Pandian stores 2 serial: நிச்சயதார்த்த புடவை எடுக்க சென்ற பாண்டியன் குடும்பத்தினர்.. தலைகீழான கடை!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தற்போது இயல்பான கதைகளத்தில் பயணித்து வருகிறது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் பெண் கிடைக்காமல் சரவணனுக்கு மிகவும் பிரச்சினையாக இருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலில் இருந்தனர். இந்நிலையில் கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் அவருக்கு தங்கமயில் என்ற பெண்ணை பாண்டியன் குடும்பத்தினர் பிக்ஸ் செய்கின்றனர்.
இந்நிலையில் திருமணத்தை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்று தங்கமயிலின் அம்மா பாக்கியம், அடுத்தடுத்து பொய்களை அடுக்கி வருகிறார். இதனால் தங்கமயில் இந்த திருமணம் நடக்குமா என்று கவலையில் இருக்கிறார். இதனிடையே இன்றைய தினம் சரவணன் மற்றும் தங்கமயில் நிச்சயதார்த்தத்தை ஒட்டி புடவை மற்றும் மற்றவர்களுக்கும் டிரஸ் எடுக்க பாண்டியன் குடும்பத்தினர் ஜவுளி கடைக்கு செல்வதாக காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து இயல்பான கதைகளத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்த சூழலில் கோமதி அண்ணன்கள் தற்போது வரை பகைமை பாராட்டி வருவதை பார்க்க முடிகிறது. கோமதி மற்றும் பாண்டியன் குடும்பத்தினரை தொடர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு அவர்கள் உள்ளாக்கி வருகின்றனர்.
சரவணன் -தங்கமயில் திருமணம்: இந்நிலையில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் சரவணனின் திருமணம் கேள்விக்குறியானது. இந்நிலையில் அவருக்கு ஃபிக்ஸ் ஆகும் திருமணங்களை சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் அடுத்தடுத்து சதி செய்து குலைத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய மகன் சரவணனுக்கு திருமணத்தை பாண்டியன் நிச்சயம் செய்கிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குறித்து பாண்டியன் மிகவும் உயர்வாக நினைத்து வரும் சூழலில் அவர்கள் அடாவடி குடும்பத்தினராக காணப்படுவதை பார்க்க முடிகிறது.

மனஉளைச்சலில் தங்கமயில்: இந்நிலையில் தங்கமயிலை பாண்டியன் குடும்பத்தினர் நேரில் சென்று பெண் பார்த்து திரும்புகின்றனர். தொடர்ந்து தன்னுடைய மகளுடன் சரவணனை பேச வைக்கிறார் பாக்கியம், முதலில் தயங்கினாலும் பின்னர் சரவணனிடம் இயல்பாக பேசுகிறார் தங்கமயில். ஆரம்பத்தில் அவருக்கு சரவணனை பிடிக்காத சூழல் காணப்பட்டது. ஆனால் பெண் பார்க்கும்போது அவரை நேரில் பார்த்து பேசிய தங்க மயிலுக்கு சரவணனையும் அவரது குணத்தையும் மிகவும் பிடித்து போகிறது. ஆனால் தன்னுடைய அம்மா தன்னையும் தங்களது குடும்பத்தினரையும் உயர்த்தும் வகையில் அடுத்தடுத்த பொய்களாக அடுக்குவது அவருக்கு மன உளைச்சலை கொடுக்கிறது.
நிச்சயதார்த்த புடவை பர்ச்சேஸ்: இந்நிலையில் நிச்சயதார்த்தம் மறுநாள் நடக்க உள்ள சூழலில் தற்போது பாண்டியன் குடும்பத்தினர் நிச்சயதார்த்த புடவை மற்றும் மற்றவர்களுக்கும் துணிமணிகள் எடுப்பதற்காக ஷாப்பிங் செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அங்கு பல மணி நேரம் பெண்கள் மட்டுமே ஷாப்பிங் செய்வதை பார்க்க முடிந்தது. ஒருவருக்கு பிடித்தால் மற்றவருக்கு பிடிக்காத சூழல் காணப்படுகிறது. இதனால் பாண்டியன், கதிர் மற்றும் சரவணன் தனியாக சென்று உட்கார்ந்து கொள்கின்றனர். இவை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் பெண்கள் புடவையை தேர்ந்தெடுக்கும் மும்முரத்தில் காணப்படுகின்றனர்.
கதிர் -ராஜியிடையே மலரும் காதல்: இதனிடையே தற்போது இந்த சீரியலின் அடுத்த பிரமோ வெளியாகியுள்ளது. அதில் கதிருக்கு உணவு பரிமாறுவதற்காக கோமதி காத்திருக்கிறார். அவர் தூங்கி வழியும் சூழலில் தான் பார்த்துக் கொள்வதாக ராஜி அவரை சென்று தூங்க சொல்கிறார் இதையடுத்து கதிர் வந்தால் முட்டை ஆம்லெட் போட்டு தருமாறு கோமதி சொல்கிறார். இதே போல கதிர் வந்தவுடன் அவருக்கு உணவு பரிமாறும் ராஜி முட்டை ஆம்லெட் போட்டுக் கொடுக்கிறார். சாப்பிட்டு முடிக்கும் கதிர், தனக்காக காத்திருந்து உடலை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து மொட்டை மாடியில் தூங்க செல்லும் கதிருக்கு தலைகாணி வைத்து மற்றும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அவருக்கு பெட்ஷீட் போர்த்தி விட்டு வருகிறார் ராஜி. கல்யாணத்துக்கு முன்னதாக இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக காணப்பட்ட சூழலில் ஒரு நெருக்கடியின் காரணமாகவே இருவருக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











