மனம் மாறிய பாண்டியன்.. வீராப்பு காட்டும் கதிர் & ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர், முந்தைய சீசனை போலவே தொடர்ந்து சேனலின் இரண்டாவது இடத்தில் அதிக டிஆர்பி புள்ளிகளுடன் மாஸ் காட்டி வருகிறது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக கொண்ட இந்த தொடர் தற்போது அப்பா -மகன்களின் உறவை மையப்படுத்தி வருகிறது.
முதல் சீசனில் நடித்த ஸ்டாலின், ஹேமா, வெங்கட் உள்ளிட்டவர்கள் இந்த சீசனிலும் களமிறங்கியுள்ளனர். முதல் சீசனில் ஜோடியாக நடித்த வெங்கட் மற்றும் ஹேமா இந்த சீசனிலும் செந்தில் மற்றும் மீனா என்ற கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சீரியலில் பாசம் அதிகமாக இருந்தாலும் குடும்பத்தினரிடம் கறார் காட்டுகிறார் பாண்டியன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களால் கவனம் பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டு இந்த சீரியலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. முதல் சீசனில் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த கதைக்களங்களை கொடுத்த இந்த சீரியல், தற்போது இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையிலான பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கதிர்: பாண்டியன் மற்றும் கோமதி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் மீது பாண்டியன் காட்டும் அக்கறை, பாசம், அன்பு கறார் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த சீரியல் வெளிப்படுத்தி வருகிறது. நம் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் தொகுப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருப்பதால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது. தற்போது பொய்யான புகாருக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கதிர் அங்கு அடியும் வாங்கிவிட்டு தன் மீதான குற்றம் பொய் என்று நிரூபிக்கப்பட்டதால் வீட்டிற்கு வருகிறார்.
கதிரை தடுக்கும் கோமதி: அவருக்காக குடும்பத்தினர் அனைவருமே கவலைப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த மறுதினமே தான் கல்லூரிக்கு செல்ல உள்ளதாக கதிர் கூறுகிறார். இதை மறுக்கும் ராஜி அவனுக்காக தான் கல்லூரிக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் அவன் எப்படி போகலாம் என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து உடல்நிலை சரியாகும். வரை கல்லூரிக்கு போக வேண்டாம் என்று தடுக்கிறார். ஆயினும் கதிர் கேட்காத நிலையில் தன்னுடைய மாமியார் கோமதியிடம் சென்று அதை கூறுகிறார். இதையடுத்து கோமதி அடுத்தடுத்து பேசி கதிரை கல்லூரிக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்.
கறார் காட்டும் கதிர்: ஒரு கட்டத்தில் வேலைக்கும் போக வேண்டாம் என்றும் கோமதி கூறுகிறார். முன்னதாக பாண்டியனே இதை கூறிய நிலையில் அதை தற்போது கதிரிடம் கோமதி கூறுகிறார். ஆனாலும் தான் ஒப்புக்கொண்டபடி தன்னுடைய அப்பாவிற்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் கண்டிப்பாக கொடுப்பேன் என்று கதிர் கூறுகிறார், இதைக் கேட்கும் ராஜி கதிர் வேலைக்குப் போக வேண்டாம் என்றும் தான் வேலைக்கு போய் அந்த பத்தாயிரம் ரூபாயை கொடுப்பதாகவும் கூற, இவ்வளவு கறார் காட்ட வேண்டாம் என்று கோமதி அவர்களிடம் கூறுகிறார். பாண்டியன் கோபத்தில் கூறியதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு இருவரும் செயல்படுவதை சுட்டிக்காட்டும் கோமதி, இது என்ன சினிமாவா என்றும் கேட்கிறார்.
மீனாவை சந்திக்கும் அவரது அம்மா: இதனிடையே மீனாவை அவரது அலுவலகத்தில் வந்து அவருடைய அம்மா சந்திக்கிறார். அவர்கள் வீட்டில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பும் அவருக்கு நடந்ததை விளக்கமாக கூறுகிறார் மீனா. ஒரு கட்டத்தில் தன்னுடைய மாமியார் சமைத்துக் கொடுத்ததை கொடுத்து அம்மாவை சாப்பிட வைக்கிறார் மீனா. மேலும் அவர் நினைப்பது போல இல்லை என்றும் தான் தன்னுடைய புகுந்த வீட்டில் 100 மடங்கு சந்தோஷமாக இருப்பதாகவும் மீனா கூறுகிறார். இதைக் கேட்டு அவரது அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











