Pandian stores 2 serial: வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சிக்கலில் தங்கமயில்.. சந்தேகத்தில் மீனா!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் புகும் திருடன் பின்கட்டில் இருந்த பித்தளை வாளியை திருடிக் கொண்டு போகிறான். இதனால் வீட்டில் அனைவரது நகைகளும் கிலோ கணக்கில் இருக்கும் சூழலில் அவைகளை பாதுகாக்கும் விஷயம் குறித்து அனைவரும் பேசுகின்றனர்.

அப்போது கோமதியின் லாக்கரில் அனைத்து நகைகளையும் வைக்குமாறு பாண்டியன் கூறுகிறார். இதனிடையே அடகு கடையில் வைத்தால் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று பழனிவேல் கூற இதை கதிர் உள்ளிட்டவர்கள் பாராட்டுகின்றனர். இதனிடையே இது குறித்து கேட்கும் தங்க மயிலுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. தன்னுடைய நகைகள் போலி என்பது தெரிந்து விடுமோ என்று அவர் நடுங்குகிறார்.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினம் செந்திலும் மீனாவும் இணைந்து சென்னை செல்வது குறித்து பாண்டியனிடம் பேசுகிறார் கோமதி. அவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் அவர்கள் தனியாக எங்கேயும் போனதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் சினிமாவிற்கு போனதாகவும் கொடைக்கானலுக்கு சென்றதாகவும் பாண்டியன் பதிலுக்கு சொல்கிறார். ஆனால் ஒரே ஒரு சினிமா பார்த்துள்ளதாகவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்று, மருத்துவமனையில் தான் அதிகமாக செலவிட்டதாகவும் கோமதி மேலும் கூறுகிறார்.

வீட்டிற்குள் புகுந்த திருடன்: செந்தில் -மீனா சென்னை செல்வது குறித்து தான் யோசிப்பதாக பாண்டியன் கூறுகிறார். இந்நிலையில் பின்வாசலில் பழனிவேல் யாரையோ துரத்திக் கொண்டு செல்வதாக காணப்படுகிறது. தொடர்ந்து அவர் உள்ளே வர அனைவரையும் ஒவ்வொருவர் கதவைத் தட்டி எழுப்பி விடுகிறார். வீட்டிற்குள் திருடன் வந்து விட்டதாக பழனிவேல் தொடர்ந்து கூற, பாண்டியன் தூக்கத்தில் உலறுகிறாயா என்று கேட்கிறார். இதனிடையே பழனிவேல் தான் திருடனை பார்த்ததாகவும் துரத்தி செல்வதற்குள் அவன் ஓடி விட்டதாகவும் கூறுகிறார். தொடர்ந்து கதிர், செந்தில் என அனைவரும் சென்று தேடுகின்றனர்.

திருடுபோன வாளி: ஆனால் திருடன் அகப்படாத நிலையில் அவன் எந்த பொருட்களை திருடிக் கொண்டு போனான் என்று பேசுகின்றனர். வீட்டிற்குள் கதவு மூடி இருந்த சூழலில் அவன் வீட்டிற்குள் வரவில்லை என்பதை உறுதி செய்து விட்டு அனைவரும் தூங்க செல்கின்றனர். மறுநாள் காலை பின்கட்டில் வைத்திருந்த தன்னுடைய பித்தளை வாளி காணாமல் போனதை உறுதி செய்கிறார் கோமதி. தொடர்ந்து தன்னுடைய வாளியை திருடிக் கொண்டு சென்றதுடன் குடத்தை உடைத்து விட்டு சென்றது குறித்து மிகுந்த வருத்தத்துடன் அனைவரிடமும் கோமதி கூறுகிறார். தன்னுடைய திருமணத்தின் போது வாங்கிய வாளி என்றும் இத்தனை நாட்கள் அது தன்னுடன் இருந்ததாகவும் கோமதி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார்.

நகைகள் குறித்த கேள்வி: இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நகைகள் அனைத்தையும் எடுத்துச் செல்லாமல் விட்டானே என்று அனைவரும் தங்களை சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். இதனிடையே வீட்டில் உள்ள நகைகளை பாதுகாப்பது குறித்து பேச்சு வருகிறது. அப்போது அனைத்து நகைகளையும் கோமதியின் லாக்கரில் கொண்டு சென்று வைக்குமாறு பாண்டியன் கூறுகிறார். இதனிடையே குறுக்கில் பேசும் தங்கமயில், தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தன்னுடைய அம்மாவின் பெயரிலும் லாக்கர் இருப்பதாகவும் தன்னுடைய நகைகளை தான் அதில் வைப்பதாகவும் கூறுகிறார்.

பழனிவேல் திட்டம்: ஆனால் பாண்டியன், கோமதியின் லாக்கரில் ஒரே இடத்தில் அனைவரது நகைகளையும் வைக்குமாறு கூறுகிறார். இதனிடையே பேங்க் லாக்கரில் வைத்தால் நகைகள் தொலைந்து போனால் அது குறித்து சரியாக ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார்கள் என்றும் நகைகளை வைப்பதற்கு தாங்கள் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும் என்றும் கூறும் பழனிவேல், அனைத்து நகைகளையும் அடகுக் கடையில் வைத்து பணம் வாங்கினால் அதை வைத்து நிலம் வாங்கி விட்டு, மாதாமாதம் நகைகளுக்கு வட்டி கட்டி கொள்ளலாம் என்று ஆலோசனை கூறுகிறார். இது சரியான திட்டமாக இருக்கிறதே என்று கதிர் உள்ளிட்டவர்கள் பாராட்டுகின்றனர்.

பயத்தில் தங்கமயில்: இதனிடையே அடகு கடையில் தன்னுடைய நகைகளை வைத்தால் அவை போலியானவை என்பது தெரிந்து விடுமே என்று பயத்தில் தங்கமயில் நடுங்குகிறார். அவரது முகம் சஞ்சலமாக இருப்பதை மீனா பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஏற்கனவே தங்கமயில் மற்றும் அவரது குடும்பம் குறித்து மீனாவிற்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வரும் சூழலில் தற்போது பழனிவேல் கூறிய ஐடியாவிற்கு தங்கமயில் நடுங்குவதை மீணா பார்த்து விடுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X