Pandian stores 2 serial: மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்காதீங்க.. மீண்டும் குட்டையை குழப்பிய தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தங்கமயில் மூலமாக ராஜி ஹோம் டியூஷன் விவகாரம் பாண்டியனுக்கு தெரிய வர அவர் வழக்கம் போல வீட்டிற்கு வந்து அனைவரையும் திட்டித் தீர்க்கிறார். குறிப்பாக மீனா வந்ததற்கு பிறகு தான் இந்த வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

பாண்டியன் திட்டியதால் மீனா மனமுடைந்து அழுகிறார். அவரை செந்தில் சமாதானப்படுத்துவதாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை நினைத்து அழும் ராஜியையும் கதிர் சமாதானப்படுத்தி அவர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதனிடையே இந்த பிரச்சனைகளுக்கு தங்கமயில்தான் காரணம் என்பதை தெரிந்துகொள்ளும் மீனா மற்றும் ராஜி அவரிடம் நேரில் சென்று மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறுவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் கலக்கலாக அதே சமயம் பரபரப்பாக காணப்பட்டது. மீனா சிபாரிசில் ராஜி ஹோம் டியூஷன் எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறார். முன்னதாக வீட்டில் வைத்து ராஜி டியூஷன் எடுப்பதற்கு எடுப்பது குறித்து தங்கமயில் மூலம் தெரிந்து கொண்ட பாண்டியன், வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடியதை பார்க்க முடிந்தது. மீனா, ராஜி, கோமதி என அனைவருக்கும் சரமாரியாக திட்டு விழுந்தது. இந்நிலையில் வீட்டில் தானே டியூஷன் எடுக்கக்கூடாது என்று மீனா கொடுத்த அறிவுரையில் ராஜியும் ஹோம் டியூஷன் எடுக்க திட்டமிடுகிறார்.

ருத்ரதாண்டவம் ஆடும் பாண்டியன்: இந்த விஷயத்தை கோமதியிடம் கூறி அவர் தான் பக்குவமாக மாமாவிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று மீனாவும் ராஜியும் கேட்கின்றனர். இதை பக்கத்தில் இருந்து தங்கமயிலும் தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தங்கமயிலிடம் ராஜி தயவுசெய்து மாமாவிடம் இந்த விஷயத்தை கூறிவிடாதீர்கள் என்று கெஞ்சலாக கேட்கிறார். ஆனாலும் தான் செய்வதை தான் செய்வேன் என்பதாக தங்கமயில் கோயிலில் இருந்து வரும்போது வழியில் பாண்டியனை பார்த்து அவரிடம் ராஜி ஹோம் டியூஷன் எடுக்கப் போகும் விவகாரத்தை கூறிவிடுகிறார். இதனால் மீண்டும் கோபம் தலைக்கேற வீட்டிற்கு வந்து அனைவரையும் திட்டுகிறார் பாண்டியன்.

மனமுடைந்து அழும் மீனா: குறிப்பாக மீனா இந்த வீட்டிற்கு வந்ததற்கு பிறகுதான் இந்த வீட்டில் யாருமே தன்னுடைய பேச்சை கேட்பதில்லை என்பதாக பாண்டியன் மீனாவை குறிப்பிட்டு பேசுகிறார், மேலும் கோமதி மற்றும் ராஜிக்கும் அதிகமான திட்டுக்கள் விழுகின்றன. ராஜி இந்த விஷயத்தில் மீனாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் திட்டுவதானால் என்னை திட்டுங்கள் என்றும் பாண்டியனிடம் கூறுகிறார். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீனாதான் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் என்று திட்டி விட்டு செல்கிறார். இதனால் மீனா மனமுடைந்து அழுகிறார்.

தங்கமயிலிடம் ஆத்திரம்: இதனிடையே இன்றைய எபிசோடில் கோமதியிடம் வரும் மீனா, அந்த வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தான்தான் காரணமா என்று கேட்டு கண்கலங்குகிறார். அவரை சமாதானப்படுத்தும் கோமதி ஒவ்வொரு மருமகளும் வீட்டிற்கு வந்தவுடன் தனிக்குடித்தனம் செல்ல அடம் பிடிக்கும் நிலையில் மீனா அதுபோல இல்லாமல் மிகவும் அன்புடன் அனைவரையும் அனுசரித்து செல்வதாக கூறுகிறார். இதையடுத்து இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரிய தங்கமயில்தான் காரணம் என்பதை யூகிக்கும் ராஜியும் மீனாவும் அவரிடம் இதுகுறித்து கேட்க செல்கின்றனர். இதையடுத்து மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள் என்று அவர்கள் தங்கமயிலிடம் கண்டிப்பாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

குழம்பிய குட்டையில் மீன்: முன்னதாக தன்னுடைய அம்மா பாக்கியத்திடம் பேசும் தங்கமயில் வீட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட தான் காரணமாகி விட்டதாக கூறுகிறார். ஆனாலும் தன்னை எப்போதும் வம்பிழுக்கும் மீனாவும் ராஜியும் திட்டு வாங்கியதை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது என்றும் கூறுகிறார். தொடர்ந்து பேசும் பாக்கியம், குட்டையை குழப்பியாயிற்று, அதில் மீன்பிடிப்பது தங்கமயிலின் சாமர்த்தியம் என்பதாக அறிவுரை கூறுகிறார். தொடர்ந்து பாண்டியனின் நன்மதிப்பை பெற்று அந்த வீட்டின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் தன்னுடைய மகளுக்கு பாக்கியம் ஆலோசனை வழங்குவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X