Pandian stores 2 serial: மீனாவை அடக்கி வை.. தங்கமயிலுக்கு பாடம் எடுத்த பாக்கியம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினம் சரவணன் திருமணத்திற்காக பாண்டியன் குடும்பத்தினர் தயாராவதாக காணப்பட்டது. வீட்டு வாசலில் பந்தல், வாழைமரம், தோரணம் ஆகியவை கட்டுவதற்கு அனைத்து பொருட்களும் வந்து இறங்குகின்றன. அந்த பொருட்களை பார்த்து சந்தோஷப்படும் பாண்டியன் தெருமுனை வரை லைட்டிங் இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கூறுகிறார்.

மேலும் பகலா இரவா என்று அனைவரும் யோசிக்கும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் பாண்டியன் மகிழ்ச்சியுடன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மேலும் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரனை வெறுப்பேற்றும் வகையிலும் அவர் தொடர்ந்து பேசுவதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது..

Vijay TV s Pandian stores 2 serial today 11th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தையொட்டி பாண்டியன் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் ஜவுளி எடுக்க சென்றிருந்த சூழலில் முன்னதாக அனைவருக்கும் சேர்த்து ஜவுளி எடுக்க ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட் போட்டு இருந்தார் பாண்டியன். ஆனால் தங்க மயிலுக்கு முகூர்த்த புடவையே ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டதால் செலவு மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது.

அப்செட்டான பாண்டியன்: இதனால் பயங்கர அப்செட்டில் பாண்டியன், குடும்பத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக தன்னுடைய மனைவி கோமதியிடம் புலம்பி தீர்க்கிறார். இதையடுத்து அவரை மேலும் பயமுறுத்தும் வகையில் குடும்பத்தினர் அனைவரும் ஜவுளி செலவுக்கே அவர் இடிந்து போய்விட்டதை சுட்டிக்காட்டி, இன்னும் பந்தல் செலவு, சாப்பாட்டு செலவு, மண்டப செலவு என ஒவ்வொன்றாக அடுக்குகின்றனர். அவர் தொடர்ந்து தன்னை பயமுறுத்த வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் கேட்கிறார். இதையடுத்து பேசும் மீனா அரேஞ்சிடு மேரேஜ் செய்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது இல்லை மாமா என்று பாண்டியனை மறைமுகமாக கலாய்க்கிறார்.

கெத்தை விட்டுக் கொடுக்காத பாண்டியன்: இதனால் கடுப்பாகும் பாண்டியன் ஆனாலும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் செலவுகளை பார்த்தால் முடியுமா தன்னுடைய பிள்ளைகளுக்கு அதிகமாக செலவழித்து திருமணம் செய்வதுதான் பெற்றவர்களுக்கு சந்தோஷம் என்று கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய அறைக்கு செல்லும் மீனா அங்கு மீண்டும் செந்திலிடம் தங்கமயில் குடும்பத்தை குறித்து விமர்சிக்கிறார். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் பேராசையுடன் நடந்து கொள்வதாக சுட்டிக்காட்டுகிறார். தனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை என்று செந்தில் கூறுவதாகவும் காணப்பட்டது.

தங்கமயிலுக்கு பாக்கியம் அட்வைஸ்: இந்நிலையில் இது குறித்து தான் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு மீனா அங்கிருந்து வெளியேறுகிறார். இதையடுத்து தனக்குள் செந்தில், தங்கமயில் குடும்பத்தின் மீது இவளுக்கு என்ன அப்படி ஒரு கோபம் என்று யோசிக்கிறார். இதையடுத்து தங்கமயில் குடும்பத்தினர் ஜவுளி எடுத்துவிட்டு வீட்டுக்கு வருவதாக காட்டப்படுகிறது. தன்னுடைய மகளிடம் பேசும் பாக்கியம், மீனா அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்ததாகவும் அதனால் தங்கமயில் திருமணம் முடிந்து அங்கு சென்றவுடன் மீனாவை அடக்கி வைக்கும்படியும் ஓதுகிறார். என்ன தான் இருந்தாலும் மீனா கவர்மெண்ட் வேலையில் இருப்பவர் தனக்கு முன் திருமணம் செய்து கொண்டு வந்தவர் என தங்கமயில் கூற இருந்த போதிலும் அவளுடைய ஆதிக்கத்தை அந்த வீட்டில் குறைக்கவும் போதிக்கிறார்.

திருமண ஏற்பாடுகள்: இதனிடையே திருமண நாள் நெருங்குவதால் வீட்டின் முன்பு வாழைமரம், பந்தல், லைட்செட் என ஒவ்வொன்றாக வந்து இறங்குகிறது. அப்போது முத்துவேல், சக்திவேல், குமரன் ஆகியோர் வெளியில் வர அவர்களை கலாய்க்கும் விதமாக பாண்டியன் அடுத்தடுத்து பேசுகிறார். இதனால் கடுப்பாகும் சக்திவேல் திருமணம் முடியும் வரை தாங்கள் வெளியூர் சென்றுவிடலாம் என்று கூறுகிறார். அதற்கு முத்துவேல், தாங்கள் ஏன் போக வேண்டும் என்று கேள்வி எழுப்பவதாகவும் காணப்பட்டது. தொடர்ந்து இதை பார்த்துக் கொண்டிருக்கும் கதிர் லைட் செட் போடுபவரிடம் கருகும் வாடை வருகிறது என்று முத்துவேல் சக்திவேலை குறிப்பிட்டு கலாய்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X