Pandian stores 2: திருட்டுக் கல்யாணம் செய்தபோது அண்ணன் மீது பாசம் இல்லையா.. வெளுத்துவாங்கிய பாண்டியன்
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் குறுகிய காலத்திலேயே இடம் பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். பாண்டியன், கோமதி அவர்களது மூன்று மகன்கள் மற்றும் இரண்டு பெண்கள் இவர்களை சுற்றியும் கோமதியின் அண்ணன்களை சுற்றியும் இந்த சீரியலின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது 28 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை காதலித்து கோமதி திருமணம் செய்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர்களை கோமதியின் அண்ணன்கள் ஏற்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் கோமதி செய்த அதே தவறை ராஜி செய்கிறார். திருமணத்தின்போது தன்னுடைய காதலன் கண்ணனுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ராஜியின் பணம் மற்றும் நகைகளை அவருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்து எடுத்து வரும் கண்ணன் ஒரு கட்டத்தில் தான் பணத்திற்காக தான் ராஜியை காதலித்ததாக உண்மையை கூறுகிறார். மேலும் தான் எடுத்து வந்த பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு ராஜியை நடுத்தெருவில் விட்டு விட்டு ஓடி விடுகிறார். இதனால் தற்கொலைக்கு முயலும் ராஜியை காப்பாற்றி தன்னுடைய மகன் கதிருக்கு திருமணம் செய்து வைக்கிறார் கோமதி. இதனால் அவரது குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியல் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பாண்டியன், கோமதி உள்ளிட்ட அனைவரும் மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே மீனா மூலம் ஒரு வரன் வருகிறது. குடும்பத்துடன் அனைவரும் அந்த பெண்ணை பார்க்க சென்ற நிலையில் பெண் வீட்டாருக்கு போன் செய்யும் ராஜியின் சித்தப்பா சக்திவேல், அந்த திருமணத்தை நிறுத்துகிறார். சரவணனுக்கு உடலளவில் குறைபாடு இருப்பதாகவும் அதனால்தான் அவரது தம்பிகள் திருமணம் முன்னதாக நடந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தடைபடும் சரவணன் திருமணம்: இதனால் இந்த சம்மந்தமும் நிற்கிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். மீனா இந்த விஷயத்தில் பெண் வீட்டாரிடம் சரியாக பேசாததால் தான் இந்த திருமணம் நின்றதாக செந்தில் அவரிடம் கோபப்படுகிறார். தங்களது திருமணத்தால்தான் இந்த பிரச்சனை துவங்கியதாகவும் அவர் மீனாவிடம் சண்டை பிடிக்கிறார். மீனாவிற்கு அவரது அப்பா உடனடியாக திருமணம் செய்ய முயற்சித்ததால் தான் தங்களது திருமணம் உடனடியாக நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் மீனா நினைத்திருந்தால் அவரது அப்பாவை கன்வின்ஸ் செய்திருக்கலாம் என்றும் செந்தில் குற்றம் சாட்டுகிறார்.

முற்றும் செந்தில் -மீனா சண்டை: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மீனாவும் செந்தில் தன்னுடைய அப்பாவை கூட்டி வந்து பேசாமல் தம்பியை கூட்டி வந்து பேசியதுதான் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் என்று கோபத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இதனால் அவர்களுக்குள் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனிடையே முன்னதாக அனைவரும் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் போது சரவணனை சமாதானப்படுத்தும் நோக்கில் கதிர் மற்றும் செந்தில் இருவரும், சரவணனுக்கு பார்த்த பெண் அவருக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறுகின்றனர்.
வெளுத்து வாங்கும் பாண்டியன்: இதைக் கேட்டுக் கொண்டு அங்கு வரும் பாண்டியன், அண்ணனின் வாழ்க்கை மீது அதிகமான அக்கறை கொண்டவர்கள் போல இருவரும் நடிப்பதாக குற்றம் சாட்டுகிறார். தாங்கள் திருமணம் செய்த போது சரவணன் குறித்து சிறிது யோசித்து இருந்தால் அப்படி நடந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கோபத்துடன் பேசுகிறார். இதனால் செந்தில் -மீனா மற்றும் கதிர் -ராஜி என அனைவரது முகங்களும் மாறுகிறது. இதை பார்க்கும் கோமதி சாப்பிடும்போது ஏன் இப்படி பேச வேண்டும் என்று பாண்டியனை சமாதானப்படுத்துகிறார். இதனிடையே வீட்டு வாசலில் பாண்டியன் சோகமாக நின்றபடி இருக்கிறார். அவரது சோகத்திற்கான காரணம் தெரிந்தும் அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் கோமதி திகைப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











