமல் மீனாவுடன் வந்து தூங்க முயல்கிறார் ராஜி. ஆனால் ரூமில் செந்தில் தூங்கிக் கொண்டிருக்க ராஜி தனியாக ஹாலில் வந்து படுத்துக் கொள்கிறார். இதைப் பார்க்கும் கோமதியும் அவருடன் வந்து தூங்குகிறார். இதனிடையே மீனாவும் ராஜியுடன் தூங்க வருகிறார். இந்நிலையில், அவர்கள் குடுமபத்தினருடன் சேர்வது குறித்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசிக் கொள்கின்றனர். இதனிடையே, அவர்கள் அம்மாவுடன் சேரும்வரையில் தன்னை அம்மாவாக நினைத்துக் கொள்ளும்படி கோமதி கூறுகிறார். அவர்தான் தங்களின் பலம் என்று கூறும் ராஜி மற்றும் மீனா இருவரும் அவரது தோளில் சாய்ந்துக் கொள்கின்றனர்.

பாண்டியன் ஆதங்கம்: இதனிடையே, தன்னுடைய அப்பாவின் அவமானத்திற்கு காரணமான ராஜி மற்றும் மீனாவிடம் கதிர் மற்றும் செந்தில் பேசாமல் இருப்பது குறித்து அவர்களிடம் பேசுகிறார் கோமதி. அவர்களின் பெற்றவர்களின் சப்போர்ட் இல்லாத நிலையில், கதிர் மற்றும் செந்தில்தான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று கோமதி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில், ஆபிசிற்கு செல்வதற்கு முன்னதாக வாசலில் இருக்கும் பாண்டியனிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார் மீனா. ஆனால் அவரிடம் தொடர்ந்து கோபமாக இருக்கும் பாண்டியன், ஒன்றும் செல்லாமல் உள்ளே செல்வதாகவும் பின்னர், மீனா செல்வதை அவர் ஆதங்கத்துடன் பார்ப்பதாகவும் இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X